உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய பெருங்கடல் பாதுகாப்புக்கு பி-8ஐ விமானம்; ரூ.35,000 கோடியில் அமெரிக்காவிடம் வாங்க முடிவு

இந்திய பெருங்கடல் பாதுகாப்புக்கு பி-8ஐ விமானம்; ரூ.35,000 கோடியில் அமெரிக்காவிடம் வாங்க முடிவு

புதுடில்லி: இந்திய பெருங்கடலில் கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் நடமாட்டத்தை கண்டறியும் வகையில், 35,000 கோடி ரூபாய் மதிப்பில், அமெரிக்காவிடம் இருந்து, 'பி-8ஐ' ரகத்தைச் சேர்ந்த ஆறு கண்காணிப்பு விமானங்களை இந்தியா வாங்குகிறது. இதற்கான ஒப்பந்தத்தை இறுதிசெய்ய, அமெரிக்க பிரதிநிதிகள் குழு இன்று டில்லி வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=iupwqw2t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும்படி அறிவுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப், இதற்காக இந்திய இறக்குமதி பொருட்கள் மீது 50 சதவீத வரியை விதித்தார். இதனால், இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டது. எனவே, அமெரிக்காவிடம் இருந்து ராணுவ தளவாடங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தங்களை இந்தியா ரத்து செய்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் இந்தியாவுடன் மீண்டும் சுமூக உறவை மேம்படுத்த அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அதை உறுதிபடுத்தும் விதமாக, பிரதமர் மோடியுடன் பேச்சு நடத்த ஆவலாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து ஆறு 'பி-8ஐ' ரக கண்காணிப்பு விமானங்கள் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பேச்சு நடத்த அமெரிக்க குழு இன்று டில்லி வருகிறது. 'பி-8ஐ' விமானங்களை தயாரிக்கும் போயிங் நிறுவன பிரதிநிதிகள், அமெரிக்க ராணுவ அதிகாரிகள் அடங்கிய இக்குழு இந்திய அதிகாரிகளை சந்தித்து 35,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை இறுதி செய்யவுள்ளது. தற்போது இந்தியாவிடம், 'பி-8ஐ' ரக விமானங்கள் 12 இருக்கின்றன. அதில் முதல் எட்டு விமானங்கள் கடந்த 2009ல் வாங்கப்பட்டு, இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டன. அடுத்த நான்கு விமானங்கள் 2016ல் வாங்கப்பட்டன. இந்திய பெருங்கடல் கண்காணிப்பு பணிக்கு மேலும் 10 விமானங்கள் தேவைப்படுவதாக, மத்திய அரசிடம் கடற்படை கேட்டிருந்தது. அதன்படி, கடந்த 2019ல் ஆறு விமானங்கள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர், 2021 மே மாதம், இந்தியாவுக்கு பி8 - ஐ ரக விமானத்தை விற்க அமெரிக்க அரசு அனுமதிஅளித்தது. அதன் அடிப்படையில் ஒப்பந்தத்தை இறுதி செய்ய அமெரிக்க பிரதிநிதிகள் குழு இன்று டில்லி வருகிறது.

114 ரபேல் விமானங்கள்

'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையில் இந்திய கடற்படைக்கு ரபேல் போர் விமானங்கள் பெரிதும் கைகொடுத்தன. இதையடுத்து, 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் மேலும் 114 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், பிரான்ஸின் டஸ்ஸால்ட் விமான போக்குவரத்து நிறுவனத்துடன் ரபேல் போர் விமானங்கள் வாங்கப்படவுள்ளது. இந்த போர் விமானத்துக்கான பாகங்களில், 60 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும். இதற்காக ஹைதராபாதில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகளுக்கான பணிமனையை அமைக்கவும் டஸ்ஸால்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பிராந்திய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்க புதிய போர் விமானங்களை அவசரமாக கொள்முதல் செய்ய வேண்டும் என இந்திய விமானப்படை கோரியதால், இம்முடிவு எடுக்கப்பட்டது.

விமானத்தின் சிறப்பம்சங்கள்

பி8 - ஐ ரோந்து போர் விமானம் நீண்டதுார கடல் கண்காணிப்புக்கு பயன்படக்கூடியது கடலுக்குள் எத்தனை ஆழத்தில் நீர்மூழ்கிக் கப்பல் மறைந்திருந்தாலும், அதை இந்த விமானம் எளிதாக அடையாளம் கண்டு தாக்கும் அதிகபட்சமாக மணிக்கு 789 கி.மீ., வேகத்தில், 12,496 அடி உயரத்தில் பறக்கக் கூடியது வானில் இருந்து தரையில் இருக்கும் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை, இதன் இறகுகளில் பொருத்த முடியும் ராணுவ தளவாடங்கள், வீரர்கள் உட்பட மொத்தம் 85,139 கிலோ எடையை சுமந்து செல்லும் புயல், மழை, இரவு, பகல் என எந்தவொரு பருவத்திலும், காலத்திலும் துல்லியமாக செயல்படும் வகையில் இந்த விமானத்தில் ரேடார் பொருத்தப்பட்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Venugopal S
செப் 16, 2025 11:07

ஊருக்குத் தான் உபதேசம் உனக்கும் எனக்கும் இல்லை, அப்படித்தானே?


ஜெய்ஹிந்த்புரம்
செப் 16, 2025 09:48

ரூ.35,000 கோடியில் அமெரிக்காவிடம் வாங்க முடிவு - ரூ.35,000 கோடி தண்டச்செலவை பெட்ரோலிய வியாபாரத்தில் லட்சம் கோடி கொள்ளை லாபம் அடித்த அம்பானி கிட்டேருந்து வசூல் பண்ணுவாரா மோடிஜி?


Ramesh Sargam
செப் 16, 2025 08:07

இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதித்துள்ள அமெரிக்காவிடம் இருந்து ஏன் வாங்கவேண்டும்? டிரம்புக்கு பயப்படுகிறோமா…?


ஜெய்ஹிந்த்புரம்
செப் 16, 2025 09:49

தைரியமா 35,000 கோடி வீசி எறிகிறாராக்கும்


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 16, 2025 09:55

ஒப்பந்தம் 2019 இல் போடப்பட்டது. 2021 இல் அனுமதி பெற்றது. இப்போது உள்ள பிரச்சினைக்கும் இந்த விஷயத்திற்கும் சம்பந்தம் இல்லை. இதற்கு மாற்று ஏற்பாடு ஏதாவது தங்களிடம் இருந்தால் விமானப்படை அதிகாரிகளை தொடர்புகொள்ளவும்.


KOVAIKARAN
செப் 16, 2025 07:39

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நம் நாட்டின்மீது விதிக்கப்பட்டுள்ள 50% வரியைக் குறைத்தால் மட்டுமே நம் நாடு அவர்களிடமிருந்து இந்த விமானங்களை வாங்க ஒப்பந்தம் போடுவோம் என்று அழுத்தமாகக் கூறவேண்டும்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 16, 2025 09:54

“என் கேரக்டைரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறியே”


அப்பாவி
செப் 16, 2025 06:30

விமானம் தான் அமேரிக்கா தயாரிப்பு. அதில்.போடும் ஏவியேஷன் பெட்ரோல்.ரஷியாவிலிந்து தான் பொடுவோம். ஆமா சொல்லிப்பிட்டேன். அடிபணிய மாட்டோம்.


Mani . V
செப் 16, 2025 05:35

அமெரிக்காவிடம் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று சொன்னது எல்லாமே பொய்யா கோப்பால்? எது இது பொதுமக்களுக்கு மட்டும்தானா? சரி, அந்த விமானங்களின் தரவுகளை அமெரிக்காக்காரனும் பார்க்க முடியாது என்று ஏதும் உத்திரவாதம் உண்டா? அமெரிக்கா தயாரித்துக் கொடுக்கும் விமானத்தில் அவர்கள் இந்தியாவை வேவு பார்க்கும் கருவிகளை ரகசியமாகப் பொருத்தி வேவு பார்த்தால் என்ன செய்வீர்கள் கோப்பால்?


Priyan Vadanad
செப் 16, 2025 05:26

நமது ஏற்றுமதியாளர்கள் தங்கள் தொழிலை சிறப்பாக நடத்தவும் உழைப்போர் வேலை மற்றும் ஊதியமிழக்காமல் இருக்கவும் இது சிறப்பான ஒரு நடவடிக்கை.


Priyan Vadanad
செப் 16, 2025 05:19

பாலை வாங்கி விற்று மீன் வாங்கி பூனைக்கு போட்டால் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 16, 2025 09:56

நைஸ்.


Kasimani Baskaran
செப் 16, 2025 03:53

ஸ்கேம்கிரஸ் நாட்டுக்கு பல கெடுதல்களை செய்து விட்டு சென்றது. அதை சரிக்கட்டவே பல மாமாங்கங்கள் காத்திருக்க வேண்டும். இன்னும் கூட பல கெடுதல்களை செய்ய காத்திருக்கிறது.


சமீபத்திய செய்தி