உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முடா வழக்கால் ஹரியானாவில் தோல்வி: கோலிவாட் கோபம்

முடா வழக்கால் ஹரியானாவில் தோல்வி: கோலிவாட் கோபம்

பெங்களூரு : ''முதல்வர் சித்தராமையா மீதான, 'முடா' வழக்கு ஹரியானாவில் காங்கிரஸ் எதிர்காலத்தை பாதித்துள்ளது,'' என காங்., மூத்த தலைவர் கோலிவாட் குற்றம்சாட்டினார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

ஹரியானா தேர்தல் பிரசாரத்தின் போது, 'முடா' வழக்கு முக்கியமான விஷயமாக இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது முடா வழக்கை சுட்டிக்காட்டினார். இது காங்கிரசின் தோல்விக்கு காரணமானது. இந்த வழக்கில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என, நான் வலியுறுத்தினேன். இதில் எந்த மாற்றமும் இல்லை.காங்., மேலிடம் என்னை ஏன் எச்சரிக்க வேண்டும். நான் மூத்த தலைவர். கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் நல்லுறவு வைத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு பதிலடியாக, வீட்டுவசதி துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறுகையில், ''முடா வழக்கில் முதல்வர் சித்தராமையா, ராஜினாமா செய்ய வேண்டும் என, கோலிவாட் கூறியுள்ளார். முதல்வரை ராஜினாமா செய்ய சொல்ல இவர் யார். முதல்வர் ராஜினாமா செய்வது என்ற பேச்சுக்கே இடம் இல்லை.''அவர் எந்த தவறும் செய்யவில்லை. கட்சி மேலிடம் அவருக்கு ஆதரவாக உள்ளது. சித்தராமையா பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என, சோனியா, ராகுல், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Sam Dev
அக் 10, 2024 21:45

சித்தராமையாவுக்கோ ஹரியானா எலக்ஷனுக்கோ என்ன சம்பந்தமிருக்கு?


sankaranarayanan
அக் 10, 2024 09:12

இவர்களுக்கு மக்கள் ஆதரவு தேவை இல்லை ஆனால் கட்சி மேலிடம் அவருக்கு ஆதரவாக உள்ளது. சித்தராமையா பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என, சோனியா, ராகுல், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளனர், அது ஒன்றே போதும் அவர்கள் எல்லா மாநிலங்களிலும் இனி வரிசையாக தோற்பதற்கு


நிக்கோல்தாம்சன்
அக் 10, 2024 05:28

சித்தராமையா டம்மி முதல்வரே , உண்மையான முதல்வர் ஜமீர் அகமது கான் என்பது எனது என்னம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை