உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொழிலதிபர்களுக்கு நெருக்கடி: சொல்கிறார் ராகுல்

தொழிலதிபர்களுக்கு நெருக்கடி: சொல்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் புகழ வேண்டும் என நேர்மையாக தொழில் செய்யும் தொழிலதிபர்களுக்கு மூத்த அமைச்சர் நெருக்கடி கொடுத்து வருகிறார்,'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பத்திரிகை ஒன்றில் எழுதிய கட்டுரையில் கூறியுள்ளதாவது: கிழக்கு இந்திய கம்பெனி நாட்டை விட்டு வெளியேறி, 150 ஆண்டுகள் ஆகியும் அது விதைத்த ஏகாதிபத்தியம் என்ற அச்சம் தற்போது புதிய வடிவில் உள்ளது. அனைவருக்கும் தொழில் செய்வதற்கு வாய்ப்பை தரும் முற்போக்கான வணிகத்திற்கு நேரம் வந்துவிட்டது. தொழிலதிபர்களுக்கு நாங்கள் ஆதரவு ஆக இருப்போம் எனக்கூறியிருந்தார். இந்த கட்டுரைக்கு பா.ஜ., தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fcyrv8ub&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பத்திரிகையில் எனது கட்டுரை வெளியான பிறகு, நேர்மையாக தொழில் செய்யும் பல தொழில் அதிபர்கள் என்னை தொடர்பு கொண்டனர். அப்போது, மூத்த அமைச்சர் ஒருவர் தங்களை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு குறித்து நல்ல விதமாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட வேண்டும் என நெருக்கடி கொடுப்பதாக தெரிவிக்கின்றனர். இது எனது கருத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

R.Varadarajan
நவ 08, 2024 16:53

அப்ப ,டாடா. அம்பானி, அதானி தொழிலதிபர்கள் இல்லையா?


kumaresan
நவ 08, 2024 02:05

ராகுலின் பைத்தியாக்கார கிறுக்குத்தனமான கட்டு கதைக்கு எல்லையே இல்லை. மோடி செய்து வரும் சாதனைகளும் அடைந்து வரும் புகழுமே அதற்கு காரணம்.


Gokul Krishnan
நவ 07, 2024 22:33

உலக அழகி போட்டியில் இட ஒதுக்கீடு உள்ளதா என்று கேட்ட நீங்க வயநாடு தொகுதியில் எதற்கு உங்க தங்கையை போட்டி இட செய்தீங்க ஏன் தாழ்தப்பட்ட ஒரு பெண்ணுக்கு இடம் கொடுத்து உங்க பெருமையை காட்டி இருக்கலாமே


ரவி
நவ 07, 2024 21:50

இத்தாலி மாபியாவோட தொல்லை தாங்க முடியல


Duruvesan
நவ 07, 2024 21:48

தல நெனச்சது democractic வின் பண்ணும் பங்களா தேசம் மாதிரி இங்கயும் எதுனா நடக்கும்னு. கெட்ட நேரம் டிரம்ப் வந்துட்டாரு, நம்ம கூட்டாளி சோரஸ் ?


Duruvesan
நவ 07, 2024 21:36

உங்க நண்பர் சோரஸ் அவர்களுக்கு இனி டிரம்ப் அவர்களின் ஆப்பு நெறய இருக்கும்


Dharmavaan
நவ 07, 2024 21:32

திருட்டு ராகுல்கான் எந்த புரளியும் கிளப்பி ஆதாயம் தேடும் சந்தர்ப்பவாத பச்சோந்தி.


C.SRIRAM
நவ 07, 2024 21:12

நீ எப்படி இவ்வாளவு கேவலமான ஆளாக இருக்கிறாய் ?. இந்தியாவின் முதலாவது தேச விரோதி


HoneyBee
நவ 07, 2024 21:06

கேவலமான மனிதன்.. இப்ப இவருக்கு என்ன ஆதானி அம்பானிகள் மற்றும் தொழிலதிபர்கள் மீது கரிசனம்.. எலி எதுக்கு அம்மணமா ஓடுது..


Narasimhan
நவ 07, 2024 21:01

உங்க கட்சியிலோ திமுகவிலோ ஏகாதிபத்தியம் இல்லை? கட்சிக்கு உழைத்தவர்களுக்கு ஏன் உயர் பதவி இல்லை? திருட்டு காந்தி குடும்பம் இருக்கும் வரை காங்கிரசுக்கு வாய்ப்பே இல்லை. மூடிக்கிட்டு ஒரு ஓரமாக இரு