உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அவதுாறு வழக்கில் குறுக்கு விசாரணை: வந்தார் அண்ணாமலை; வரவில்லை டி.ஆர்.பாலு!

அவதுாறு வழக்கில் குறுக்கு விசாரணை: வந்தார் அண்ணாமலை; வரவில்லை டி.ஆர்.பாலு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அவதுாறு வழக்கில் குறுக்கு விசாரணை செய்வதற்காக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வந்திருந்த நிலையில், டி.ஆர்.பாலு சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வரவில்லை. இதனால் வழக்கு விசாரணை டிச.,24க்கு ஒத்திவைக்கப்பட்டது.கடந்த, 2023, ஏப்.,14ல், தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை இருந்தபோது, 'டி.எம்.கே., பைல்ஸ்' என்ற பெயரில், திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். ''தி.மு.க., பொருளாளரும், எம்.பி.,யுமான டி.அர். பாலுவுக்கு, 21 நிறுவனங்கள் இருப்பதாகவும், அவருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாகவும்' அண்ணாமலை கூறினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p5xvqn84&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, அண்ணாமலை மீது, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாலு அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் டிஆர்பாலு கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.இந்நிலையில், 'வழக்கில் நானே டிஆர்பாலுவிடம் நேரடியாக குறுக்கு விசாரணை செய்யப்போவதாக' அண்ணாமலை அறிவித்தார். அந்த குறுக்கு விசாரணை இன்று நவ.,11ல் நடப்பதாக இருந்தது. டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை நடத்த இருக்கும் குறுக்கு விசாரணையை எதிர்பார்த்து பல்வேறு தரப்பினர் காத்திருந்தனர். இன்று (நவ., 11) அண்ணாமலை குறுக்கு விசாரணைக்காக சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு தயாராக வந்திருந்தார். ஆனால் டி.ஆர்.பாலு கோர்ட்டுக்கு வரவில்லை. நீதிபதிகளிடம், 'டிஆர்பாலு எம்.பி.,யாக இருப்பதால் அதற்கான பணியில்அவர் ஈடுபட்டு இருக்கிறார். இதனால் வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்' என்று அவரது வக்கீல்கள் வேண்டுகோள் விடுத்தனர்.பின்னர் வழக்கு விசாரணை டிச.,24க்கு ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரத்தில், சென்னை, சுவாமி சிவானந்தா சாலையில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டிஆர்பாலு பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 64 )

Easwar Kamal
நவ 11, 2025 20:50

பாலுவை விட்டுவிடுங்கள் லேட்டஸ்ட் நேருவின் 1000 கோடி ஊழல் அது எப்போது. நீங்கள் தெலுங்கன் அமைச்சருங்களை கை வைத்தால் இவனுங்க மட்டும் எப்படி எஸ்கேப் ஆவுரானுங்க அல்லது நீங்களும் கண்டு கொள்வதும் இல்லை. இந்த நேரு மற்றும் வேலுவை ஒரு பிடி பிடிங்க பார்க்கலாம் அப்போது ஒத்து கொள்கிறோம் உங்கள் வீரத்தை...


VENKATASUBRAMANIAN
நவ 11, 2025 19:52

இதுதான் திராவிட மாடல். பயம்


Barakat Ali
நவ 11, 2025 19:03

திமுக வெத்துவேட்டு கட்சி ..... அட்டைக்கத்தி வீரர்கள் ..... ஆனால் அண்ணாமலை ஆண்மகன் .....


Thravisham
நவ 11, 2025 18:56

சிங்கத்தின் முன்னால் ஓர் மாபெரும் ஊழல் நரி. போய் ஒளிஞ்சுக்கோ


S SRINIVASAN
நவ 11, 2025 17:49

வயித்தால போகுது போல. சனங்க வயித்தெரிச்சல் சும்மாவிடாது. வம்சத்தயே அழிக்கும்.


Indian
நவ 11, 2025 18:38

வயித்தால போனா கொஞ்சம் ஜெலுசில் குடிங்க சரியாகிடும்


SUBRAMANIAN P
நவ 11, 2025 17:49

டீ ஆர் பாலு கோர்ட்டுக்கு வந்திருந்தா அண்ணாமலை முன்னாலேயே பிஸ் அடிச்சிருப்பான்.. அடுத்த வாய்தாவுக்கு ஆஸ்பத்திரியில போயி அட்மிட்டு ஆகிருவான்.. இனிமே அடுத்தடுத்து முதல்வன் பட பாணியிலே திதிமுக ஆளுங்கல்லாம் ஒன்னு கக்கூஸில் போயி ஒளிஞ்சுக்குவானுங்க அல்லது காவேரி ஆஸ்பத்திரியில போயி படுத்துக்குவானுங்க..


Perumal Pillai
நவ 11, 2025 17:19

இவன் வரமாட்டான் .


Madras Madra
நவ 11, 2025 16:54

அண்ணாமலை பேர கேட்டா சும்மா அதிருதில்ல அதான் ஓடி பொய் பதுங்கி விட்டார் 23ம் புலிகேசி


N S
நவ 11, 2025 16:42

திராவிட மாடல் அப்பாவின் தந்தை ஒரு முறை தனது வாரிசு மகளிடம், "இன்னும் என்ன என்ன எல்லாம் செய்து இருக்கிறிர்கள் என்னால் பாட்டில் சொல்ல முடியவில்லையே" என்று வருத்தப்பட்டார். இப்பொழுது, வராத தலைவர் "வாரிசுகள் என்னென்ன செய்தார்களோ என்று தெரியாது. குறுக்கு விசாரணையில் என்னென்ன கேட்கபோகிறாரோ" என்று "தைரியமாக" தேதி மாற்ற முயற்சி. அடுத்த நாளும் இதே போல நடக்கும்.


surya krishna
நவ 11, 2025 16:31

வாய் சொல்லில் வீரர்கள் இந்த திருட்டு திராவிடர்கள். காரியம் என்று வந்துவிட்டால் முதுகை காட்டி ஓடுபவர்கள். அடியாள்களை ஏவி விட்டு வன்முறை ஏற்படுத்துவார்கள் இவர்கள்...


புதிய வீடியோ