உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிறப்பை விட இறப்பு விகிதம் அதிகம் ; நாட்டில் முதலிடத்தில் தமிழகம்

பிறப்பை விட இறப்பு விகிதம் அதிகம் ; நாட்டில் முதலிடத்தில் தமிழகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாட்டில் 49 மாவட்டங்களில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகரித்து காணப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2021ம் ஆண்டின் இந்திய குடிமைப்பதிவு தரவுகளை ஆய்வு செய்யும் போது, மக்கள் தொகை வளர்ச்சி பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. தென் மாநில மாவட்டங்களில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தப் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு தமிழகத்தில் எந்த ஒரு மாவட்டத்திலும் பிறப்பு விகிதத்தை விட, இறப்பு விகிதம் அதிகமாக பதிவாகவில்லை. ஆனால், 2021 நிலவரப்படி, மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில் (அப்போதைய மாவட்ட எண்ணிக்கை) 17 மாவட்டங்களில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இந்த விகிதமானது, கிராமப்புறங்களில் மட்டுமல்ல, நகர்ப்புறங்களிலும் அதிகரித்து காணப்படுகிறது. நாட்டில், 2019ம் ஆண்டு பிறப்பை காட்டிலும் இறப்பு விகிதம் அதிகம் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை, 2021ம் ஆண்டில் 7 மடங்கு அதிகரித்துள்ளது. 2019ல் 7 மாவட்டங்களாக இருந்த இந்த எண்ணிக்கை, 49 ஆக உயர்ந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் 75 மாவட்டங்களிலும், மத்திய பிரதேசத்தில் உள்ள 51 மாவட்டங்களிலும் இறப்பு விகிதத்தை விட பிறப்பு விகிதம் அதிகம் உள்ளது. கர்நாடகாவில் உள்ள 30 மாவட்டங்களில் 7 மாவட்டங்களிலும், கேரளாவில் 14 மாவட்டங்களில் 6 மாவட்டங்களிலும் இறப்பு விகிதம் அதிகம் காணப்படுகிறது.இதற்கு அடுத்தபடியாக, குஜராத்தில் 5 மாவட்டங்களும், மஹாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி, கோவா ஆகிய மாநிலங்களில் தலா 2 மாவட்டங்களிலும், தெலங்கானா, ஒடிசா, மணிப்பூர், ஆந்திரா, ஹிமாச்சல், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மாவட்டங்களிலும் பிறப்பு விகிதத்தை காட்டிலும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Ramesh Sargam
மே 31, 2025 19:42

டாஸ்மாக் குடித்து இறந்தவர்கள் சதவிகிதம் அதிலும் அதிகம். கொலையுண்டு இறந்தவர்கள் சதவிகிதம் அதிகம். ஆனால் முதல்வரை கேளுங்கள், தமிழகம் அமைதியான மாநிலம் என்று வாய் கூசாமல் பொய் பேசுவார்.


vivek
மே 31, 2025 13:50

திராவிட சொம்புகள்.... இளம் விதவைகள் சாட்சி.....


karthik
மே 31, 2025 12:16

ஆமா மாநிலம் முழுதும் ஆறாக ஓடும் மது.. தினம் 10 கொலை.. 10 சாலை விபத்து ... இப்படி எதிலுமே விழிப்புணர்வு இல்லாமல் மக்களை ஊசியில் மயக்கி வைத்திருக்கும் அரசு.. பிறகு எப்படி


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 31, 2025 11:58

பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கு அரசைக் குறைகூற முடியாது ... குடி, போதைப்பொருள் பயன்பாடு போன்ற ஒழுங்கீனங்கள், நோயெதிர்ப்புக் குறைபாடு, பரம்பரை, நவீன வாழ்க்கை முறை தரும் மனவழுத்தம் இப்படி எத்தனையோ காரணங்கள் உண்டு ......


PATTALI
மே 31, 2025 15:51

அதிக இறப்புகள் நடப்பது அரசின் தவறான செயல்பாடுகளால்தான்.


Venkat.
மே 31, 2025 11:54

நாளை அரசின் முழு பக்க விளம்பரம் எதிர் பார்க்கலாமா?. திராவிட மாடல் அரசின் சாதனை.இந்தியாவில் முதலிடம்.


chennai sivakumar
மே 31, 2025 11:45

இது நம்பும்படியாக இல்லை. குழந்தைந திருமனங்கள் நிறைய நடக்கிறது. இரு நாட்களுக்கு முன்னர் வீட்டிற்கு அருகில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். தாய்மார்கள் ஆகப்போகும் பெண்கள் கூட்டம் for செக்க்குப் . தலையே எனக்கு சுற்றி விட்டது. ஐயோ ஐயோ இவ்வாறு ஜனத்தொகை அதிகரித்தால் omg என்று எண்ணினேன். ஆனால் செய்தி தலை கீழாக உள்ளது


Padmasridharan
மே 31, 2025 11:30

இந்திய பொருளாதாரத்தை வளர்க்க பிள்ளைகளை 1/2 பெத்துக்க சொன்னாங்க. ஆனா சொன்ன அரசியல்வாதிகளோ ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை வைத்துக்கொண்டு தலா ஒவ்வொருவருக்கும் 1/2 பிள்ளைகளை தந்துவிட்டார்கள். அவங்க குடும்பங்கள் வளமா இருக்கு, மத்த மக்களின் வாழ்க்கையே வாரிசுகள் இல்லாம முடியப்போகுது. குடியும் குடித்தனமும் தமிழ்நாடு முதலிடம்தான் இதை மாற்றப்போவது யாரு. .


senthilanandsankaran
மே 31, 2025 11:22

திமுகவின் தரம் வாய்ந்த டாஸ்மாக் சரக்குகள் தினம்தோறும் பல்லாயிரம் உயிர்களை குடித்து வேட்டையாடி வருகிறது...அப்புறம் எங்க பர்த் ரேட் வரும்.அவங்க கூட்டணி கட்சிக்கே இது பாதகம்.


Svs Yaadum oore
மே 31, 2025 11:09

எல்லாம், திராவிட மகிமைதான் ...கார்பொரேட் சாராய கம்பெனி வோட்டு போட்டு மந்திரிகளாக பதவி கொடுத்தால் இப்படித்தான். அதனுடன் மிட் நைட் பிரியாணி , பக்கெட் பிரியாணி என்று கிலோ 75 ரூபாய் பிரியாணி சாப்பிட்டால் இன்னும் சுத்தமாக துடைத்து விடும் ...


venugopal s
மே 31, 2025 10:37

குடும்பக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கும் மாநிலங்களில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகமாக இருப்பது இயற்கையே!


புதிய வீடியோ