உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டேட்டிங் செயலி விபரீதம் 700 பெண்களிடம் பணம் பறித்த வாலிபர் சிக்கினார்

டேட்டிங் செயலி விபரீதம் 700 பெண்களிடம் பணம் பறித்த வாலிபர் சிக்கினார்

புதுடில்லி,:அமெரிக்காவைச் சேர்ந்த மாடலிங் அழகி போட்டோவை, 'டேட்டிங்' மொபைல் போன் செயலியில் 700 பெண்களுடன் நெருங்கிப் பழகி, பணம் பறித்த 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார்.டில்லி மாநகரப் போலீசின் மேற்கு மாவட்ட துணைக் கமிஷனர் விசித்ர வீர் கூறியதாவது:கிழக்கு டில்லி ஷகர்பூரைச் சேர்ந்தவர் பிஷ்ட்,22. இவர், 'பம்பிள்' மற்றும் 'ஸ்னாப்சாட்' ஆகிய மொபைல் போன் செயலியில், அமெரிக்க நாட்டைட் சேர்ந்த மாடலிங் அழகி போட்டோவை பயன்படுத்தி போலி கணக்கு உருவாக்கினார். அதன் வாயிலாக 700 பெண்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். குறிப்பாக 18 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுடன் மொபைல் போன் எண்களை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமாகப் பழகினார். வாட்ஸாப் வாயிலாகவும் அவர்களுடன் சாட் செய்து வந்தார்.இளம்பெண்கள் தங்கள் தனிப்பட்ட மற்றும் அந்தரங்க படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொண்டனர். அவ்வாறு பகிர்ந்த பெண்களிடம், அவற்றை சமூக ஊடகங்களிலும், 'டார்க் வெப்' இணையதளத்திலும் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்தார்.டிசம்பர் 13ம் தேதி, டில்லி பல்கலை மாணவி ஒருவர், சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரில், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் போலீசில், குற்றவாளியை தொடர்ந்து கண்காணித்து பிடிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. குற்றவாளி, பிஷ்ட் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கிழக்கு டில்லி ஷகர்பூரில் வசித்த பிஷ்ட் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டார்.இந்நிலையில்,ம் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டார். ​இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச மொபைல் எண்ணைப் பயன்படுத்தி டேட்டிங் மற்றும் அரட்டை செயலிகளில் பெண்களை வீழ்த்தியதை ஒப்புக் கொண்ட அவர், ஆரம்பத்தில் இதை பொழுதுபோக்காக செய்துள்ளார். நாளடைவில், பணம் பறிக்கத் துவங்கியுள்ளார். ஷகர்பூரில் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பிஷ்ட்டின் தந்தை தனியார் நிறுவன டிரைவர். சகோதரி குருகிராம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். பட்டதாரியான பிஷ்ட், மூன்று ஆண்டுகளாக நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப பணியாளராக பணிபுரிகிறார்.டில்லி மற்றும் புறநகரில் மட்டும் 60க்கும் மேற்பட்ட பெண்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். அவரிடம் இருந்து மொபைல் போன்கள், லேப்-டாப் மற்றும் 13 கிரெடிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இரண்டு வங்கிக் கணக்குகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை