உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சோடியம் தெரு விளக்குகள் அகற்ற டில்லியில் முடிவு

சோடியம் தெரு விளக்குகள் அகற்ற டில்லியில் முடிவு

புதுடில்லி:டில்லியில் ஒரு லட்சம் இடங்களில் தற்போது உள்ள தெரு விளக்குகளை மாற்றி விட்டு, அவற்றை, எல்.இ.டி., விளக்குகளாக மாற்ற, டெண்டர் வெளியிட, பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. டில்லியில் சில இடங்களில், எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பிற பகுதிகளில், சோடியம் விளக்குகள் தான் உள்ளன. இவ்வாறு உள்ள, 92,163 தெரு விளக்குகளை அகற்றி விட்டு, அவற்றில், எல்.இ.டி., விளக்குகளை பொருத்த, டெண்டர் வெளியிட, டில்லி மாநில பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இந்த தகவலை தெரிவித்த அந்த துறை அதிகாரி, ''முதல்வர் ரேகா குப்தா, கடந்த மாதம், இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதன் படி, நகரம் முழுவதும், தெரு விளக்குகளை மாற்றும் பணிகள் விரைவில் துவங்க உள்ளன,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KOVAIKARAN
அக் 24, 2025 09:58

நல்ல மாற்றம். தமிழகத்தில் உள்ளது போல இல்லாமல், டெல்லி அரசு நல்ல தரமுள்ள L.E.D. விளக்குகளை நியாயமான விலைக்கு வாங்கி ஊழல் இல்லாமல் செய்வர்கள்.