உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பல் வரிசை சீரமைப்பு சிகிச்சையில் விபரீதம்: நாக்கை துளைத்த டாக்டர் மீது இளம்பெண் போலீசில் புகார்

பல் வரிசை சீரமைப்பு சிகிச்சையில் விபரீதம்: நாக்கை துளைத்த டாக்டர் மீது இளம்பெண் போலீசில் புகார்

பாலக்காடு: பல்வரிசை சீரமைப்பு சிகிச்சையின் போது பெண்ணின் நாக்கில் காயம் ஏற்படுத்திய பல் டாக்டர் மீது பாலக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த 21 வயது பெண், சீரற்ற பல்வரிசை காரணமாக பல் டாக்டரிடம் சிகிச்சைக்கு சென்றார். அவரது பற்களை பரிசோதித்த டாக்டர், பல் வரிசையை சீரமைக்க பற்களில் துளையிட்டு கம்பி கட்ட வேண்டும் என்று கூறினார். அதை அந்தப் பெண்ணும் ஏற்றுக் கொண்டார். இதன்படி டாக்டர் பற்களில் துளையிட்டார். அப்போது துளையிடுவதில் டாக்டர் செய்த சிறு தவறு காரணமாக அந்தப் பெண்ணின் நாக்கில் காயம் ஏற்பட்டது. கடும் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் டாக்டரின் அலட்சியமே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டி போலீசில் புகார் அளித்தார்.பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் போலீசார், தனியார் பல் மருத்துவமனையான ஆலத்தூர் டென்டல் கேர் மீதும், டாக்டர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 125(a) இன் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது: மார்ச் 22ம் தேதி சிகிச்சையின் போது, தவறாக துளையிட்டதால் நாக்கின் இடது பக்கம் கடுமையான காயம் ஏற்பட்டது. வலி இருப்பதாகக் கூறியபோது, ​​பல் டாக்டர் வலி நிவாரணி மருந்தை பரிந்துரைத்து ஓய்வெடுக்க அறிவுறுத்தினார். இருப்பினும், வலி ​​தாங்க முடியாததால், பாலக்காடு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். சிகிச்சைக்குப் பிறகு, காயம் குணமடையத் தொடங்கியது.வேறு எந்த நோயாளியும் இதேபோன்ற சோதனையைச் சந்திக்க கூடாது. எனவே தான் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தேன். பல் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட மருத்துவ அதிகாரியிடம் புகார் அளித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
மார் 30, 2025 13:18

She can file a case in consumer court and get good compensation.


Rajathi Rajan
மார் 30, 2025 12:30

பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 125a இன் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது என்னடா சட்டம், புதுசா இருக்கு.....


chennai sivakumar
மார் 30, 2025 12:15

இது சகஜமாக ஏற்படும் நிகழ்வு மட்டுமே


மோகன்
மார் 30, 2025 11:53

வீட்டில் மனைவியுடன் சண்டை போட்டுவிட்டு வந்திருப்பாரோ?


Sampath Kumar
மார் 30, 2025 11:32

வாய் அதிகம் பேசி இருக்கும் போல


अप्पावी
மார் 30, 2025 10:56

நீட் பல் டாக்டரோ?


தமிழன்
மார் 30, 2025 10:55

டாக்டர் பாலியல் சீண்டல் செய்யாமல் விட்டதுக்கு அவனுக்கு நன்றி சொல்லு மொதல்ல உலகம் இந்த ரேன்ஜ்ல போய்கிட்டு இருக்கு நீ என்னடான்னா நாக்குல காயம் ஆனதுக்கு புகார் கொடுக்குற


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை