உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலித் சமூகத்தினர் வீடுகள் எரிப்பு: பீஹாரில் பதற்றம்

தலித் சமூகத்தினர் வீடுகள் எரிப்பு: பீஹாரில் பதற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நவாடா: பீஹாரில் நில தகராறில் தலித் சமூகத்தினரின் 21 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில், மற்றொரு தலித் பிரிவினர் 15 பேர் கைது செய்யப்பட்டனர். பீஹாரில் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்கு, நவாடா மாவட்டத்தில் உள்ள மாஞ்சி தோலா கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மஞ்சி, ரவிதாஸ் பிரிவினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும், இதே பகுதியில் வசித்து வரும் பஸ்வான் என்ற தலித் சமூக பிரிவினருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு மோதல் ஏற்பட்டது.இதையடுத்து, மஞ்சி மற்றும் ரவிதாஸ் பிரிவினரின் 80க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நேற்று நள்ளிரவில் தீ வைக்கப்பட்டது. இதில், 21 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்தபடி வெளியேறினர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. விசாரணை நடத்திய போலீசார், 15 பேரை கைது செய்தனர். மற்றவர்களை கைது செய்ய சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.தீ வைப்பு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் நிதீஷ்குமார், “சட்டத்தை கையிலெடுப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர்,” என கூறியுள்ளார். உண்மை கண்டறியும் குழுவை, சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தும்படியும் அவர் உத்தரவிட்டார்.இதற்கிடையே, தீ வைப்பு சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பீஹார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆசாமி
செப் 20, 2024 06:06

ஏன்யா எரிச்சதும் தலித் பிரிவுதான. அப்புறம் என்ன ரோ த்துக்கு தலையங்கத்தை அரைகுறையா போடற. வன்மமா ?


naranam
செப் 20, 2024 04:56

ஒரு தரப்பினருமே தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்று செய்தியில் கூறப்பட்டிருக்கிறது. பிறகு ஏன் தலித் வீடுகள் எரிக்கப்பட்டன என்று மக்களை திசை திருப்பும் விதமாக செய்தி வெளியிடவேண்டும்?


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 20, 2024 11:03

பத்திகிட்டு எரிவதை வேடிக்கை பார்ப்பது பத்திரிகை தர்மம் .....


அப்பாவி
செப் 20, 2024 01:40

அவிங்களுக்குள்ளேயே உசந்தவங்க, தாழ்ந்தவங்க வித்தியாசம் இருக்கும் போல. நித்தீஷ் கூட வீராப்பாக நடவடிக்கை எடுப்போம்னு பேசுறாரு.


முக்கிய வீடியோ