உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பண்டிகை காலங்களில் விமான கட்டணத்தை உயர்த்தக்கூடாது: ஏர்லைன்ஸ்களுக்கு டி.ஜி.சி.ஏ., அதிரடி உத்தரவு

பண்டிகை காலங்களில் விமான கட்டணத்தை உயர்த்தக்கூடாது: ஏர்லைன்ஸ்களுக்கு டி.ஜி.சி.ஏ., அதிரடி உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'பண்டிகை காலங்களில், நியாயமான கட்டணங்களுடன் கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும்' என, விமான நிறுவனங்களை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. பண்டிகை காலம் நெருங்கி வரும் சூழலில், சொந்த ஊர் திரும்ப பலர் விமான சேவையை நம்பியுள்ளனர். இந்த சூழலில், நாட்டில் உள்ள விமான நிறுவனங்களுக்கு டி.ஜி.சி.ஏ., எனப்படும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்துள்ள உத்தரவு: பண்டிகை காலத்தில் கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே சமயம், விமான கட்டணங்கள் உயர்த்தப்படாமல் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனவே, நியாயமான கட்டணங்களுடன் கூடுதல் விமானங்களை, விமான நிறுவனங்கள் இயக்க வேண்டும். முந்தைய கட்டண நிலவரங்களுடன், பண்டிகை காலத்தில் உயர்த்தப்படும் கட்டணங்கள் ஆய்வு செய்யப்படும். இது தொடர்பாக இயக்குநரகம் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னணி நிறுவனங்கள் இந்த மாதமும், அடுத்த மாதமும் கூடுதல் விமானங்களை இயக்கப்போவதாக அறிவித்துள்ளன. 'இண்டிகோ' நிறுவனம், 42 வழித்தடங்களில், 730 கூடுதல் சேவையை வழங்க முடிவு செய்துள்ளது. அதேசமயம், 'ஏர் இந்தியா' நிறுவனம் , 20 வழித்தடங்களில், 486 கூடுதல் விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது. 'ஸ்பைஸ் ஜெட்' நிறுவனம், 38 வழித்தடங்களில், 500க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த விமானங்கள் எவ்வளவு காலம் இயக்கப்படும், எந்த நாள் முதல் இயக்கப்படும் போன்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி