உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அணை திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

அணை திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பாலக்காடு; கேரளாவில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.இந்நிலையில், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள, மங்கலம் ஆற்றின் துணை ஆறான செருகுன்னபுழா ஆற்றின் குறுக்கே, ஆலத்துார் தாலுகாவில் கட்டப்பட்டு உள்ள மங்கலம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.நேற்று காலை நிலவரப்படி, 77.88 மீட்டர் உயரம் உள்ள மங்கலம் அணையில், 76.52 மீட்டருக்கு நீர்மட்டம் உயர்ந்தது. இதையடுத்து அணை பாதுகாப்பை கருதி, கேரளா பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிவுரையின்படி, அணையை திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.அதன்படி, நேற்று காலை, 11:00 மணிக்கு மங்கலம் அணையின், 6 மதகுகள் வழியாக, 5 செ.மீ., உயரத்துக்கு உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முன் எச்சரிக்கையாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி