உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் : 39 மாதங்களில் ரூ.1.10 லட்சம் கோடி மிச்சம்

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் : 39 மாதங்களில் ரூ.1.10 லட்சம் கோடி மிச்சம்

புதுடில்லி : ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதில், கடந்த 39 மாதங்களில் இந்தியாவுக்கு, 1.10 லட்சம் கோடி ரூபாய் பணம் மிச்சமாகியுள்ளது தெரியவந்து உள்ளது.ரஷ்யாவின் முக்கிய வர்த்தக ஆதாரமாக கச்சா எண்ணெய் உள்ளது. சீனாவுக்கு அடுத்ததாக, ரஷ்யாவிடம் அதிக கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. கடந்த 2022 - 23 முதல் தற்போது வரை, கிட்டத்தட்ட 39 மாதங்களில், ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கியதன் வாயிலாக, இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சேமிப்பு ஏற்பட்டுள்ளது.நாட்டின் சேமிப்பு கருதி, ரஷ்யாவிடம் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை இந்தியா வாங்கும் நிலையில், உக்ரைன் போரைத் தொடரும் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை கண்டித்து, இந்தியப் பொருட்கள் இறக்குமதி மீது கூடுதலாக, 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. எனினும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் அதிக அளவில் வாங்கும் சீனா மீது, அமெரிக்கா எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனினும், அமெரிக்க வரி விதிப்புக்குப் பின், விலை அடிப்படையில் தேவைப்பட்டால் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது தொடரும் என, எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

pakalavan
செப் 02, 2025 20:11

அப்புறம் ஏன் பெட்ரோல் விலை குறையல ? இதெல்லாம் அம்பானிக்குதானே லாபம்,


அப்பாவி
செப் 02, 2025 19:33

அடேங்கப்பா மிச்சமான பணத்தில் 200 பர்சண்ட் டாரிஃப் கட்டலாம் போலிருக்கே..


அப்பாவி
செப் 02, 2025 08:40

உலகத்துக்கே பெட்ரோல் விலை ஏறாமல் காப்பாத்தியிருக்கோம்னு ஒன்றிய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சொல்லிலியிருக்காரு. நாம மட்டும் ரஷிய ஆயில் குறைஞ்ச விலைக்கு வாங்கலேன்னா உலகசந்தையில் பேரல் 200 டாலருக்கு போயிருக்குமாம். நமது கடமை உலகத்தை பாதுகாப்பது. உள்ளூர்க்காரன் எப்பிடி போனால் என்ன?


ஆரூர் ரங்
செப் 02, 2025 16:03

உலகச் சந்தையில் உள்ள கூடுதல் விலையில்தான் நாமும் வாங்க வேண்டியிருக்கும். சுத்திகரிப்பு திறனில் மூன்றில் இரண்டு பங்கு அரசுத்துறை ஆலைகள்தான்.


Sivakumar
செப் 02, 2025 06:44

என்போன்ற சாமானியனுக்கு ஒரு பைசாவும் மிச்சம் ஆகல. அம்பானி அதானிக்கு மிச்சம்னா அதுக்காக நான் பாரத் மாத்தா கி ஜெய் போட முடியாதுங்கோ


ராஜாராம்,நத்தம்
செப் 02, 2025 09:00

அப்படீன்னா நீ இருக்க வேண்டிய இடம் பாகிஸ்தான் அங்கே போய் பாகிஸ்தான் ஜிந்தாபாத்னு கோஷம் போடு


சங்கி
செப் 02, 2025 02:39

என்ன பிரயோஜனம்? விலை ஏன் குரைக்கல


நாய்சேகர்
செப் 02, 2025 08:41

இந்தா புடி.


பூபதி
செப் 02, 2025 15:36

என்னோமோ யாருக்கு தெரியும் வாங்கறது யாருனு ..... யாருக்கு லாபமுனு போங்க பாஸ் ...


புதிய வீடியோ