உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்காவுக்கு தபால் சேவை தற்காலிகமாக நிறுத்த முடிவு

அமெரிக்காவுக்கு தபால் சேவை தற்காலிகமாக நிறுத்த முடிவு

புதுடில்லி: அமெரிக்காவுக்கான தபால் சேவையை, தற்காலிகமாக நிறுத்த இந்திய தபால் துறை முடிவு செய்துள்ளது. 'ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும்' என வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டில் இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கு, 50 சதவீத வரி விதித்தார். அதிபர் டிரம்பின் இந்த முடிவால், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் உரசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவுக்கான தபால் சேவையை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள இந்திய தபால் துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து, மத்திய தொலை தொடர்பு துறை வெளியிட்ட அறிக்கை: அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து வகை தபால் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. எனினும், 100 அமெரிக்க டாலர் வரையிலான பரிசுப் பொருட்களுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. இந்திய தபால் பார்சல்களுக்கு 800 அமெரிக்க டாலர் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதை வரும் 29ம் தேதி முதல் திரும்ப பெறப் போவதாக அமெரிக்க அரசு கடந்த மாத இறுதியில் அறிவித்தது. இத னால், இந்திய தபால் பார்சல்களை கையாள முடியாத சூழல் இருப்பதாக அமெரிக்க விமான நிறுவனங்கள் வருத்தம் தெரிவித்தன. இதன் காரணமாக, நாளை முதல் அமெரிக்காவுக்கு அனைத்து விதமான தபால் சேவைகளை தற்காலிகமாக நிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு தபால் மூலம் பார்சல்கள் அனுப்ப ஏற்கனவே பதிவு செய்திருந்தால், நுகர்வோர் அந்த கட்டணத்தையும், பார்சலையும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ