உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி உஷ்ஷ்ஷ்: பள்ளிகொண்டா வருகிறார் மத்திய அமைச்சர்

டில்லி உஷ்ஷ்ஷ்: பள்ளிகொண்டா வருகிறார் மத்திய அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வக்ப் சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. தற்போது இந்த வழக்குகள் விசாரணையில் உள்ளன. 'இந்த புதிய சட்டத்தால் நம் உரிமைகள் பாதுகாக்கப்படும்' என, இரண்டு கிராம மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஒன்று, கேரளாவில் உள்ள முன்னம்பம்; இங்கு 600 குடும்பங்கள் உள்ளன. 'இது மொத்தமும் வக்ப் நிலம்' என, வக்ப் வாரியம் இந்த மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இன்னொன்று, தமிழகத்தில் வேலுார் மாவட்டத்தில் பள்ளிகொண்டாவிற்கு அருகே உள்ள, காட்டுக்கொல்லை கிராமம். இங்கு வசிக்கும், 300 குடும்பங்களின் நிலங்களும் தங்களுக்கு சொந்தம் என வக்ப் வாரியம் கூறியுள்ளது.சமீபத்தில், சிறுபான்மை துறையை கவனிக்கும், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு முன்னம்பம் சென்று, 'புதிய வக்ப் சட்டத்தால் உங்கள் நிலங்களை யாரும் எடுத்துக்கொள்ள முடியாது' எனக் கூறி உள்ளார். இங்கு வசிப்போர் மீனவர்கள்; இவர்கள், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள்.கேரளாவில் பா.ஜ., ஒரு எம்.பி., தொகுதியைக் கைப்பற்றி, அங்கு பலமாக காலுான்ற முயற்சித்து வருகிறது. குறிப்பாக, கிறிஸ்துவர்களின் ஓட்டுகளை, தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சிகளில் ஒன்றுதான் இது எனக் கூறப்படுகிறது.இதேபோல, விரைவில் காட்டுக்கொல்லை கிராமத்திற்கும் வர இருக்கிறாராம் அமைச்சர் கிரண் ரிஜிஜு. இவருடன், வக்ப் சட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட, பார்லிமென்ட் குழுவின் தலைவரும், பா.ஜ., - எம்.பி.,யுமான ஜகதம்பிகா பாலும் வருகிறாராம்.வரும், 2026ல் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள ஹிந்துக்களின் ஓட்டுகளை, பா.ஜ., ஒட்டுமொத்தமாக அள்ள, இந்த, 'விசிட்' உதவும் என, மேலிடம் கருதுகிறதாம்.இவர்களுடைய தமிழக விஜயத்திற்கு, தி.மு.க., அரசு ஒத்துழைக்குமா அல்லது மத்திய அமைச்சர் இங்கு வந்தால் பிரச்னை வரும் என, கிரண் ரிஜிஜுவைத் தடுக்குமா என, தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும், 'விரைவில் இந்த இருவரும் தமிழகம் வருவது நிச்சயம்' என, பா.ஜ., தரப்பில் சொல்லப்படுகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ