உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி போலீஸ் இயற்றுகிறது குற்றங்களை தடுக்க சட்டம்

டில்லி போலீஸ் இயற்றுகிறது குற்றங்களை தடுக்க சட்டம்

புதுடில்லி:'மஹாராஷ்டிரா மாநிலத்தில் இயற்றப்பட்டுள்ள 'மொகாகோ' சட்டம் போன்ற, ஒருங்கிணைந்த குற்றங்களையும், குற்றவாளிகளையும் கட்டுப்படுத்த விரைவில் சட்டம் இயற்றப்படும்' என கூறப்படுகிறது. இதுகுறித்து, டில்லி போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுவதாவது: மஹாராஷ்டிரா மாநிலத்தில் செயல்படும் தாதாக்கள் மற்றும் கிரிமினல்களை கட்டுப்படுத்த, மொகாகோ எனப்படும், மஹாராஷ்டிரா ஒருங்கிணைந்த குற்றங்கள் கட்டுப்படுத்தும் சட்டம், கடந்த, 1990 முதல் பின்பற்றப்படுகிறது. அதுபோன்ற சட்டத்தை, டில்லி மாநிலத்திலும் இயற்ற உள்ளோம். அதன்படி, டில்லிக்கு அருகில் உள்ள ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களையும் உள்ளடக்கிய வகையில், சட்டம் இயற்றப்பட உள்ளது. அந்த சட்டம் பின்பற்றப்பட்டால், தலைநகர் பகுதி மற்றும் டில்லி பகுதியில் அமைதி நிலவும். அந்த பகுதிகளில் நடக்கும் சட்ட விரோத காரியங்கள் தடுக்கப்படும். கிரிமினல்கள் உருவாகாமல் தடுக்கப்படுவர். விரைவில் நிறைவேற்றப்பட உள்ள இந்த சட்டத்தால், டில்லி கிரைம் மற்றும் சிறப்பு பிரிவு போலீசாரில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். துவக்கத்தில், 100 பேருடன் இந்த தனிப்பிரிவு செயல்படும். அதன் பின், தேவைக்கு ஏற்ப விரிவாக்கம் செய்யப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை