உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாண்டியாவில் போட்டி குமாரசாமிக்கு கோரிக்கை

மாண்டியாவில் போட்டி குமாரசாமிக்கு கோரிக்கை

பெங்களூரு: லோக்சபா தேர்தலில், மாண்டியாவில் போட்டியிடும்படி குமாரசாமிக்கு அழுத்தம் தர, ம.ஜ.த., இளைஞர் அணியினர் முடிவு செய்து உள்ளனர்.வரும் லோக்சபா தேர்தலில், கர்நாடகாவில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. மாண்டியா தொகுதியில் போட்டியிடும்படி, முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு, ம.ஜ.த., கட்சியினர் கோரிக்கை வைத்து உள்ளனர்.இந்நிலையில் பெங்களூரு சேஷாத்ரிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், கட்சியின் இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி, தலைமையில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாண்டியாவில் போட்டியிடும்படி குமாரசாமிக்கு, அழுத்தம் தர முடிவு எடுக்கப்பட்டது.அதன்பின் நிகில் குமாரசாமி அளித்த பேட்டி:கடந்த லோக்சபா தேர்தலில், மாண்டியாவில் நாங்கள் தோற்றிருக்கலாம். ஆனால் மாண்டியா எங்கள் கோட்டை. மாண்டியாவை விட்டு தரும்படி பா.ஜ.,விடம் கேட்க வேண்டும். நாங்கள் பா.ஜ.,வுடன் கூட்டணியில் உள்ளோம்.சங்கராந்திக்கு பிறகு தொகுதி பங்கீடு இறுதியாகும். அரசியலில் கூட்டணி தர்மத்தை பின்பற்றுவது அவசியம். குமாரசாமி மாண்டியாவில் போட்டியிடுவது குறித்து, தேவகவுடா முடிவு எடுப்பார். குமாரசாமி போட்டியிட்டால், அவரது வெற்றிக்காக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை