உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தாயை அடித்து கொன்ற தந்தை: வரைந்து காண்பித்த 5 வயது மகளால் கைது

தாயை அடித்து கொன்ற தந்தை: வரைந்து காண்பித்த 5 வயது மகளால் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜான்சி: மனைவியை அடித்துக் கொன்று தற்கொலை என நாடகமாடிய தந்தையை, 5 வயது மகள் ஓவியம் வரைந்து காட்டிக் கொடுத்தார். கணவரை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்ரவதை:

உ.பி.,யின் ஜான்சியைச் சேர்ந்த சந்தீப் புதோலியா என்ற மருத்துவ பிரதிநிதிக்கும், மத்திய பிரதேசத்தை சேர்ந்த சோனாலி என்ற, 28 வயது பெண்ணுக்கும், ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணம் நடந்ததில் இருந்தே, அந்த பெண்ணிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு, கணவன் வீட்டார் சித்ரவதை செய்து வந்தனர். ம.பி.,யின் திகம்கார் என்ற இடத்தை சேர்ந்த சஞ்சீவ் திரிபாதி, தன் மகளிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய மருமகன் வீட்டார் மீது போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வந்தனர்.இந்நிலையில், கடந்த திங்கள் இரவு, ஜான்சியில் இருந்த சோனாலி, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கணவர் வீட்டார் தெரிவித்தனர். அதை நம்பாத சஞ்சீவ் திரிபாதி மற்றும் உறவினர்கள், உ.பி., மருத்துவமனையில், கணவர் வீட்டாருடன் தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் தான், தன் மகள் சோனாலியை அடித்துக் கொன்றதாக கூறினர். இதனால் இந்த விவகாரம், போலீசுக்கு சென்றது. போலீசார் இரு தரப்பிலும் விசாரித்தனர். அப்போது, சந்தீப் புதோலியா - சோனாலி தம்பதியின், 5 வயது மகள், தர்ஷிகா 'ஸ்கெட்ச்' ஒன்றை வரைந்து போலீசாரிடம் கொடுத்தார்.

முதல் குற்றவாளி:

அதில், தன் தாயை, தந்தை சந்தீப், கழுத்தை நெரித்து அடித்துக் கொன்று துாக்கிலிட்டதை காட்சிப்படுத்தி இருந்தார். அந்த ஓவியத்தின்படி விசாரணை நடத்திய போலீசார், முதல் குற்றவாளியான, அந்த பெண்ணின் கணவர் சந்தீப்பை கைது செய்தனர். அவரின் தாய் வினிதா, மூத்த சகோதரர் கிருஷ்ணகுமார், இறந்த பெண்ணின் நாத்தனார் மனிஷா மற்றும் அடையாளம் தெரியாத சிலர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Rasheel
பிப் 19, 2025 12:15

நீதி மன்றம் 30 ஆண்டுகள் ஜாமினில் விட்டால் நீதி என்று பிழைக்கும். ஒரு பக்கத்தில் பெண்களால் ஆண்கள் பாதிக்க படுகிறார்கள். இன்னொரு பக்கம் இந்த நிலை


Chidambarakrishnan K
பிப் 19, 2025 11:15

வரதட்சணை என்ற ஒரு ஆயுதத்தை வைத்துக்கொண்டு பெண் வீட்டார் இதைப்போல் பொய் வழக்குகள் போடுவது இக்காலக்கட்டத்தில் சாதாரணமாகிவிட்டது. நிஜமாகவே அப்பெண் துன்புறுத்தப்பட்டாரா என்று போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டும்.


Barakat Ali
பிப் 19, 2025 11:08

பரிதாபம் .......


முருகன்
பிப் 19, 2025 09:57

கடவுளின் குழந்தை


sankaran
பிப் 19, 2025 09:09

அதுல் சுபாஷ்.. தேடி பார்க்கவும்.. அப்படியே ஆப்போசிட்...


ராஜ்
பிப் 19, 2025 07:46

UP MP இந்திக்காரர்கள் இருவரும் கொடூரமானவர்கள் மனசாட்சி இல்லாத மிருகங்கள் பெண்களை அடிமையாக நடத்துவார்கள். இவர்களுக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடா. ஐந்து வயதில் குழந்தை இருக்கும்போது மனைவியை அடித்து கொலை செய்து தூக்கில் போட்டது மகாபாதக மனசாட்சியில்லாத மிருகம். இந்திக்கார பெண்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் ஏழைகளாக இருக்கின்றனர் மனோ தைரியம் இல்லை விழிப்புணர்வு இல்லை அடிமையாகவே நடத்தப்படுகிறார்கள்.


Anbuselvan
பிப் 19, 2025 10:36

எதையும் அங்கங்கே நிகழும் நிகழ்வுகளால் பொதுப்படுத்த முடியாது. எப்போதாவது இங்கே தமிழகத்திலும் ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்கார நிகழ்வு நடக்க வில்லையா? சில பள்ளிகளில் ஆசிரியர்கள் அல்லது தலைமை ஆசிரியர்கள் மாணவிகளை பாலியல் தொல்லை கொடுப்பதில்லையா? கள்ள காதலன் அல்லது கள்ள காதலி மனைவியையோ அல்லது கணவனையோ கொலை செய்ததாக நாம் செய்தி தாள்களில் படிப்பதில்லையா? அதற்காக தமிழகம் ஒரு மிருகவெறி கொண்ட மாநிலம் என்று எவராவது சொன்னால் அதை எப்படி நாம் ஏற்க முடியாதோ அதே போலத்தான் இதுவும் நண்பரே.


லால்
பிப் 19, 2025 07:00

ம.பி மாடல். வரதட்சணை கொடுமை. இந்தியாவுக்கே மாடலாக திகழுது.


Amar Akbar Antony
பிப் 19, 2025 07:39

குடிகாரகணவன்கள் எத்தனைபேர் கொடுங்கோலர்களாக மனைவியை அடிப்பதும் கொள்வதுமாக இருக்கிறார்கள்? தமிழ்நாட்டிலில் என்று எழுத மனம் ஒவ்வமாட்டேங்குது திராவிட.


திகழ் ஓவியன்,Ajax, Ontario
பிப் 19, 2025 07:43

என்னப்பா லால்? என்னவோ உங்க இரும்புக்கர மாடல் தான் அகில உலக வழிகாட்டி மாடல்ன்னு கூவிகிட்டு இருந்தானுங்க...எப்போ மாற்றினார்கள்...? உனக்கு வரவேண்டிய வரும்படி 200 வரலையா?


Raman
பிப் 19, 2025 07:53

Typical Rs 200 model ...


Kasimani Baskaran
பிப் 19, 2025 06:33

சந்தீப் போன்ற ஜென்மங்களை அதே முறையில் கழுத்தை நெரித்து கொல்ல வேண்டும்.


Nandakumar Naidu.
பிப் 19, 2025 05:41

மனிதாபமானம் இல்லாத மிருகங்கள். இவர்களை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை