உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கச்சா எண்ணெய் விலை குறைஞ்சுருச்சு; பெட்ரோல் விலையை குறைக்காதது ஏன்; கார்கே கேள்வி

கச்சா எண்ணெய் விலை குறைஞ்சுருச்சு; பெட்ரோல் விலையை குறைக்காதது ஏன்; கார்கே கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல் விலையை குறைக்காதது ஏன்? என திரிணமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. கடந்த சில நாட்களாகவே கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.

ரூ.35 லட்சம் கோடி!

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் கார்கே சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல் விலையை குறைக்காதது ஏன்?. பா.ஜ., ஆட்சி வந்த பிறகு கச்சா எண்ணெய் 32 சதவீதம் குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை 32.5% குறைந்தாலும், பெட்ரோல், டீசல் விலையை பா.ஜ., அரசு குறைக்க மறுக்கிறது. தற்போதைய சந்தை நிலவரப்படி பெட்ரோல் ஒரு லிட்டர் ₹48.27க்கும், டீசல் ஒரு லிட்டர் ₹69.00 விற்கப்பட வேண்டும். 10 ஆண்டுகள் மற்றும் 100 நாட்களில், எரிபொருளுக்கு வரி விதித்து 35 லட்சம் கோடி ரூபாய்களை பா.ஜ., அரசு மக்களிடம் இருந்து கொள்ளையடித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத பா.ஜ., அரசை மக்கள் தேர்தலில் நிராகரிப்பார்கள். இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.

திரிணமுல் காங்., கேள்வி

திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., டெரிக் ஓ பிரையன் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்த போதும், பெட்ரோல் விலை 30 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதனால் எண்ணெய் நிறுவனங்கள் அதிக பலன் அடைகின்றன. ஆனால் அதன் பலன் சாதாரண மக்களுக்கு கிடைக்கவில்லை. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல் விலையை குறைக்காதது ஏன்? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

Ganapathy
செப் 17, 2024 11:54

லூலூ பாய் பேர சொல்லமாட்டியே ஏன்னா அந்தாளு கோடீஸ்வரன் ஆனா பாவம் மைனாரிட்டி முஸ்லீம்..


Nandakumar Naidu.
செப் 17, 2024 08:34

தேச,சமூக மற்றும் ஹிந்து விரோத காங்கிரஸ் கட்சியின் கார்கே அவர்களே, பிஜேபி ஆட்சி செய்யாத மாநிலங்களின் அரசுகள் நீங்கள் உட்பட பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி யின் கீழ் கொண்டு வர எதிர்ப்பது ஏன்? இப்போது நாடகமாடுவததேன்? ஒன்றும் புரியாத மக்கள் தான் உங்களை புரிந்து கொள்ளாமல் உங்களுக்கு வாக்களிக்கிரார்கள்.


giddy
செப் 17, 2024 08:19

அடேங்கப்பா இந்த வயசானவரு இவங்க ஆட்சி செய்யுற கர்நாடக, ஹிமாச்சல் ல என்ன செஞ்சீங்க? பெட்ரோல், டீசல் பொருட்களின் மாநில வரியை ஏத்திப்புட்டு, இப்போ இங்க வந்து டகால்டி உடுறாரு. அதுக்கு பதில் சொல்லும் வயசானவரே


Velan Iyengaar
செப் 17, 2024 07:57

ஆந்திரா என்று படிக்கவும் ... ஆந்திராவில் தான் நாட்டிலேயே பெட்ரோல் டீசல் விலை அதிகம்.


Sathyanarayanan Sathyasekaren
செப் 16, 2024 22:55

velan பொய் ஐயங்கார் உனது பெயரைப்போலவே உன் எழுதுவது அனைத்தும் பொய்யாகவே உள்ளன. தெலுங்கானாவில் கான் ஸ்கேம் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.


Sudha
செப் 16, 2024 21:32

இதை பாராளுமன்றத்தில் கேள்வியாக கேட்டு முறையான பதில் பெற்றால் மொத்த இந்தியா வும் காங்கிரஸ் க்கு வாக்களிக்கும் அரிய எளிய வாய்ப்பு


Velan Iyengaar
செப் 16, 2024 21:28

2014 இல் ரூபாய்க்கான டாலர் மதிப்பு கூட 2024 இந்த ரூபாய்க்கான டாலர் மதிப்பு இவ்வளோ குறைந்ததற்கு யார் காரணம் ?? நேருவா ?? ரூபையி டாலருக்கு இணையா மாற்றுவேன் என்று மார் தடத்தியது எந்த கூமுட்டை ??? அதற்க்கு நேர் மாற அப்படியே சரிந்துபோனது யாரோட ஆட்சி லட்சணம் ?? விகிதாச்சார அடிப்படை தெரியாத கூமுட்டை எதை எதனுடன் ratio செய்வது என்ற அடிப்படை புரிதல் இல்லாத கூமுட்டை என்னனென்னவோ உளறிவைத்து 1 + 3 = 5 இன்று எழுதி இருக்கு இதை சொல்லி குற்றமில்லை கணக்கை நம்ம தெய்வப்பிறவி போட்டு காட்டியமாதிரி தான் அடிபொடிகளும் போட்டு காட்டுகிறார்கள் ....


தாமரை மலர்கிறது
செப் 16, 2024 20:13

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், இந்தியர்களின் சம்பளம் வானளாவ உயர்ந்துள்ளது. வெறுமனே கச்சா எண்ணெய்யை காரில் ஊற்ற முடியாது. அதை சுத்திகரிக்க மிகப்பெரிய செலவாகும். மேலும் தொந்தியும் தொப்பையுமாக உள்ள இந்தியர்கள் சைக்கிளில் போவது தான் உடல் ஆரோக்கியம். உடல் எடை குறையாதவரை, பெட்ரோல் விலை குறையாது. பொதுமக்களின் ஆரோக்கியம் தான் அரசின் முக்கியம்.


அப்பாவி
செப் 16, 2024 19:23

இதே கேள்வியத்தான் பத்து வருசமாக் கேட்டுக்கிட்டிருக்கேன் கோவாலு.


பேசும் தமிழன்
செப் 16, 2024 19:07

அப்போ நீங்கள்.... கான் கிராஸ் கட்சி ஆட்சியில்.... சுமார் 100 லட்சம் கோடி ரூபாயை மக்களிடம் இருந்து கொள்ளை அடித்து இருப்பீர்கள்.... அப்படி தானே ???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை