வெளிநாடுகளை சார்ந்து இருப்பதே நம் மிகப்பெரிய... எதிரி!: சுயசார்பு மட்டுமே மருந்து என்கிறார் பிரதமர் மோடி
'உலக அரங்கில் நமக்கு பெரிய எதிரி இல்லை. நமக்கு இருப்பது ஒரேயொரு எதிரி தான். அது, வெளிநாடுகளைச் சார்ந்திருப்பது. இந்த சார்புநிலையை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முதல்வர் பூபேந்திர பாய் படேல் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் தன் சொந்த மாநிலமான குஜராத்துக்கு, பிரதமர் மோடி நேற்று வந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tz5hvkhn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பாவ் நகரில் நடந்த நிகழ்ச்சியில், எரிசக்தி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில், 34,200 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அவர் துவக்கி வைத்தார். எதிர்காலம் இதன்பின், பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. ஒரேயொரு எதிரி என்றால், அது வெளிநாடு களைச் சார்ந்திருப்பது. இது தான் மிகப் பெரிய எதிரி. இந்த சார்பு நிலையை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும். சுயசார்பு என்பது வெறுமனே பொருளாதார ஆசை மட்டுமல்ல, அது, நாட்டின் பெருமை, கண்ணியம், பாதுகாப்புடன் இணைக்கப்பட்டது. வெளிநாடுகளைச் சார்ந்திருப்பது அதிகம் இருந்தால், நாட்டின் தோல்வியும் அதிகரிக்கும். உலகின் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு, சுயசார்பு நாடாக நம் நாடு மாற வேண்டும். நாம் வெளிநாடுகளைச் சார்ந்திருந்தால், நம் சுய மரியாதை பாதிக்கப்படும். 140 கோடி மக்களின் எதிர்காலத்தை அப்படியே விட்டுவிட முடியாது. அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரேயொரு மருந்து தான் உள்ளது. அது தான் சுயசார்பு இந்தியா. நம் நாட்டில் திறனுக்கு ஒருபோதும் பற்றாக்குறை இருந்ததில்லை. ஆனால், சுதந்திரத்துக்கு பின், நம் நாட்டை பல ஆண்டுகளாக ஆண்ட காங்., அதை முற்றிலும் புறக்கணித்தது. அக்கட்சியின் தவறான கொள்கைகளால் நாட்டின் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வீறுநடை அனைத்து விவகாரங்களுக்கும் வெளிநாடுகளையே காங்., சார்ந்திருந்தது. இறக்குமதியை மட்டுமே அக்கட்சி நம்பி இருந்தது. இதிலும் பல ஆயிரம் கோடி ரூபாயை அக்கட்சி நிர்வாகிகள் மோசடி செய்தனர். மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், இறக்குமதியை சார்ந்திருந்த நம் நாடு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு முன்னேறியது. பல்வேறு துறைகளில் நம் நாடு வீறுநடை போடுகிறது. குறிப்பாக, ராணுவத் துறையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நம் ஆயுதங்களுக்கு வெளிநாடுகளில் மவுசு நிலவுகிறது. பெரிய கப்பல்களை உருவாக்குவதன் மூலம் கடல்சார் துறையை வலுப்படுத்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எடுத்துள்ளோம். உலகளாவிய கடல்சார் சக்தியாக நாட்டின் துறைமுகங்கள் முதுகெலும்பாக உள்ளன. ஐ.என்.எஸ்., விக்ராந்த் போர் கப்பல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது. இது போல பெரிய கப்பல்களும் தயாரிக்கப்படும் என, உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். அமெ ரிக்காவில் தங்கி வேலை செய்வோருக்கான, 'எச் 1 பி' விசா கட்டணத்தை, 2 லட்சம் ரூபாயில் இருந்து 88 லட்சம் ரூபாயாக அதிகரித்து அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ள நிலையில், சுயசார்பு பற்றி பிரதமர் மோடி பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது - நமது நிருபர் -.