உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உடுப்பியில் மகிஷாசுரன் கோவில் ஆண்டுக்கு ஒரு முறை தொட்டில் சேவை

உடுப்பியில் மகிஷாசுரன் கோவில் ஆண்டுக்கு ஒரு முறை தொட்டில் சேவை

நவராத்திரியை ஒட்டி மைசூரில் நடக்கும் தசரா பண்டிகையின்போது, சாமுண்டி மலையில் மகிஷாசூரன் தசராவும் நடந்தது.மலையில் உள்ள மகிஷாசூரனின் சிலையை சிலர் வழிபடுவர். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்னையால், மகிஷாசுரன் தசரா கொண்டாட தடை விதிக்கப்பட்டது.ஆனாலும் மகிஷாசுரனை வழிபடுவோர், தசரா கொண்டாட அனுமதி கேட்பதால், ஒவ்வொரு ஆண்டும் பிரச்னை ஏற்படுகிறது. மகிஷாசுரனை, ஒரு சிலர் எதிர்க்கும் சூழ்நிலையில், அவருக்காக ஒரு கோவில் கட்டப்பட்டு உள்ளது.கடலோர மாவட்டமான உடுப்பியின் பர்கூரில் மகிஷாசுரன் கோவில் உள்ளது. கோவிலில் உள்ள மகிஷாசுரனின் சிலையை பக்தர்கள் தினமும் வழிபட்டு வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை தொட்டில் சேவை நிகழ்ச்சியும் நடக்கிறது. மகிஷா என்கிற சிவகணனுக்கு அர்ச்சனை செய்வதாக, அர்ச்சகர்கள் கூறுகின்றனர்.முற்காலத்தில் கடற்கரை பகுதி, மகிஷா மண்டலம் என்று அழைக்கப்பட்டது. இங்கு மகிஷா என்ற மன்னன் ஆட்சி செய்ததாக புராண கதைகள் கூறுகின்றன. மகி என்றால் பூமி. ஈஷா என்றால் கடவுள் அல்லது பேரரசர் என்று பொருள்படுவதால், மகிஷாசுரனை வணங்குவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.இந்த கோவில் நடை தினமும் காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும்; மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரையும் திறந்திருக்கும். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை