உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நிலுவையில் ரூ.63,000 கோடி குடிநீர் வரி; திணறும் டில்லி அரசு

நிலுவையில் ரூ.63,000 கோடி குடிநீர் வரி; திணறும் டில்லி அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய, மாநில அரசுத்துறைகள் குடிநீர் வரி ரூ.63,000 கோடியை பாக்கி வைத்துள்ளதால், உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள போதிய நிதியில்லாமல் டில்லி அரசு திணறி வருகிறது. டில்லி நீர்வளத்துறை வெளியிட்ட தகவலின்படி, டில்லி அரசின் பல்வேறு துறைகள் ரூ.33,295 கோடியும், மத்திய அரசின் துறைகள் ரூ.29,737.37 கோடியும் குடிநீர் வரி நிலுவைத் தொகையாக உள்ளது. இதில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டில்லி போலீஸ் ரூ.6,097 கோடியும், ரயில்வே துறை ரூ.21,530 கோடியும் குடிநீர் வரியை பாக்கி வைத்துள்ளன. டில்லி மாநகராட்சி ரூ.26,147 கோடி நிலுவையில் வைத்துள்ளது. இதுமட்டுமில்லாமல், டில்லி குடியிருப்புவாசிகள் ரூ.15,000 கோடி குடிநீர் வரியை செலுத்தாமல் உள்ளனர். இது குறித்து டில்லி நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது; 2012-13 முதல் இந்த குடிநீர் மற்றும் கழிவுநீர் வரி செலுத்துவதில் பிரச்னை இருந்து வருகிறது. வரியை செலுத்துவது தொடர்பாக பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டாலும், இதுவரை தொகை செலுத்தப்படவில்லை. இதன் காரணமாக, பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. இந்தப் பிரச்னையில் அரசு உடனடியாக தலையிட வேண்டும். குடியிருப்புவாசிகளுக்கு மட்டும் உயர்த்தப்பட்ட குடிநீர் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும். ஆனால், வணிக ரீதியிலான பயனாளிகள் மட்டும் அரசு நிறுவனங்களுக்கு இது பொருந்தாது, எனக் கூறினார். டில்லி நீர்வளத்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா கூறுகையில், 'தடையில்லாத நீர் விநியோகத்தை உறுதிப்படுத்த அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். ஒவ்வொரு டில்லி குடிமகனின் நலனுக்காக, இந்தப் பிரச்னையில் தீர்வு காண நடவடிக்கை எடுப்போம்,' எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Padmasridharan
ஜூலை 26, 2025 19:35

இங்கு வரி செலுத்தினாலும் நல்ல குடிநீருக்கும் தேங்காமல் செல்லும் கழிவு நீருக்கும் ஆயிரம் குத்தங்கள் சொல்லும் அதிகாரிகள் இருக்கின்றனர்..குடிநீருக்கு மேடு, அதனால் தண்ணீர் வராதென்றும் கழிவு நீருக்கு பள்ளம், அதனால் தேங்கி நிற்குமென்றும் சொல்லிக்கொண்டே வரி வாங்குகிறார்கள். வரி செலுத்தாதவர்களிடம் இவ்வளவு கொடுத்தால் அவ்வளவு குறைப்பேனென்று லஞ்சம் பணத்தை வாங்குகின்றனர். எல்லோரும் வரி கட்டிக்கொண்டே பாட்டில் நீர்தான் வாங்கி பருகுகின்றனர் சாமி.


Tamilan
ஜூலை 26, 2025 18:35

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தின் நிலை . மத்திய அரசிடமே காசில்லையா? திவாலாக போகிறதா? மக்களிடம் மாதாமாதம் கொள்ளையடிக்கும் பல லட்சக்கணக்கான கோடிகள் எங்கு சென்றுவிட்டன?


SANKAR
ஜூலை 26, 2025 16:42

vekka kedu .PM ...sorry CM Stalin must resign


முக்கிய வீடியோ