வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்த இவர்கள் தங்கள் பிறந்தநாளை செவ்வாய் கிரகத்தில் கூட கொண்டாடலாம். நாட்டில் பல கோடிப் பேர் ஒரு நேர உணவு கூட கிடைக்காமல் அல்லாடுகிறார்கள்.
பெங்களூரு: முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தேசிய தலைவருமான தேவ கவுடாவின் பிறந்த நாளை, ஏர் - இந்தியா நிறுவனம் நடுவானில் சிறப்பாகக் கொண்டாடியது.முன்னாள் பிரதமர் தேவகவுடா, 92 வயதை நிறைவு செய்து, இன்று 93வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அவரது பிறந்த நாளை கொண்டாட, அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள், தொண்டர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.டில்லியில் இருந்த தேவகவுடா, நேற்று முன்தினம் மாலை, ஏர் இந்தியா விமானத்தில் பெங்களூரு புறப்பட்டார். வழியில் அவருக்கு, 'ஏர் இந்தியா' ஊழியர்கள், இன்ப அதிர்ச்சி அளித்தனர்.அவரது பிறந்த நாளை முன்கூட்டியே கொண்டாட, ஊழியர்கள் கேக் ஏற்பாடு செய்தனர். அதை தேவகவுடாவை வெட்ட வைத்து, நடுவானில் பிறந்த நாள் கொண்டாடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.இதுகுறித்து, 'எக்ஸ்' வலைதளத்தில் நேற்று தேவ கவுடா வெளியிட்ட பதிவு:விமானம், 35,000 அடி உயரத்தில் பறக்கும்போது, என் பிறந்த நாளை கொண்டாடினேன். இதை ஏற்பாடு செய்த, ஏர் இந்தியா ஊழியர்கள் பிரகதி மற்றும் அயாஜ் ஆகியோருக்கு நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.
மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்த இவர்கள் தங்கள் பிறந்தநாளை செவ்வாய் கிரகத்தில் கூட கொண்டாடலாம். நாட்டில் பல கோடிப் பேர் ஒரு நேர உணவு கூட கிடைக்காமல் அல்லாடுகிறார்கள்.