உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி

மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி

கோல்கட்டா: மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில், கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 20 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.மேற்குவங்க மாநிலத்தில் இமயமலைக்கு உட்பட்ட டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் அலிப்பூர்துவார் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2rr0j990&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

நிலச்சரிவு

டார்ஜிலிங் மாவட்டத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி, இதுவரை 20 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலம் இடிந்து 6 பேர் பலி

டார்ஜிலிங் மாவட்டத்தில் மிரிக் என்ற இடத்தில் கனமழை காரணமாக பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. மலைப்பகுதி மாவட்டங்களில் இரவு முழுவதும் இடைவிடாமல் பெய்து வரும் மழையால், அண்டை மாவட்டமான ஜல்பைகுரியின் மல்பஜாரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்கத்தில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ததாகவும், பன்குராவில் அதிகபட்சமாக 65.8 மி.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக, பாலம் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்

இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். டார்ஜிலிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Barakat Ali
அக் 05, 2025 11:19

நம்மைப்போல அவர்களும் பழம்பெருமை பேசுபவர்கள் ..... பழமை என்கிற பெயரில் பயன்படுத்தத் தகாதவற்றைப் பயன்படுத்துபவர்கள் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை