உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீக்கியர் தலைப்பாகை குறித்த வழக்கு: ராகுல் மனு தள்ளுபடி

சீக்கியர் தலைப்பாகை குறித்த வழக்கு: ராகுல் மனு தள்ளுபடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அலகாபாத்: சீக்கியர் தலைப்பாகை குறித்து கருத்து தொடர்பாக தொடரப்பட்ட சீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் எம்பி ராகுல் தொடர்ந்த வழக்கை அலகாபாத் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.கடந்த ஆண்டு, அமெரிக்கா சென்ற காங்கிரஸ் எம்பி ராகுல் வர்ஜீனியாவில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசும் போது, சீக்கியர் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர், இந்தியாவில் ஒரு சீக்கியர் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுகிறாரா… குருத்வாராவுக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறாரா என்பதற்காக போராட்டம் நடக்கிறது. இது சீக்கியர்களுக்கு மட்டும் அல்லாமல், அனைத்து மதங்களுக்கும் பொருந்தும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.இதனையடுத்து வாரணாசியில் எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து நாகேஸ்வர் மிஸ்ரா எனபவர் வாரணாசி செசன்ஸ் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். இதன் பிறகு இந்த மனுவை கடந்த ஜூலை 21 ல் சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.வாரணாசி சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, ராகுல் அலகாபாத் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அனைத்து தரப்பு வாதங்களும் செப்., 3 ம் தேதி முடிவடைந்தது. தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய அலகாபாத் ஐகோர்ட், ராகுல் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து, வாரணாசி சிறப்பு நீதிமன்றத்தில் சீராய்வு மனு மீதான விசாரணை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !