உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லியில் தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்; 20 பேர் மீது போலீசார் வழக்கு

டில்லியில் தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்; 20 பேர் மீது போலீசார் வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரோஹினியில் தெருநாய் பிடிக்கும் நடவடிக்கையின் போது மாநகராட்சி ஊழியர்களைத் தாக்கிய, நாய் பிரியர்கள் 20 பேர் கொண்ட குழு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.ரேபிஸ் பாதிப்புக்கு வழிவகுக்கும் தெருநாய் கடி குறித்து தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், தெருநாய்களுக்கு கருத்தடை ஊசி போட்டு, நிரந்தரமாக நாய் காப்பகங்களுக்கு மாற்ற உத்தரவிட்டிருந்தது. தெரு நாய்களுக்கு எதிராக இந்த உத்தரவு இருப்பதாகக் கூறி விலங்கு ஆர்வலர்கள் டில்லி உள்பட பல முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், டில்லியில் உள்ள ரோஹினியில் தெருநாய் பிடிக்கும் நடவடிக்கையின் போது மாநகராட்சி ஊழியர்களைத் தாக்கிய, விலங்கு ஆர்வலரும், நாய் பிரியருமான 20 பேர் கொண்ட குழு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இது குறித்து ரோஹினி துணை போலீஸ் கமிஷனர் ராஜீவ் ரஞ்சன் கூறியதாவது:நாய் பிரியர்கள் தெரு நாய் பிடிக்கும் பணியில் ஈடுபட்ட டில்லி மாநகராட்சி ஊழியர்களின் வாகனத்தைத் தடுத்ததாகவும், இரண்டு தெருநாய்களை விடுவித்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மாநகராட்சி ஊழியர்களை தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வாகனத்தின் ஜன்னலை உடைத்து, பதிவேடு திருடியது உள்ளிட்ட நாசவேலைகள் நடந்தன. ஒரு அரசு ஊழியர் தங்கள் கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததற்கும், அவர்களின் பொருட்களை திருடியதற்கும் பல்வேறு பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

venkat
ஆக 26, 2025 15:32

இந்த தற்குறிகளை நாய்களுடன் இருக்கச்சொல்லி ஒன்றாக வைக்கலாம்


visu
ஆக 19, 2025 21:19

இவர்களுக்கு சிறை தண்டனை வழங்காமல் 6 மாதமோ வருடமோ நாய்களை கொட்டடியில் அடைத்து அவற்றை பராமரிக்கும் பணியில் அவைகளோடு தங்க வைக்க வேண்டும் தண்டமா பிரியாணி கொடுக்க தேவையில்லை


Vijay D Ratnam
ஆக 19, 2025 21:13

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து டெல்லி மாநகராட்சி ஆணைப்படி பணிபுரிந்த ஊழியர்களை தாக்கிய தெருநாய் பிரியர்கள் 20 பேரையும் கைது செய்து தலைக்கு இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதித்து ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்க வேண்டும்.


Ramesh Sargam
ஆக 19, 2025 21:13

தெருநாய் பிரச்சினைக்கு ஒரே வழி. அவைகளை பிடித்து நாய் பிரியர்கள் வீட்டில் விடவேண்டும்.


Kumaran Krishnamoorthy
ஆக 19, 2025 19:31

அந்த 20 பேரையும் அவர்கள் விரும்பி சாப்பிடுகிற மட்டன் சிக்கன் எப்படி வருகிறது என பார்க்க சொல்ல வேண்டும்.


தாமரை மலர்கிறது
ஆக 19, 2025 19:23

டெல்லியில் வாழும் ஒரு கோடி மக்களில் மனசாட்சியுள்ள வெறும் இருபது பேர், நகராட்சி ஊழியர்கள் நாய்களுக்கு எதிராக செய்யும் அக்கிரமம் அநியாயம் அட்டூழியத்தை வெறுமனே தடுத்தனர். அவர்களை தாக்கவில்லை. ஆனால் போலீசும் நகராட்சி ஊழியர்களும் சேர்ந்துகொண்டு இந்த இருபது பேரை தாக்கி, உள்ளே தூக்கிபோட்டுள்ளனர். முதலில் அனிமல் ஷெல்டரில் இடமில்லாதபோது, எதற்காக நாய்களை பிடிக்கிறீர்கள்? தெரியும் அங்கே சென்றவுடன், அந்த வாயில்லா ஜீவன்களை கொன்று புதைக்க தான். ஒரு சில நாய் கடித்து விட்டதற்காக, அத்தனை நாய்களையும் ஜெயிலில் போடவேண்டும் என்றால், அதே போல் ஒரு சில மனிதர்கள் ரேப்பிஸ்ட், ஊழல்வாதிகள், கொலைகாரர்கள் என்றால், ஒட்டுமொத்த டெல்லி மக்களையும் ஜெயிலில் அடையுங்கள்.


Raja
ஆக 19, 2025 21:39

நாய்களோடு நாய்களாக இவனுகளையும் அடைத்து வைக்க வேண்டும். அப்போதுதான் இவன்களுக்கு புத்தி வரும். இவன்களோட புள்ளைகளையோ பொண்டாட்டிகளையோ நாய்கள் கடித்து குதறினாலும் இவன்கள் திருந்த மாட்டார்கள். நாய் வாய் இல்லா ஜீவன் என்றால், இவனுக திங்கிற ஆடு, மாடு, கோழி, மீன் எல்லாம் வாய் இல்லா ஜீவன் இல்லையா? கறிக்கடை, மீன்கடைகளை தடை செய்ய சொல்வானுகளா? பைத்தியங்கள்...


SANKAR
ஆக 19, 2025 19:04

Kangaroo is national animal of Australia.But if they become excessive they kill them and also eat the meat.As far as I know none in Australia protest against this.We must learn from this.Basically first judgement by SC clearly stated those who stop catching of street dogs must be caught and punished.


Padmasridharan
ஆக 19, 2025 18:57

காவலர்கள் மக்களை மொதல்ல இதைச் சொல்லித்தான் பயமுறுத்துகின்றனர் "தங்கள் கடைமயைச் செய்யவிடாமல் தடுக்கிறார்கள்" என்று. அப்படியிருக்கையில் லஞ்சம் கேட்டு வாங்குவது அரசு ஊழியர்களின் கடமையல்லவே. மக்களிடம் இருக்கும் பணம்/பொருள் அதிகார பிச்சை எடுப்பதும் இவர்களின் கடமை அல்லவே சாமி.


Raja
ஆக 19, 2025 18:45

இவர்களோட புள்ளைகளையோ பொண்டாட்டிகளையோ நாய்கள் கடித்து குதறினாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள்.


அன்பு
ஆக 19, 2025 20:49

ஒருவேளை அந்த இருபது பேரும் தெருநாய்கள் ஆக கணிக்கப் பட்டு அவர்களையும் அந்த நாய்க்கூண்டில் நாய்களோடு நாய்களாக அடைத்து வைக்க வேண்டும்.


Raja
ஆக 19, 2025 18:38

இவனுகளை பிடித்து நாயை அடைத்து வைக்கும் காப்பகத்திலேயே வைக்க வேண்டும். அந்த நாய்களோடு கொஞ்சி குலாவிகிட்டு இருக்கட்டும்.


முக்கிய வீடியோ