உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு

ரயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு

புதுடில்லி: புதுடில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 18 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, மக்கள் கூட்டத்தை நிர்வகிக்க, ரயில் நிலையங்களில் நிரந்தரமாக காத்திருப்பு பகுதிகளை உருவாக்கவும், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளாவில் பங்கேற்க செல்வதற்காக, புதுடில்லி ரயில் நிலையத்தில், கடந்த 15ம் தேதி இரவு ஆயிரக்கணக்கான பயணியர் காத்திருந்தனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, ஐந்து குழந்தைகள், ஒன்பது பெண்கள் உட்பட, 18 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டத்தை நிர்வகிக்க, நிரந்தர காத்திருப்பு பகுதிகளை உருவாக்கவும், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து, ரயில்வே வாரியத்தின் மூத்த அதிகாரிகள் கூறியதாவது:

முக்கிய நிகழ்ச்சிகள், பண்டிகைகளின் போது, மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும், 60 ரயில் நிலையங்கள் முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டத்தை நிர்வகிக்க, நிரந்தர காத்திருப்பு பகுதிகள் உருவாக்கப்பட உள்ளன தற்போது பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளா காரணமாக, நாட்டின் பல்வேறு ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதை சமாளிக்க, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம் இதன்படி, முதற்கட்டமாக 60 ரயில் நிலையங்களில், ஏ.ஐ., கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். அதிகளவில் கூட்டம் இருந்தால், இந்த கேமராக்கள் எச்சரிக்கை செய்யும். அதன்படி நாம் திட்டங்களை வகுத்துக் கொள்ளலாம் பிரயாக்ராஜுக்கு செல்ல ரயில் நிலையங்களில் மக்கள் அலைமோதுவதால், அடுத்த ஒரு வாரத்துக்கு, மாலை 4:00 - இரவு 11:00 மணி வரை டிக்கெட் விற்பனை செய்யப்படாது. அதிகளவில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதும், புதுடில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலுக்கு காரணம் என்றும் தெரிய வந்து உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.இதற்கிடையே, டில்லியில் உள்ள ரயில் நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பயணியர் ஒரே நேரத்தில் நடைமேடைகளில் குவியாமல் தடுக்கும் வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுஉள்ளன. 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், டில்லி ரயில் நிலையத்தில் 18 பேர் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

RAVINDRAN.G
பிப் 18, 2025 09:42

இஷ்டத்துக்கு டிக்கெட் விற்று காசு பார்க்கும் ரயில்வே துறை. ஒரு ரயிலில் எத்தனை பேர் செல்லலாம் என்று ரிசர்வேஷன் செய்யப்படும் போது தெரியும். அதேபோல ஓபன் டிக்கெட்டுக்கும் ஒரு செக்லிஸ்ட் மற்றும் லிமிட் வைத்தால் இந்த கூட்டம் கூடுவதை சமாளிக்கலாம்.


நிக்கோல்தாம்சன்
பிப் 19, 2025 09:16

அருமையான கருத்து


நிக்கோல்தாம்சன்
பிப் 18, 2025 09:28

மக்களிடத்தில் சுய ஒழுக்கம் வராமல் வேறுதுவும் கட்டுப்படுத்தாது


RAJ
பிப் 18, 2025 07:09

யாராவது மண்டைய போட்டாதான், கவர்மெண்டுக்கு பல்பு எரியுது.. . அட அப்ரெசெண்ட்டுகளா ...


chennai sivakumar
பிப் 18, 2025 06:37

முதலில் ஜனதொகையை கட்டு படுத்துங்க.மற்றதெல்லாம் அப்புறம். ஹி ஹி ஹி


RS
பிப் 18, 2025 06:15

என்ன செய்வது. ஐயோ பாவம். சில நேரங்களில் மக்களின் தராதாரம் மற்றும் அடிமட்ட மக்கள் இப்படித்தான் பயணிக்க வேண்டும் என்ற சூழல் அரசாங்கத்தின் கைகளிலே உள்ளது. ரயில்வே மந்திரி மற்றும் ரயில்வே உயர்மட்ட அதிகாரிகளை பொது வகுப்பு பெட்டியில் மூன்று நாட்களுக்கு தொலைதூர பயண செய்முறை சோதனைக்கு அனுப்பி வைத்தால் ஒருவேளை அடிமட்ட மக்களின் பயண சூழல் சுதரிக்கப்படலாம்


J.V. Iyer
பிப் 18, 2025 04:40

சொல்லாதீங்க. செய்யுங்க. இந்த ரயில்நிலையங்களில் ரயில் வருவது பற்றி சரியான அறிவிப்பு கிடையாது. இருந்தாலும் ஒலியில் கோளாறு. சரியாக கேட்காது. வந்தவுடன் சொல்லுவாராகள். ஒரு பத்து நிமிடம் முன்னதாதா சொல்லக்கூடாதா? எல்லா சாமான்களையும் படிகளில் தூக்கிக்கொண்டு ஏறுவதற்கு எப்படி முடியும். அந்த ப்ளோட்பாரத்தில் நின்றாலும் எந்த பேட்டி எங்கு நிற்கும் என்று யாருக்கும் தெரியாது. நிற்பதோ ஓரிரு நிமிடம். எவ்வளவு முறை அந்த கோடியில் இருந்து இந்த கோடிக்கு ரிசர்வேஷன் பெட்டியைத்தேடி ஓடி இருக்கிறோம்? கூட்டத்தைப்பார்த்து அதிக நேரம் நிறுத்தக்கூடாதோ? இவர்கள் என்னவோ சரியான நேரத்திற்கு வருவதாக நினைப்பு. ரயில்வே பணியாளர்களுக்கு நிறைய பொறுப்பு வேண்டும், பயிற்சி வேண்டும். ஏனோ, தானோ என்று வேலை செய்கிறார்கள். கடுப்பாகத்தான் வருகிறது. எல்லா பெரிய ரயில்நிலையங்களிலும் முதலில் எஸ்குலேட்டர் வையுங்கள்.


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 18, 2025 02:45

ரயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஏ.ஐ - மேலிருந்து கீழ் வரை அறிவற்ற கும்பல். கூட்டத்தை கட்டுப்படுத்த அறிவில்லையாம், இவனுங்க செயற்கை அறிவை புரிஞ்சிக்க போறாங்களாம்.


பிரேம்ஜி
பிப் 18, 2025 07:50

AI என்ன மந்திரக் கோலா? எல்லாம் வெட்டி வேலை! ஆடத்தெரியாதவள் மேடை கோணல் என்று சொல்லும் கதைதான்! நாடு திருந்தாது! அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் புத்தி கெட்ட கூட்டம்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை