உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மரணத்திலும் அரசியல்! டில்லி உஷ்ஷ்ஷ்

மரணத்திலும் அரசியல்! டில்லி உஷ்ஷ்ஷ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: சமீபத்தில், பெங்களூரில் நடந்த ஆர்.சி.பி., கிரிக்கெட் அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்தனர். இது கர்நாடக அரசியலில் புயலை கிளப்பி உள்ளது.வெற்றிக் கொண்டாட்டத்தை வைத்து, முதல்வர் சித்தராமையாவை இறக்கிவிட்டு, தான் முதல்வராக தற்போதைய துணை முதல்வர் சிவகுமார் திட்டமிட்டாராம்; ஆனால், 11 பேர் இறந்ததால், சிவகுமாரின் நிலைமை பரிதாபமாகிவிட்டது.இந்த துயர சம்பவத்தை, தனக்கு சாதகமாக பயன்படுத்தி, சிவகுமாரை ஓரங்கட்ட முடிவெடுத்து உள்ளாராம் சித்தராமையா. ஆர்.சி.பி., அணியை விமான நிலையத்தில் சிவகுமார் வரவேற்றது முதல் அனைத்து வீடியோக்களையும் காங்., மேலிடத்திற்கு அனுப்பியதோடு, புகாரும் தெரிவித்துள்ளாராம் சித்தராமையா.சீனியர் போலீஸ் அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்த தோடு, தன் செயலர் கோவிந்தராஜையும் நீக்கியுள்ளார் முதல்வர் சித்தராமையா. 'வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்த, கோவிந்தராஜ் பல நடவடிக்கைகளை மேற்கொண்டதால், தனக்கு கெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காக, அவர் மீது சித்தராமையா நடவடிக்கை எடுத்துள்ளார்' என்கின்றனர்.'இரண்டரை ஆண்டுகள் சித்தராமையா முதல்வராகவும், அதன்பின் தனக்கு முதல்வர் பதவி என, ஒப்பந்தம் உள்ளது; அது மேலிடத்திற்கும் தெரியும். எனவே, நவம்பரில் முதல்வர் பதவி நிச்சயம்' என, காத்திருந்தார் சிவகுமார். தவிர, அதற்காக சித்தராமையாவிற்கு எதிராக செயல்பட்டு வந்த நிலையில், வெற்றி கொண்டாட்டம் சிவகுமாரின் முதல்வர் கனவை சிதைத்துள்ளது.'போலீஸ் அதிகாரிகளின் முன்னெச்சரிக்கையை மீறி, துணை முதல்வர் செயல்பட்டார் என, பல செய்திகளை சிவகுமாருக்கு எதிராக சித்தராமையா கசிய விடுகிறார்' என புகார் சொல்கின்றனர், சிவகுமாரின் ஆதரவாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

என்றும் இந்தியன்
ஜூன் 08, 2025 19:04

இதுவே பீஜே பி மாநிலத்தில் நடந்திருந்தால் முஸ்லீம் நேரு காங்கிரஸ் ராகுலின் உளறல் சோனியாவின் உதறல் காங்கிரசின் கதறல் என்று இருந்திருக்கும். நடந்தது காங்கிரஸ் மாநிலத்தில் ஆகவே இவர்கள் மவுன சாமியார் ஆகிவிட்டார்கள்


என்றும் இந்தியன்
ஜூன் 08, 2025 18:55

கர்நாடக முதல்வர் பதவி துறக்கவேண்டும் இல்லை பதவியிலிருந்து இறக்கப்பட வேண்டும் உடனே.


venugopal s
ஜூன் 08, 2025 15:36

பாஜக மரணத்தில் அரசியல் செய்ய மாட்டார்கள்,


மூர்க்கன்
ஜூன் 09, 2025 05:25

இந்த நூற்றாண்டின் சிறந்த நகைசுவை. வாழ்த்துகள் வேணு ??


Ramesh Sargam
ஜூன் 08, 2025 13:17

அன்று அந்த கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் ஆவி இவர்களை சும்மா விடுமா? வந்தது அதிகார நாட்காலிக்கு நெரிசல். முதல்வரும், துணை முதல்வரும் ஒருவரையொருவர் பதவி இறக்க மிகவும் பாடுபடுகிறார்கள். ஆனால் அதற்காக பதினோரு பேரின் உயிரை பணயம் வைக்கவேண்டுமா?


KaySun
ஜூன் 08, 2025 11:42

ஒரு வேளை நெரிசல் நாற்காலி தூண்டலோ?


Svs Yaadum oore
ஜூன் 08, 2025 09:58

கர்நாடக பெங்களூர்காரனை குறை சொன்னால் இங்குள்ள விடியல் மூர்க்கனுக்கு ஏன் மத சார்பின்மையாக பொத்துக்கொண்டு வரனும் ??.......டெல்லி இத்தாலி காங்கிரஸ் ஹிந்திக்காரனிடம் சொல்லி மேக்தாது காவேரி பிரச்சனையில் தமிழ் நாட்டுக்கு ஆதரவு கொடுப்பானா .....தமிழ் தமிழன் தமிழன்டா ...


Padmasridharan
ஜூன் 08, 2025 09:27

மக்களுக்கு நல்லது பண்ண காவல்துறையா அல்லது அரசியல்வாதிகளுக்கு மட்டுமேவா சாமி. .


VENKATASUBRAMANIAN
ஜூன் 08, 2025 08:03

கோஷ்டி சண்டை என்றாலே காங்கிரஸ் தான். சத்தியமூர்த்தி பவன் உதாரணம்


Kasimani Baskaran
ஜூன் 08, 2025 07:33

உள்ளுக்குள்ளேயே அடித்துக்கொள்வது காங்கிரசில் புதிதல்ல. அதே சமயம் சிவக்குமார் மற்றும் சிந்துவும் உலக மகா கேடிகள்.


மூர்க்கன்
ஜூன் 08, 2025 09:07

ஆனால் பாஜகவில் ஒற்றுமையாக கொள்ளை அடித்தார்கள் அடித்து கொண்டு இருக்குறார்கள் இன்னும் அடிப்பார்கள். சொட்டை தலையில் முடி முளைத்தால் இதுக்கு ஒரு முடி வு கட்டலாம்.


Kasimani Baskaran
ஜூன் 08, 2025 10:30

மேதகு மூர்க்கரே - பாஜக கொள்ளை அடித்து இருந்தால் பெருமளவிலான உள்கட்டமைப்புக்களை நிர்மாணித்து இருக்க முடியாது. பொருளாதாரத்தையும் கூட இந்த அளவுக்கு கொண்டு சென்று இருக்க முடியாது. இராணுவத்துக்கு ஏராளமான ஆயுதங்களை உற்பத்தி செய்தும் தேவையானவைகளை வாங்கியும் மேம்படுத்தி இருக்க வாய்ப்பே இல்லை. மாநிலங்களுக்கான திட்டங்களில் பணத்தை வாரி இரைத்து இருக்கிறார்கள். அம்பானியும், அத்தனையும் பாஜக ஆட்சிக்கு முன் தொழிலே செய்யவில்லை என்று உருட்டுவது அறிவீனம்.


MURALIDHARAN ARAVAMUDHAN
ஜூன் 08, 2025 14:58

SIR YOU CAN NOT EXPLAIN TO MOORGAN. HE HIMSELF CERTIFIED, HE IS MOORKAN. THEN IT IS WASTE OF TOME TO EXPLAIN. HE WILL NOT HAVE CAPABILITY TO UNDERSTAND.


sasikumaren
ஜூன் 08, 2025 07:32

இத்தாலி காங் வோட்டு போட்டால் சாக வேண்டியது தான் மக்களே உஷாராக இருங்கள்


Thravisham
ஜூன் 08, 2025 08:42

டி கே பெயரை திருப்பி போடுங்கள். அவர் பழைய கே. டி ரவுடி ஷீட்டர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை