உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / களியில் விஷம் கலந்து மாமியார் கொலை கள்ளக்காதலுக்காக மருமகள் வெறி

களியில் விஷம் கலந்து மாமியார் கொலை கள்ளக்காதலுக்காக மருமகள் வெறி

சிக்கமகளூரு : திருட்டு வழக்கை விசாரிக்க வந்த போலீசார், மூதாட்டி கொலையானதை கண்டுபிடித்தனர். களி உருண்டை யில் விஷம் கலந்து கொடுத்து, மாமியாரை கொன்ற மருமகளின் நாடகம் அம்பலமானது. கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டத்தின், அஜ்ஜம்புரா தாலுகாவை சேர்ந்தவர் ரமேஷ், 40. இவரது மனைவி அஸ்வினி, 35. தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்களுடன் ரமேஷின் தந்தை மல்லேஷ், தாய் தேவீரம்மா, 75, ஆகியோரும் வசித்து வந்தனர். கடந்த 11ம் தேதி இரவு உடல் நலக்குறைவால் தேவீரம்மா இறந்தார். சந்தேகம் மறுநாள் வீட்டில் இருந்த 100 கிராம் தங்க நகைகள், 50,000 ரூபாய் ஆகியவை மாயமாகின. இதுகுறித்து அஜ்ஜம்புரா போலீசில் ரமேஷின் தங்கை வீணா புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர். முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், அஸ்வினியின் நடவடிக்கைகளில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் தேவீரம்மாவை விஷம் வைத்து அஸ்வினி கொன்றது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: அஸ்வினிக்கு, அதே கிராமத்தைச் சேர்ந்த ஆஞ்சநேயா, 26, என்ற வாலிபருடன் அறிமுகம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவரை தன் நண்பர் என கூறிக்கொண்டார். யாரும் இல்லாத நேரங்களில், ஆஞ்சநேயாவை வீட்டுக்கு பலமுறை வரவழைத்துள்ளார். வீட்டில் இருந்த தங்க நகைகள் ஒவ்வொன்றாக திருடி, தன் கள்ளக்காதலனுக்கு அஸ்வினி கொடுத்து உள்ளார். மருமகளின் நடத்தையில் தேவீரம்மாவுக்கு சந்தேகம் வந்தது. இதை அஸ்வினி அறிந்தார். கடந்த 11ம் தேதி இரவு கணவருக்கும், மாமனாருக்கும் உணவில் துாக்க மாத்திரைகள் கலந்து கொடுத்துள்ளார். மாமியாருக்கு களி உருண்டையில், துாக்க மாத்திரை யுடன் விஷமும் கலந்து கொடுத்து உள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்தில், தேவீரம்மா வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினரிடம் தன் மாமியாருக்கு உடல் நிலை சரியில்லை; மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக நாடகமாடினார். ஆஞ்சநேயாவை காருடன் வர வழைத்து, மாமியாரை ஏற்றிக் கொண்டு, மருத்துவமனைக்கு செல்வதாக கூறி புறப்பட்டனர். மருத்துவமனைக்கு செல்லாமல், இரவு முழுதும் காரிலேயே ஊரை சுற்றினர். தேவீரம்மா இறந்ததை உறுதி செய்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தேவீரம்மாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர். கொலை நாடகம் அதன் பின் வீட்டுக்கு வந்து, சிகிச்சை பலனின்றி மாமியார் இறந்ததாக அஸ்வினி அழுது புரண்டு >ள்ளார். நகை, பணம் திருட்டு குறித்து, ரமேஷின் தங்கை வீணா கேட்ட போது, தனக்கு எதுவும் தெரியாது என அஸ்வினி கூறியுள்ளார். விசாரணையில், கொலை நாடகம் அம்பலமானது. வரும் நாட்களில் கணவரையும், மாமனாரையும் விஷம் கொடுத்து கொல்ல அவர் திட்டமிட்டதும் தெரிந்தது. அஸ்வினியும், ஆஞ்சநேயாவும் நேற்று கைது செய்யப்பட்டனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

raja
ஆக 25, 2025 06:53

இதுதாண்டா திராவிட மாடல் என்று முதல்வர் பெருமை கொள்ளலாம்....இதை தமிழ் காலாசாரத்தில் திணிக்கத்தான் இவ்வளவு நாடகம் ஸ்டிக்கர் ஓட்டுதல் எல்லாம் தமிழா...


R. SUKUMAR CHEZHIAN
ஆக 24, 2025 17:53

எல்லாம் களி காலம்.


Vasan
ஆக 24, 2025 12:48

அ சிங்கப் பெண்னே


m.arunachalam
ஆக 24, 2025 12:19

ரொம்ப ஆட்டம் போட்டுக்கிட்டு அலையறாளுங்க . இதை ஒழிக்க வழி கண்டுபிடிக்க வேண்டும் .


m.arunachalam
ஆக 24, 2025 12:17

சாகச திலகம். பெண் கல்வி, பெண்களின் முன்னேற்றம். பெண்கள் படிக்காமல் இருந்தால் நல்லது .