உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குண்டு வெடிப்பில் சி.ஆர்.பி.எப்., வீரர் மரணம்

குண்டு வெடிப்பில் சி.ஆர்.பி.எப்., வீரர் மரணம்

ரூர்கேலா: ஒடிஷாவில், நக்சல் தேடுதல் வேட்டையின்போது சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில், சி.ஆர்.பி.எப்., வீரர் மரணம் அடைந்தார்.ஒடிஷாவின் மேற்கு சிங்பும் பகுதியில் உள்ள குவாரியில் சில நாட்களுக்கு முன் நக்சல்கள், 2.5 டன் அளவுக்கு வெடிபொருட்களை திருடிச் சென்றனர். இதையடுத்து, ஒடிஷா மற்றும் ஜார்க்கண்ட் போலீசார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நக்சல் தேடுதல் வேட்டையின் ஒரு பகுதியாக ஒடிஷா - ஜார்க்கண்ட் எல்லையில் உள்ள சரண்டா வனப்பகுதியில் நேற்று காலை சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும், ஒடிஷா சிறப்பு போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ரூர்கேலா அருகே கே.பாலங் பகுதியில் நக்சல்கள் வைத்துஇருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் சி.ஆர்.பி.எப்., வீரர் சத்யபான் குமார் சிங்கின், 34, இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ரூர்கேலாவின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தார். இவர், உத்தர பிரதேசத்தின் குஷி நகரை சேர்ந்தவர். சி.ஆர்.பி.எப்., படையில் உதவி சப் - இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை