மேலும் செய்திகள்
10 மாதத்தில் 254 போலீசார் உயிரிழப்பு
11-Nov-2024
புதுடில்லி: இந்தாண்டில் தற்போது வரை, டில்லியில் 4,533 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது; 3 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த 2023ம் ஆண்டு டில்லியில் 9,266 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது; பாதிப்பால் 19 பேர் உயிரிழந்தனர்.2024 துவக்கத்திலிருந்து தற்போது வரை, டில்லியில் 4,533 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் இம்மாதம் மட்டும் இதுவரை 472 பேருக்கும் கடந்த அக்டோபரில் அதிகபட்சமாக 2,431 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.இந்த ஆண்டில், நஜப்கார், தெற்கு டில்லி, ஷாத்தரா (வடக்கு) கரோல் பா மற்றும் மத்திய டில்லி ஆகிய பகுதிகளில் தான் அதிக டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.728 பேருக்கு மலேரியா காய்ச்சலும், 172 பேருக்கு சிக்குன் குனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
11-Nov-2024