உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தனித்துப் போட்டி என ஆம் ஆத்மி தான் அறிவித்தது டில்லி காங்., தலைவர் குற்றச்சாட்டு

தனித்துப் போட்டி என ஆம் ஆத்மி தான் அறிவித்தது டில்லி காங்., தலைவர் குற்றச்சாட்டு

புதுடில்லி:“டில்லி சட்டசபைக்கு 2030ல் நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., இடையேதான் கடும் போட்டி இருக்கும்,” என, டில்லி மாநில காங்., தலைவர் தேவேந்திர யாதவ் கூறினார்.டில்லி சட்டபைத் தேர்தலில் பா.ஜ., - 48, ஆம் ஆத்மி - 22 தொகுதிகளைக் கைப்பற்றி இருக்கும் நிலையில், மூன்றாவது முறையாக ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. மேலும், அக்கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் 'டிபாசிட்' இழந்தனர்.இந்நிலையில், டில்லி மாநில காங்., தலைவர் தேவேந்திர யாதவ் கூறியதாவது:சட்டசபைத் தேர்தலில் காங்., தொண்டர்கள் கடுமையாக உழைத்ததால், எங்கள் கட்சியின் ஓட்டு வங்கி இரண்டு சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2020ல் நடந்த தேர்தலில் 4.26 சதவீத ஓட்டுக்களை வாங்கியிருந்த காங்கிரஸ் 2025 தேர்தலில் 6.34 சதவீத ஓட்டுக்களைப் பெற்றுள்ளது. இது, தொண்டர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.கட்சியின் மூத்த தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்தனர். வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர். பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் ஏராளமான மக்கள் திரண்டனர். அதனால்தான் ஓட்டு வங்கி இரண்டு சதவீதம் அதிகரித்துள்ளது.தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளுக்கா காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்.இந்தத் தேர்தலிலேயே தலித் மற்றும் சிறுபான்மையினர் ஓட்டுக்களைப் பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், ஆட்சி அமைப்போம் என்ற நிலையை எங்களால் உருவாக்க முடியவில்லை. அதனால்தான் அந்த ஓட்டுக்கள் ஆம் ஆத்மிக்கு சென்றன.அந்த ஓட்டுக்கள் காங்கிரசுக்கு கிடைத்திருந்தால், ஓட்டு வங்கி 26 சதவீதமாக உயர்ந்திருக்கும். டில்லி சட்டசபைக்கு 2030ல் நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., இடையேதான் கடும் போட்டி நிலவும். டில்லியில் எங்கள் ஓட்டு வங்கியை அடுத்த தேர்தலுக்குள் கண்டிப்பாக மீட்போம். யமுனை நதியில் கழிவுநீர் மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை தலைநகர் டில்லியின் முக்கியப் பிரச்னைகளாக இருக்கின்றன. அதனாலேயே ஆம் ஆத்மி மீது மக்கள் அதிருப்தி அடைந்தனர்.லோக்சபா தேர்தலில் இண்டி கூட்டணியில் இருந்த ஆம் ஆத்மி கட்சிதான், டில்லி சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என முதலில் அறிவித்தது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ