உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமைதியாக நடந்து முடிந்தது டில்லி சட்டசபை தேர்தல்

அமைதியாக நடந்து முடிந்தது டில்லி சட்டசபை தேர்தல்

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தல், இன்று அமைதியாக நடந்து முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. 70 தொகுதிகளை கொண்ட டில்லி சட்டசபைக்கு இன்று (பிப்., 05) தேர்தல் நடந்தது. காலை 7:00 மணிக்கு ஓட்டு பதிவு துவங்கி மாலையுடன் நிறைவு பெற்றது. இந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது.அதன் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக்தந்திரிக் ஜன சக்தி கட்சிகள் தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில், 96 பெண்கள் உட்பட 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. வடகிழக்கு டில்லியில் அதிகமாகவும், தென் கிழக்கு டில்லியில் குறைவாகவும் ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது தெரியவந்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qdi56wsa&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

பிரதமர் மோடி வேண்டுகோள்!

இது குறித்து சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை: டில்லி சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளுக்கும் இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இங்குள்ள வாக்காளர்கள் இந்த ஜனநாயக திருவிழாவில் முழு ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓட்டளிக்க வேண்டும். இத்தருணத்தில், முதல்முறையாக ஓட்டளிக்க இருக்கும் அனைத்து இளம் நண்பர்களுக்கும் வாழ்த்துகள். அனைவரும் ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Keshavan.J
பிப் 05, 2025 14:32

Low voting is not good. delhi weather is good. Middle Income and Upper income family should come out and vote. I dont care who wins but voting is Must for everyone


Ray
பிப் 05, 2025 12:41

குதிரை வியாபாரம் காண ஜோரா நடக்கபோகுது என்றுதான் காண்கிறது BASIC PRICE FIXED AT HUNDRED CRORES


SUBBU,MADURAI
பிப் 05, 2025 12:37

இன்று டெல்லியில் நடக்கும் தேர்தலில் 65% சதவீதத்திற்கு மேல் மக்கள் வாக்களித்தால் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. மாறாக 60% சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் பதிவானால் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி பாஜகவை விட சில தொகுதிகள் கூடுதலாக பெற்று வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கடந்த தேர்தல்களில் AAP கட்சி அதிகளவில் தொகுதிகளை பெற்று வெற்றி பெற்றது போல் இந்தமுறை அதிக தொகுதிகளை பெற முடியாது. எனவே டில்லி தேர்தல் பாஜகவிற்கும் AAP கட்சிக்கும் இடையே கடுமையாக போட்டி நிலவும். காங்கிரஸ் கட்சி ஓரிரு தொகுதிகளை வென்றாலே அதிசயம்தான்.


Laddoo
பிப் 05, 2025 10:52

பார்த்து சூதனமா வோட்டு போடுங்க. மறுபடியும் திருடன் கைலே அரசாங்கத்த கொடுத்துறாதீங்க டுமீலகம் போல 200க்கும் ஒசிகளுக்கும் ஒங்க நிம்மதிய வித்துறாதீங்க.


M. PALANIAPPAN
பிப் 05, 2025 10:29

பிஜேபி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க நல் வாழ்த்துக்கள்


sundarsvpr
பிப் 05, 2025 09:52

தேர்தல் டெல்லி சட்டமன்றத்திற்கு. எனவே காங்கிரஸ் போதிய வாக்குகள் பெறவில்லை என்பதால் அந்த கட்சி புறக்கணிக்கப் பட்டதாய் கருதமுடியாது. பாராளுமன்றத்திற்கு தேர்தல் என்றால் போட்டியாக கருதவேண்டும். இந்த தேர்தலில் காங்கிரஸ் தோற்றால் இதனை விமர்சிக்க தேவை இல்லை.


ஆரூர் ரங்
பிப் 05, 2025 10:57

டெல்லி லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ் தொடர்ந்து முட்டை வாங்குகிறார்கள். காந்தியின் உத்தரவை செயல்படுத்தும் டெல்லி.


Ray
பிப் 05, 2025 15:44

ரெங்கா போன தேர்தலுக்கு விவேகானந்தர் பாறை த்யானம் இன்று திரிவேணி சங்கம நீராடல் இந்த ஆட்ட ஆண்டவன்தான் காப்பாத்தணும்னு சொல்றாரோ உச்சவரம்பை பன்னெண்டு லக்ஷமாக்கியும் எவனும் ஒட்டு போட வர மாட்டேங்கறான்னு செய்தி வல்லவனுக்கும் வல்லவன் டில்லிவாசிகள்


முக்கிய வீடியோ