உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் மீது நடவடிக்கை : பீஹார் மாவட்ட நிர்வாகம் முடிவு

ராகுல் மீது நடவடிக்கை : பீஹார் மாவட்ட நிர்வாகம் முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரில் சிஆர்பிசி சட்டத்தின் 163வது விதிகளை மீறியதாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க தர்பங்கா மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.பீஹார் சட்டசபைக்கு இந்தாண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அங்குள்ள தேசிய மற்றும் மாநில கட்சிகள் தயாராகி வருகின்றன. அந்த வகையில், காங்கிரசின் நிகழ்ச்சி ஒன்றை துவக்கி வைக்க பீஹாரின் தர்பங்கா மாவட்டத்திற்கு சென்ற ராகுல், அங்குள்ள அம்பேத்கர் மாணவர் விடுதிக்கு செல்ல திட்டமிட்டார். மாணவர்கள் மத்தியில் உரையாற்ற திட்டமிட்டு இருந்தார். ஆனால், வழியில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கு கண்டனம் தெரவித்த ராகுல், இந்திய ஒரு ஜனநாயக நாடு. அரசியலமைப்பால் நடத்தப்படுகிறது. சர்வாதிகாரத்தால் அல்ல. சமூக நீதி மற்றும் கல்விக்காக குரல் எழுப்புவதை யாராலும் தடுக்க முடியாது. தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களைச் சந்திக்க பீஹார் அரசு என்னைத் தடுக்கிறது. நிதீஷ்குமார் பயப்படுவதுஏன் எனக்கூறியிருந்தார்.ராகுல் தடுத்து நிறுத்தப்பட்டதை கண்டித்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில், சிஆர்பிசி சட்டத்தின் 163வது விதிகளை மீறியதற்காக ராகுல் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

lana
மே 16, 2025 15:19

நீங்கள் அரசியல் செய்ய மாணவர்கள் விடுதி தான் கிடைத்ததா. இதே எல்லா அரசியல் கட்சிகளும் செய்தால் ஏற்றுக் கொள்வார்கள் ஆ. இதை அனுமதித்தால் மாணவர்கள் படிக்க முடியாது.


Kasimani Baskaran
மே 16, 2025 04:07

பொதுவாகவே நிதிமன்றம் காங்கிரசுக்கு என்றும் தனியாக வாலாட்டும் தன்மையுடையது..


Karthik
மே 15, 2025 22:35

இத்தாலியின் அன்டானியோ மைனோ வும் பப்பு வும் ஏற்கனவே ஜாமீன்ல தான் வெளியில சுத்தி திரிஞ்சுக்கிட்டு இருக்குதுங்க..


கல்யாணராமன்
மே 15, 2025 21:39

உள்ளே தள்ளவும்


மீனவ நண்பன்
மே 15, 2025 22:11

அவரால முடியாது ..


Karthik
மே 15, 2025 22:42

இந்தப் பப்புவை உள்ளே தள்ள நீதிமன்றம் ஒத்துக்காது. காந்தி தாத்தாவின் செல்ல பேரன் ங்கிற காரணத்தால் நூறு ரூபாய் காந்தி தாளையோ 200 ரூபாய் காந்தி தாளையோ அபராதமாக நீதிமன்றத்துல கொடுத்துட்டு சுதந்திரமாக வெளியே போகலாம் னு உத்தரவிடும்


sankaranarayanan
மே 15, 2025 21:09

வெளியே தலைகாட்டாமல் இருக்க இவரை புடிச்சு உள்ளே போடுங்கப்பா... அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் நீதிமன்றம் ஜாமீன் எல்லாவற்றையும்


RAMAKRISHNAN NATESAN
மே 15, 2025 21:01

பேச்சு வேடிக்கையா இருக்கு ........... ஜனநாயக நாடா இருந்தா என்ன ? பொறுப்பான பதவி வகிக்கும் ஒருவர் சட்டத்தை மதிக்க அவசியமில்லையா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை