உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாதியை அடையாளப்படுத்தி இந்தியாவை விமர்சிப்பதா?: டிரம்ப் ஆலோசகர் மீது அரசியல் தலைவர்கள் பாய்ச்சல்

ஜாதியை அடையாளப்படுத்தி இந்தியாவை விமர்சிப்பதா?: டிரம்ப் ஆலோசகர் மீது அரசியல் தலைவர்கள் பாய்ச்சல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'இந்திய மக்களின் செலவில், பிராமணர்கள் லாபமடைந்து வருகின்றனர்' என, அமெரிக்க அதிபர் டிரம்பின் வணிக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாததால், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி அறிவித்தார். இதனால், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், ஏழு ஆண்டுகளுக்குப் பின் பிரதமர் மோடி சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், அமெரிக்காவிடம் இருந்து வலுவான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அமெரிக்க சமூகத்தில் உயர்வான அந்தஸ்தில் இருக்கும் பெரும் பணக்காரர்கள், 'பாஸ்டன் பிராமணர்கள்' என விமர்சிக்கப்படுகின்றனர். சமூக மற்றும் பொருளாதார ரீதியாக உயர்வான அந்தஸ்தில் இருப்பவர்களை அமெரிக்காவில் இப்படி குறிப்பிடுகின்றனர். இந்த சொலவடையை பயன்படுத்தி, இந்திய மக்களின் செலவில், பிராமணர்கள் பெரும் லாபம் சம்பாதித்து வருகின்றனர் என அதிபர் டிரம்பின் வணிக ஆலோசகர் பீட்டர் நவரோ குற்றஞ்சாட்டினார். பீட்டர் நவரோவின் இந்த கருத்துக்கு நம் நாட்டில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் உறுப்பினரான சஞ்சீவ் சன்யால், காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து சஞ்சீவ் சன்யால் கூறியதாவது: நவரோவின் கருத்து, அவர் யார் என்பதை வெளிப்படுத்தி விட்டது. இந்தியாவுக்கு எதிரான கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துவிடும் கட்டுப்பாடு அவரிடமே இருக்கிறது என்பது தெரிந்துவிட்டது. 19ம் நுாற்றாண்டின் காலணி ஆதிக்கத்தில் இருந்து நேரடியாக எடுக்கப்பட்ட விமர்சனம் போல இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். சிவசேனா உத்தவ் பிரிவு எம்.பி.,யான பிரியங்கா சதுர்வேதியும் சமூக வலைதளத்தில் கண்டனத்தை பதிவு செய்து உள்ளார். அதில் கூறப் பட்டிருப்பதாவது: பீட்டர் நவரோ தன் கருத்தை வெளிப்படுத்த, இந்தியாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஜாதி அடையாளத்தை பயன்படுத்தி இருப்பது வெட்கக்கேடானது. அமெரிக்காவை பொறுத்தவரை பெரும் பணக்காரர்களை குறிக்க, 'பாஸ்டன் பிராமணர்கள்' என்ற சொலவடையை பயன்படுத்துவதுண்டு. ஆனால், இந்தியாவில் அது ஒரு ஜாதியின் அடையாளம். டிரம்ப் நிர்வாகத்தில் இருக்கும் மூத்த உறுப்பினரான நவரோவுக்கு இது நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் வேண்டுமென்றே இந்த சொலவடையை அவர் பயன்படுத்தி இருக்கிறார். இது மிகவும் தவறானது. இவ்வாறு அதில் கூறியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா, திரிணமுல் காங்., - எம்.பி., சகாரிகா கோஷ் உள்ளிட்டோரும் நவரோவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 65 )

sankaranarayanan
செப் 08, 2025 19:04

இவரமீது சர்வதேச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் என்ன யாராவது முன்னின்று செய்யுங்கம் எல்ல்லாரும் பின்னின்று உங்களுக்கு உதவி செய்கிறோம்


Karthik
செப் 08, 2025 11:13

அமெரிக்கா வல்லரசு என்று சொன்னார்கள். இப்படிப்பட்ட சில கழிசடைகளும் அங்கேயும் இருக்கத்தான் செய்கின்றன.


Sainathan Veeraraghavan
செப் 07, 2025 09:55

பீட்டர் நவரரோ ஒரு திமுக சொம்பு.


theruvasagan
செப் 02, 2025 17:47

இங்கே பாழாய்ப்போன சமூகநீதி என்கிற வார்த்தை ஜாலத்தினால் கல்வி வேலைவாய்ப்பு என்று எல்லாவற்றிலும் ஒதுக்கப்பட்டு நிராதரவான நிலையில் படிப்பு மட்டும் திறமையை மட்டும் மூலதனமாக கொண்டு அயல்நாடுகளில் குடியேறி பணிபுரிந்து தங்களை தாங்களே உயர்த்திக் கொண்டவர்கள் எப்படி மற்றவர்கள் செலவில் வாழ்பவர் ஆவார்கள். இந்தியாவை தவிர்த்து வேறு எந்த நாட்டிலும் குடிபுகுந்தவர்கள் தகுதியும் உழைப்பும் இல்லாமல் வாழமுடியாது. உயரவும் முடியாது. இங்கே தங்கள் தரத்தை திறமையை உயரத்திக்கொள்ள விரும்பாத கும்பல் அவை இருப்ப வர்கள் மீது பொறாமை கொண்டு அவர்களை இகழ்வது போல அங்கேயும் இருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.


Kulandai kannan
செப் 02, 2025 14:51

மிஷனரிகளின் துர்போதனைதான் காரணம்.


M Ramachandran
செப் 02, 2025 13:45

கீழ்த்தர எண்ணமுடன் மோசமான மனநிலையில் உள்ள நபர்களாய் மாறிய முன்னேரிய நாடு என்று பீத்திக்கொள்ளும் அமெரிக்கா. இவர்களின் முகத்திரையை கிழிக்கிறது. மோடி சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்திருக்கிறார். இவர்களின் அடிமாயாக்க மற்ற நாடுகளை எண்ணும் போக்கிற்கு இந்த தலைமுறை யினறால் பலத்த அடி விழுந்துடிச்சி. அதுதான் இவர்களின் மன நிலையயை இவர்கள் பேச்சு வெளி படுத்திடிச்சி. யேனே இருந்தாலும் இந்தியர்கள் இந்தியர்கள் தாம். நம் கடவுளர்கள் தெளிவாக காட்டியுள்ளதை நாம் ஹிந்துக்கள் மறக்கலாகாது..பெருமாளுடைய அடியார்கள் ஆள்வார்கள் பலர் ப்ராமணர்களல்ல. ஆனால் கோவிலில் அவர்கள் முதல் மரியாதைய்ய கொடுப்பவர்களில் ஆள்வார்கள் உள்ளார்கள். அதே போல் சிவன் கோயிலில் முக்கியமாக போற்றுபவர்கள் நால்வர் பெருமான்கள் சிறந்த சிவனடியார்கள் மற்றும் 63 நாயன்மார்கள். இதை மற்ற மதத்தினர் உணரார் ஹிந்து மக்கள் நிச்சயம் உணர்வார்கள். அதனால் ஹிந்து மதத்தினர் அறியாமையால் மதம் மாறுவது அவன் பிறநத நாட்டிற்கும் தன மதத்திற்கும் த்ரோகம் இளையய்கிறான்.அதன் பலன் அடுத்த ஜென்மாவில் உணருவான். அடுத்த ஜென்மம் உண்டு போன ஜென்மமும் உண்டு. இது தெரிய உண்மயான நாடி ஜோதிடர்களை அணுகினால் அவர்கள் படிப்பார்கள்.


kannan
செப் 02, 2025 13:25

உண்மையச் சொன்னா கோவத்த பார்டா..


Karthik Madeshwaran
செப் 02, 2025 12:13

அம்பேத்கர், பெரியார், அண்ணா , போன்ற தலைவர்கள் இல்லை என்றால் இன்று கூட சாதீய வன்கொடுமைகள் உச்சத்தில் இருந்திருக்கும். பிராமினர், பிராமின் அல்லாதோர் இடையே பல கொடூரமான சமூக ஏற்றத்தாழ்வுகள் இருந்தது உண்மை தானே? மறுக்க முடியுமா ? நான் அனைத்து பிராமிணர்களையும் குறை சொல்லவில்லை. தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று மனதால் கர்வம் கொண்டவர்களை மட்டுமே சொல்கிறேன். நல்ல மனிதர்கள் அனைத்து சாதிகளிலும் உண்டு.


vivek
செப் 02, 2025 12:33

மொக்கையோ மொக்கை....திராவிட மொக்கை


தமிழ்வேள்
செப் 02, 2025 12:58

எல்லா சாதிகளிலும் /இனங்களிலும் மேட்டிமை மனநிலை கொண்டவர்கள் உண்டு ...தமிழகத்தில் ஆணவ கொலைகள் செய்யும் சாதிகள் எவை என்பது உங்களுக்கே தெரியும் ..திராவிட வாக்குவங்கி சாதிகள் மட்டுமே ஆணவக்கொலைகளில் ஈடுபடுகின்றன .பிராமணர்கள் அல்லவே ??


ஆரூர் ரங்
செப் 02, 2025 15:59

ஆணவக்கொலை ,வன்கொடுமை வழக்குகளில் பிராமணர் பெயர் உண்டா ? நிலவுடைமை நடுச்சாதியினர் செயல்படுத்திய ஏற்றத்தாழ்வுகளுக்கு பிறரை குறை சொல்லாதீர்


theruvasagan
செப் 02, 2025 21:45

தற்போது அதிகமாக உள்ள வேறுபாட்டுக்கு யார் காரணம் என்று சொல்லுங்க சமத்துவ சமுதாய ஆர்வலர் அவர்களே.


Muralidharan S
செப் 02, 2025 11:33

கஷ்டப்பட்டு படித்து 95 சதவிகிதம் மதிப்பெண்கள் எடுத்தாலும் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்காது. வேலைவாய்ப்பிலும் - பிராமணன் இடஒதுக்கீடு கிடையாது. எந்தவித சலுகையும் பெறாமல் சொந்தமாக படித்து, தனியார் துறைகளில் போட்டியில் போராடி ஜெயித்து வேலைகளை பெற்று, மூளை திறமையின் / கல்வித்தகுதிகளின் அடிப்படையில் நேர்மையாக, நாணயமாக முன்னேறி வரும் பிராமிணர்கள் மீது காழ்ப்புணர்ச்சி - பிரச்சினைகளை திசைதிருப்பவே. எந்த ஒரு பிராமிணனும் உலக பணக்காரர்களின் முதல் வரிசையில் இல்லை.. உல்லாச வாழ்க்கைக்கு தனி தீவுகளை வாங்கவில்லை.. எந்த ஒரு பிராமணன் திருடி, கொள்ளையடித்து, கொலைசெய்து, மக்களை ஏமாற்றி நிலங்களை அபகரிப்பு செய்து, சொத்து குவித்து, ஊழல் செய்து பலதலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து ரவுடித்தனம் செய்து பணம் சம்பாரித்து பிழைப்பு நடத்துவதில்லை. அப்படி செய்யும் எல்லோரையும் விட்டு விட்டு, பிராமணர்களின் மீது விஷம் கக்கி தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள், வயிற்றுப் பிழைப்பிற்காக - திராவிஷம் தமிழகத்தில் மட்டும் அல்ல - அமெரிக்காவிலும்...


K V Ramadoss
செப் 07, 2025 07:01

திருடி, கொள்ளையடித்து, கொலைசெய்து, மக்களை ஏமாற்றி நிலங்களை அபகரிப்பு செய்து, சொத்து குவித்து, ஊழல் செய்து பலதலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து ரவுடித்தனம் செய்து பணம் சம்பாரித்து பிழைப்பு நடத்துபவர்கள், மக்களின் கவனத்தை திசை திருப்பவே பிராமண த்வேஷத்தை பரப்புகிறார்கள்..


Muralidharan S
செப் 02, 2025 11:13

அமெரிக்காவிலும் திராவிஷ மாடல் ஆட்சி போல இருக்கிறது.. 60 வருஷ தமிழக வரலாற்றை புரட்டிப்பாருங்கள். ஏதாவது ஊழல் குற்றச்சாட்டுக்கள் / வழக்கு, ஆட்சி அவலங்கள் என்று ஏதாவது திராவிஷங்களுக்கு எதிராக வெளியே வந்தால், பிரச்சினையை திசைதிருப்ப திராவிஷம் உடனடியாக கையில் எடுக்கும் ஆயுதம் - பிராமின் எதிர்ப்பு / ஒழிப்பு, பூணூல் / குடுமி அறுப்பு.. இப்படி பிராமணர்களை மையப்படுத்தியே தான் இருக்கும். இன்னொரு ஆயுதம் ஹிந்தி எதிர்ப்பு / ஒழிப்பு.. பலமானவர்களுடன் மோதினால் சேதாரம் ஆகிவிடும் என்ற பயம் திராவிஷங்களுக்கு எப்பொழுதுமே உண்டு.. அதனால் திரவிஷ வீரர்கள் ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்று பிராமிணனை தேடிப்பிடித்து அடிக்க ஆரம்பிப்பார்கள். அட இது நல்ல டெக்கினிகா இருக்கே என்று - தமிழகத்தில் 60 ஆண்டுகளாக நடப்பதை அமெரிக்காவிலும் இப்பொழுது ஆரம்பித்து இருக்கிறார்கள்.


முக்கிய வீடியோ