உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி தேர்தல் முடிவு எதிர்பார்க்கவில்லை: திருமாவளவன் ஆச்சர்யம்!

டில்லி தேர்தல் முடிவு எதிர்பார்க்கவில்லை: திருமாவளவன் ஆச்சர்யம்!

புதுடில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., 48 தொகுதிகளை வென்று ஆட்சி அமைக்கிறது. ''இந்த முடிவுகள் அதிர்ச்சி அளிக்கிறது, ஆம் ஆத்மி இந்த அளவு பின்னடைவை சந்திக்கும் என எதிர்பார்க்கவில்லை,'' என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.டில்லி தேர்தல் முடிவு குறித்து மேலும் தலைவர்கள் பலர் கூறியுள்ளதாவது; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=mfs3dh0d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா

எனக்கு தெரியாது, நான் இன்னும் முடிவுகளை சரிபார்க்கவில்லை. நான் முடிவுகளை பார்த்த பிறகு கருத்துக்களை சொல்கிறேன்.

உத்தவ் தாக்கரே சிவசேனா அணி, சஞ்சய் ராவத்

காங்கிரசும், ஆம் ஆத்மியும் ஒன்றாக இருந்திருந்தால் முடிவுகள் வேறுவிதமாக இருந்திருக்கலாம்... ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸின் அரசியல் எதிரி பா.ஜ., இருவரும் பா.ஜ.,வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கப் போராட வேண்டும்.காங்., பொதுச்செயலாளர், ஜெய்ராம் ரமேஷ்அரவிந்த் கெஜ்ரிவாலின் கீழ் நடந்த பல்வேறு மோசடிகளை முன்னிலைப்படுத்துவதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகித்தது. 12 ஆண்டு கால தவறான ஆட்சிக்கு வாக்காளர்கள் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர். டில்லியில் காங்கிரஸ் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. காங்கிரசின் பிரசாரம் தீவிரமாக இருந்தது. 2030ல் டில்லியில் காங்கிரஸ் ஆட்சி அமையும்.

ஒடிசா முதல்வர் மோகன் சரண்

பிரதமர் மோடியின் தலைமையில் நாடு வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. குடிநீர்,காற்று உள்ளிட்டவை டில்லியில் மிகவும் மோசமாக உள்ளது. தேசிய தலைநகரம் எப்படி வளர்ச்சி அடைந்து இருக்க வேண்டும். இதனால் தான் மக்கள் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடிவு செய்து உள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர், அமித்ஷா

பொய், ஏமாற்றுதல், ஊழல் செய்யும் ஆம்ஆத்மி மாடலில் இருந்து விடுபட மக்கள் உழைத்துள்ளனர். நாடு முழுவதும் பொதுமக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளிப்பவர்களுக்கு, டில்லி சட்டசபை தேர்தல் பாடம் புகட்டியுள்ளது. டில்லியின் வளர்ச்சி மற்றும் புதிய சகாப்தத்தின் தொடக்கமாகும்.டில்லியில் பொய்களின் ஆட்சி முடிந்துவிட்டது. இது ஈகோ மற்றும் அராஜகத்தின் தோல்வி. இது பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த வெற்றியாகும். டில்லி மக்களுக்கு மனமார்ந்த நன்றி.மீண்டும் மீண்டும் பொய்யான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்ற முடியாது என்று டில்லி மக்கள் தெரிவித்தனர். அசுத்தமான யமுனை, அசுத்தமான குடிநீர், உடைந்த சாலைகள், நிரம்பி வழியும் சாக்கடைகள் மற்றும் ஒவ்வொரு தெருவிலும் திறந்திருக்கும் மதுக்கடைகளுக்கு பொதுமக்கள் தங்கள் ஓட்டுக்களால் பதிலளித்துள்ளனர். இந்த மாபெரும் வெற்றிக்காக இரவு பகலாக உழைத்த பாஜக தேசியத் தலைவர் நட்டா, டில்லி பா.ஜ, மாநில தலைவர் ஆகியோரை நான் மனதார வாழ்த்துகிறேன்.

மக்களுக்கு நன்றி

டில்லியில் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலை தோற்கடித்த, பா.ஜ, வேட்பாளர் பர்வேஷ் வர்மா கூறியதாவது: வெற்றிக்காக டில்லி மக்களுக்கும், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையால் டில்லி வளர்ச்சி அடையும், என்றார்.

உமர் அப்துல்லா கிண்டல்

டில்லி தேர்தல் முடிவுகளில் பா.ஜ., முன்னிலை வகிப்பது குறித்து, காஷ்மீர் முதல்வரும், 'இண்டி' கூட்டணி கட்சி தலைவருமான உமர் அப்துல்லா, 'உங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளுங்கள்' என்று காங்கிரஸ், ஆம் ஆத்மியை கேலி செய்துள்ளார். அவர் ஒரு வீடியோ மீம்ஸையும் பகிர்ந்துள்ளார். அதில், ' உங்கள் விருப்பப்படி சண்டையிட்டுக் கொள்ளுங்கள். ஒருவரை ஒருவர் தோல்வியுறச் செய்யுங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ., வேட்பாளர், ரமேஷ் பிதுரி

கல்காஜி மக்களுக்கு எனது நன்றிகள். கடந்த 10 ஆண்டுகளில், தொகுதியில் எந்த வளர்ச்சிப் பணிகளும் செய்யப்படாததால், கல்காஜி மக்கள் இரத்தக் கண்ணீரில் கதறினர். தற்போது எனக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி, என்றார். இவர் தான் கல்காஜி தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.

மத்திய அமைச்சர், ஜோதிராதித்யா சிந்தியா

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைக்கும். டில்லி மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள்.

சி.பி.ஐ., தலைவர் டி.ராஜா

இண்ட கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான ஒற்றுமையின்மையே இதற்குக் காரணம். குறிப்பாக காங்கிரஸ் கட்சி, வரும் நாட்களில் இண்டி கூட்டணியை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து யோசிக்க வேண்டும்.

திருமாவளவன்

டில்லியில் பா.ஜ., முன்னிலையில் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது; ஆம் ஆத்மி இந்த அளவு பின்னடைவை சந்திக்கும் என எதிர்பார்க்கவில்லை. 'இண்டி' கூட்டணி கட்சியினர் ஈகோவை தள்ளி வைக்க வேண்டும்.மத்திய அமைச்சர், எல்.முருகன்டில்லி சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள, டில்லி பா.ஜ., கட்சியினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். டில்லி மாநில மக்களிடத்தில் பொய்யுரைகளை கட்டவிழ்த்து, 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வந்த கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியை மக்கள் முழுமையாக நிராகரித்துள்ளார்கள் என்பதற்கும், பிரதமர் மோடியின் நல்லாட்சிக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 68 )

Ramesh Sargam
பிப் 15, 2025 21:08

ஆனால் நாங்கள் எதிர்பார்த்தோம், ஆம்ஆத்மி ஊத்திக்கும் என்று.


Minimole P C
பிப் 15, 2025 08:07

Thiruma doesnt have adequate knowledge, mind capacity to understand what is what. What he knows only to give e colour for every thing and mislead his community people just for his survival.


karthik
பிப் 14, 2025 14:06

எல்லாரும் தமிழ் நாட்டு உபிகள் மாதிரி வாழ்நாள் முழுதும் கொத்தடிமைகளாக இருப்பார்கள் என்று நினைத்துவிட்டார் போல


V GOPALAN
பிப் 09, 2025 15:41

Thiruma though with terror group support AAP will get majority like tamilnadu. Delhi Voters are Not like tamil voters always wandering for Biriyani Tasmac and Rs.10000 in every election


xyzabc
பிப் 09, 2025 13:51

நீ ஒரு கேடு கெட்ட எம் பி


Thiyagarajan S
பிப் 09, 2025 08:05

If Congress comes to power again, it will give all the Hindu temples and farmers lands in India to the Waqf Board.


prasath
பிப் 09, 2025 03:36

அரவிந்த் கெஜ்ரிவாலின் கீழ் நடந்த பல்வேறு மோசடிகளை முன்னிலைப்படுத்துவதில் காங்கிரஸ் முக்கிய பங்கு வகித்தது. காங்., பொதுச்செயலாளர், ஜெய்ராம் ரமேஷ். அட பைத்தியம் கூட கொஞ்சம் தெளிவா பேசும் காங்கிரஸ் அப்படி முக்கிய பங்கு வகித்திருந்தால் 1 சீட் ஆவுது ஜெயிச்சிருக்கணும்


Bharathi
பிப் 09, 2025 02:42

டெல்லி தேர்தல் முடிவுக்கு இந்த வட தமிழ்நாடு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் அறிவாலய அடிமைக்கிட்ட கருத்து கேட்கறது டூ மச்.


Kannan Chandran
பிப் 09, 2025 00:36

ஆக உன் தகுதி அதுதான்


BalaG
பிப் 08, 2025 23:35

நீங்க தமிழ்நாடு CM ஆயிடுவீங்கன்னு சொன்னா எப்படி இருக்குமோ அதே மாதிரிதான் இருந்திருக்கும் கெஜ்ரிவால் ஜெயிச்சிருந்தால்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை