உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெயரை மாற்றினாலும் உண்மை நிலையை மாற்ற முடியாது; சீனாவுக்கு இந்தியா சுளீர்

பெயரை மாற்றினாலும் உண்மை நிலையை மாற்ற முடியாது; சீனாவுக்கு இந்தியா சுளீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் பல இடங்களின் பெயரை மாற்ற சீனா மேற்கொண்ட முயற்சியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.இந்தியா - சீனா இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவை சீண்டிப் பார்க்கும் வகையில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு, தன் மொழியில் பெயர்களை சூட்டியது சீனா.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5ov62l27&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அருணாச்சல பிரதேசத்தை, ஜாங்னான் என்று பெயரிட்டு சீனா அழைத்து வருகிறது. அங்குள்ள ஆறு இடங்களுக்கு, 2017ல் புதிய பெயரை சூட்டியது. அதைத் தொடர்ந்து, 2021ல் 15 இடங்கள், 2023ல் 11 இடங்களுக்கு புதிய பெயர் சூட்டியது. தற்போது மீண்டும் அருணாச்சலப் பிரதேசத்தில் பல இடங்களின் பெயரை மாற்ற சீனா முயற்சித்து வருகிறது. இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் பல இடங்களின் பெயரை மாற்ற சீனா மேற்கொண்ட முயற்சியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்குப் பெயரிட சீனா தொடர்ந்து வீண் மற்றும் அபத்தமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.எங்கள் கொள்கை ரீதியான நிலைப்பாட்டிற்கு இணங்க, அத்தகைய முயற்சிகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது. பெயரை மாற்றினாலும், உண்மையான யதார்த்தத்தை சீனா மாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Indian
மே 15, 2025 03:04

ஆப்ரேஷன் சீனா விரைவில்...


Thomas Baly
மே 15, 2025 02:46

5ஆம் நூற்றாண்டில் போதிதர்மன் தமிழ் நாட்டை சீனாவுக்கு எழுதி கொடுத்ததால் இது முதற்கொண்டு தமிழ் நாடு "தைங் நிங்" என்று அழைக்கபடும் - சீன வெளியுறவு அமைச்சகம்.


Thangavel
மே 14, 2025 19:11

இன்று முதல் பைஜிங். பிளிக்கல் பாளையம் என்று அழைக்கப்படும் என்று ஒரு முறை நடுவண் அரசு கூறினால் மூடிட்டு இருப்பான்..


நிக்கோல்தாம்சன்
மே 14, 2025 18:38

சீனாவிற்கு தமிழகத்தின் அந்த சார் ஐ பரிசளிப்பது தான் சரி , செய்வீர்களா தளபதியாரே


SUBRAMANIAN P
மே 14, 2025 17:56

சீனாக்காரனுக்கு இதே வேலையாப்போச்சு..


SUBRAMANIAN P
மே 14, 2025 13:28

நாமும் சீனாவுக்கு சின்ன தளபதி என்று பெயர் மாற்றம் செய்து அழைப்போம். பாகிஸ்தானை பட்டி என்று அழைப்போம்


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 14, 2025 12:41

காங்கிரஸ் கட்சி பெயரை சைனா காங் ஜான் என் பெயர் மாற்றம் செய்யப்போகிறது.


அப்பாவி
மே 14, 2025 12:03

இன்னும் சீன இறக்குமதியை ரெட்டிப்பாக்கி சுளீர் சுளீரென குடுப்போம்.


V Venkatachalam
மே 14, 2025 14:32

நாம நம்மளை மாற்றிக்க முடியாது. சீனாவுக்கு ஜங் ஜங் அடித்து தான் பழக்கம். உள்துறை அமைச்சகம் சொன்னது சீனாக்காரனுக்கு உரைக்குதோ இல்லையோ நம்ம அப்பாவிக்கு சுளீர் ன்னு உரைக்குது. ரொம்ப ரோஷக்காரன் நானேதான்.


Anand
மே 14, 2025 10:54

நாமும் சீனாவை சங்கி மங்கி என பெயர் மாற்றம் செய்து அழைப்போம்.


Ramesh Sargam
மே 14, 2025 10:49

அடுத்து Operation China வருகிறது. ஜாலிதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை