உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடிகர் தர்ஷனுக்கு ஜாமின் மறுப்பு : மனு தள்ளுபடி

நடிகர் தர்ஷனுக்கு ஜாமின் மறுப்பு : மனு தள்ளுபடி

பெங்களூரு : கொலை வழக்கில் ஜாமின் கோரிய நடிகர் தர்ஷன் உள்ளிட்டோரின் மனுவை கீழ் கோர்ட் தள்ளுபடி செய்தது.சித்ரதுர்காவை சேர்ந்தவர் ரேணுகாசாமி, 33. என்பவர், நடிகர் தர்ஷனின் நெருங்கிய தோழி பவித்ரா கவுடாவுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்ததாக வந்த புகாரில் ரேணுகாசாமி ஜூன் 09-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 17 பேர் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தர்ஷன் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்.இந்நிலையில் நடிகர் தர்ஷன், பவித்ரா ஆகியோர் ஜாமின் கோரி பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு மீது கடந்த இரு தினங்களுக்கு முன் இறுதி கட்ட விசாரணை நடந்தது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு இன்று (அக்14ம் தேதி) ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி இன்று நடந்த விசாரணையில் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெய்சங்கர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்பாவி
அக் 15, 2024 16:13

ரேணுகா சாமி தந்த ஆபாச குறுந்தகவலுக்கு தண்டிக்கப்படிருந்தால் இந்த கொலையே நடந்திருக்காது. கம்ளைண்ட் குடுத்தாலும் கண்டுக்க மாட்டாங்க. தண்டத்துக்கு சட்டம், தண்டத்துக்கு நீதிமன்றம். இது மாதிரி தினமும் நிறைய நடந்துக்கிட்டிருக்கு. இப்போ இவனையும் கொஞ்ச நாள் உள்ளே வெச்சு ஆதாரம் இல்லைன்னு விடுதலை பண்ணிருவாங்க. உண்மை? வெளியே வரவே வராது.


RAJ
அக் 15, 2024 00:24

இன்னும் இவன் உயிரோடு இருக்கானா? என்ன சட்டமோ .. கர்மமோ..