உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகின் பிசியான விமான நிலையங்கள்: டில்லிக்கு 9வது இடம்

உலகின் பிசியான விமான நிலையங்கள்: டில்லிக்கு 9வது இடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 2024 ம் ஆண்டில் ,உலகின் 'பிசி'யான விமான நிலையங்களில் டில்லி விமான நிலையத்துக்கு 9வது இடம் கிடைத்துள்ளது.சர்வதேச விமான கவுன்சில் அமைப்பு கடந்த 2024ம் ஆண்டில் உலகின் 20 'பிசி'யான விமான நிலையங்கள் பட்டியலை தயாரித்துள்ளது.இப்பட்டியலில்,அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது. 10,80,67,776 பேரை கையாண்டுள்ளது.2வது இடத்தில் துபாய் விமான நிலையமும்(9,23,31,506 பயணிகளை கையாண்டுள்ளது)3வது இடத்தில் அமெரிக்காவின் டல்லாஸ் விமான நிலையம் (8,78,17,864 பயணிகளை கையாண்டு) உள்ளது.டில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 7,78,20,834 பயணிகளை கையாண்டு 9 வது இடத்தில் உள்ளது.ஜப்பானின் ஹனிடா விமான நிலையம் 4வது இடத்திலும்பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையம் 5வது இடத்திலும்அமெரிக்காவின் டென்வர் விமான நிலையம் 6வது இடத்திலும்துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையம் 7 வது இடத்திலும்அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையம் 8 வது இடத்திலும் , சீனாவின் ஷாங்காய் விமான நிலையம் 10வது இடத்திலும் உள்ளது.இந்த பட்டியலில் அமெரிக்காவின் 6 விமான நிலையங்கள் இடம்பிடித்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

mohana sundaram
ஜூலை 08, 2025 15:34

முதல் இரண்டு இடத்தில் இருக்கும் விமான நிலையங்களில் 20 கோடி மக்களை கையாண்டுள்ளது. அது எப்படி முதல் 20 இடத்தில் இருக்கும் எல்லா விமான நிலையங்களிலும் சேர்த்து 15.4 கோடி மக்கள் கையாண்டார்கள். கணக்கு எங்கோ உதைக்கிறது.


முக்கிய வீடியோ