உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாட்டில் இதுவே முதல்முறை: எஸ்ஐஆர் படிவத்தில் தவறான தகவல் தந்த குடும்பம் மீது வழக்கு

நாட்டில் இதுவே முதல்முறை: எஸ்ஐஆர் படிவத்தில் தவறான தகவல் தந்த குடும்பம் மீது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராம்பூர்: நாட்டிலேயே முதல் முறையாக எஸ்ஐஆர் படிவத்தில் தவறாக தகவல்களை அளித்தததாக பெண் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த சம்பவம் உ.பி.யில் நடைபெற்றுள்ளது.நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எனப்படும் எஸ்ஐஆர் பணிகள் வேகம் எடுத்துள்ளன. உண்மையான வாக்காளர் யார்? பல இடங்களில் உள்ள ஒரே வாக்காளரை அடையாளம் காணுதல், இடம்மாறிய மற்றும் உயிரிழந்த வாக்காளர்களை பற்றிய விவரங்களை அறிதல் போன்றவையே எஸ்ஐஆர் பணியின் நோக்கமாகும்.பீஹாரை தொடர்ந்து மேற்கு வங்கம், கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் வேகம் எடுத்துள்ளன. தேர்தல் கமிஷனின் எஸ்ஐஆர் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வரும் சூழலில் நாட்டிலேயே முதல்முறையாக எஸ்ஐஆர் விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்ததாக உ.பி. மாநிலம் ராம்பூரில் பெண் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.ராம்பூர் பகுதியைச் சேர்ந்த ஜூவாலா நகரில் வசிப்பவர் நூர்ஜஹான். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். அவர்களின் பெயர்கள் முறையே ஆமிர் கான், டானிஷ் கான் ஆகும்.இவர்கள், நீண்ட ஆண்டுகளாகவே துபாய் மற்றும் குவைத்தில் வசித்து வருகின்றனர். எஸ்ஐஆர் படிவத்தை நூர்ஜஹான் சமர்ப்பித்து உள்ளார். அதில் ஜூவாலா நகரில் அவர்கள் வசித்து வருவதாக நூர்ஜஹான் குறிப்பிட்டு உள்ளார். படிவத்தை சமர்ப்பித்த பின்னர், சம்பந்தப்பட்ட ஜூவாலா நகர் பகுதியில் தேர்தல் கமிஷனின் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் கள சரிபார்ப்பில் ஈடுபட்டனர். டிஜிட்டல் சரிபார்ப்பின் போது, நூர்ஜஹான் தந்த தகவல்கள் அனைத்தும் தவறானது என்பதை கண்டுபிடித்தனர். அதாவது, மகன்கள் ஜூவாலா நகரில் வசிப்பது போல குறிப்பிட்டு, இருவரின் கையெழுத்தையும் நூர்ஜஹானே போட்டு படிவத்தை சமர்ப்பித்துள்ளார். இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து தாய் நூர்ஜஹான் மற்றும் அவரின் இரு மகன்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது;நூர்ஜஹான் சமர்ப்பித்த எஸ்ஐஆர் படிவங்களை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் கள சரிபார்ப்பில் ஈடுபடுத்தினர்.அப்போது, ஆமிர் கான், டானிஷ் கான் இருவரும் வெளிநாடுகளில் இருப்பது கண்டறியப்பட்டது. வெளிநாடுகளில் மகன்கள் வசித்தாலும் உள்ளூரில் வசிப்பது போல் அவர்களின் தாய் கணக்கெடுப்பு படிவத்தில் தகவல்களை நிரப்பி, அவர்கள் போலவே கையெழுத்திட்டு உள்ளார்.இது 1950ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 31ஐ மீறுவதாகும். இந்த சட்டப்பிரிவின் படி ஒருவர் வாக்காளரின் நிலை குறித்து தவறான அறிவிப்பு அல்லது தவறான தகவலை வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும். மகன்கள் இருவர், தாயார் என 3 பேரும் வேண்டும் என்றே உண்மைகளை மறைத்து மோசடி செய்து இருக்கின்றனர். இது பிஎன்எஸ் 2023ன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த சம்பவம் குறித்து ராம்பூர் மாவட்ட கலெக்டர் அஜய்குமார் திவேதி கூறியதாவது; தலைமை தேர்தல் கமிஷன் வழிகாட்டுதல்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படுகிறது. தவறான தகவல்களுடன் படிவங்களை தாக்கல் செய்வது அல்லது உண்மைகளை மறைப்பது தேர்தல் விதிகளை கடுமையாக மீறுவதாகும்.இவ்வாறு கலெக்டர் அஜய்குமார் திவேதி கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Haja Kuthubdeen
டிச 08, 2025 16:37

வளைகுடா நாடுகளில் பல லட்சம் பேரு வேலை செய்து வருகிறார்கள். ஆண்டுக்கு சில மாத விடுமுறையில் வருவார்கள். அவர்களின் நிலை என்ன..ஓட்டளிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டா... கணக்கெடுப்பின் போது ஊரில் இல்லாதவர்களுக்கு அவர்களின் உறவு சொந்தம் கையெழுத்து இடலாம் என்ற தேர்தல் கமிசனின் வழிகாட்டு நெறிமுறையில் சொண்ணார்களே... வெளிநாட்டில் வசிக்கும் பலருக்கு சிறப்பு திருத்த வாக்காளர் பதிவில் அனுமதி இருக்கா???விசயம் தெரிந்தவர்கள் பதிவிடவும். முஸ்லிம் என்றாலே கண்ணை மூடி கருத்து போடுபர்களும் தங்கள் கருத்தை சொல்லவும்.


VENKATASUBRAMANIAN
டிச 08, 2025 08:06

இங்கே திமுக கூட்டம் இதை செய்திருக்கும். கண்காணிக்க வேண்டும்.


chennai sivakumar
டிச 08, 2025 08:06

இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் தண்டனைகளை மெதுவாக ஆனால் கடினமாக்கி விட்டால் நல்லது


R S BALA
டிச 08, 2025 08:04

இதேபோன்ற டபுள் ரோல் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார், சிலிண்டர் இணைப்பு என்று எல்லாமாநிலங்களிலும் குறிப்பாக NRI வசதியை பயன்படுத்தி சர்வசாதாரணமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.. தெரிந்தே அனுமதித்துக்கொண்டுதான் உள்ளார்கள் அதிகாரிகள்..


பேசும் தமிழன்
டிச 08, 2025 02:08

இல்லாத ஆளை இருப்பதாக சொல்வதும்.... இருக்கும் ஆளை இல்லை என்று சொல்வதும் தவறு தான்.... தவறான தகவல் அளித்த குற்றத்துக்கு தண்டிக்கப்பட வேண்டும்.


duruvasar
டிச 07, 2025 22:32

சென்ற தேர்தலில் இருவரும் ஒட்டு போட்டிருந்தார்களா , எந்தவருடத்திலிருந்து வெளிநாட்டுக்கு சென்றார்கள் என்ற விவரத்தை கூட அறியாமையால் கணக்கெடுக்க வந்தவரிடம் கூறாமல் விட்டிருப்பார்களோ சிட்டு குருவியாரே


Raj
டிச 07, 2025 22:16

அவங்க கல்லாத அறியாமையில் செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அந்தப் பெண் புள்ளி விவரக் கணக்கெடுப்பாளரிடம் தெரிவிப்பது போல தெரிவித்திருக்க வாய்ப்புள்ளது. அவரிடம் படிவம் தவறாக பூர்த்தி செய்துள்ளீர்கள் என எடுத்துச் சொல்லி அவர் அவருடைய மகன்களின் பெயர்களை நீக்க மறுத்தால் குற்றம். படிப்பறிவில்லாதவர்களுக்கு பிறருடைய பெயரை தாம் கையொப்பம் இட வேண்டிய இடத்தில் இடுவது குற்றம் எனப் புரிவதில்லை. தண்டனைக்குப் பதிலாக அதிகாரிகள் பொறுமையாக எடுத்துச் சொல்லி சரி பார்க்க வேண்டும். என்ன செய்வது. இன்னும் முழுக் கல்வியறிவு வரவில்லையே.


DEVA
டிச 07, 2025 23:27

இஸ்லாமியருக்கு எந்த கல்வி அறிவு இருக்கிறதோ இல்லையோ.. தேர்தல் குறித்து அறிவு நன்றாகவே இருக்கும். காங்கிரசுக்கு ஒட்டு போட்டு , இந்த நாட்டை அவடிக்கணும் என்ற அறிவும் இருக்கும் . வக்காலத்துக்கு வர வேண்டாம்


Ramesh Sargam
டிச 07, 2025 21:54

இதுபோன்று தவறான தகவல்கள் நாட்டின் பிற மாநிலங்களிலும் கொடுக்கப்பட்டிருக்கலாம். அப்படி கொடுத்தவர்கள் அனைவரும் நாடுகடத்தப்படவேண்டும்.


சிட்டுக்குருவி
டிச 07, 2025 21:50

இது அறியாமையால் ஏற்பட்ட நிகழ்வு .மகன்கள் வேறுநாட்டில் குடியிருந்தாலும் அவர்கள் அந்நாட்டின் பிரஜைகளில்லை .இந்திய நாட்டவரே .அதனால் அதை எப்படி நிரப்புவது என்ற வழிமுறை தெரியாமல் இருந்திருக்கலாம் .அல்லது அவரை தவறாக யாராவது அறிவுறுத்தி இருக்கலாம் .எப்படியும் சரிபார்ப்பு நடக்கும்போது அது சரிசெய்யப்படுகின்றது .அதனால் அது சட்டப்படி குற்றமாகாது .இதை வைத்து ஒன்றும் எந்த தேர்தலிலும் யாரும் மாறுதலாக வாக்களிக்கவில்லை .காவல்துறை இதை கைவிடவேண்டும் .இது நீதிமன்றத்தின் முன் செல்லாது .வெறும் சிரமமே .


ஜெகதீசன்
டிச 07, 2025 21:48

NRI களுக்கு ஓட்டுரிமை உண்டு. வாக்காளர் சார்பாக குடும்பத்தினரே கையெழுத்திடலாமே.


Shekar
டிச 08, 2025 07:54

அப்போ அந்த ஓட்டையும் யாராவது உடன்பிறப்பு போடலாமே. அதை தடுக்கத்தனே SIR


முக்கிய வீடியோ