உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழக புதிய டிஜிபி நியமன விவகாரம்: யுபிஎஸ்சிக்கு சுப்ரீம்கோர்ட் புதிய உத்தரவு

தமிழக புதிய டிஜிபி நியமன விவகாரம்: யுபிஎஸ்சிக்கு சுப்ரீம்கோர்ட் புதிய உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழகத்தில் புதிய டிஜிபி நியமிக்கும் விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை விரைந்து முடிக்குமாறு யுபிஎஸ்சிக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஆக.31ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். அதன் பின்னர் பொறுப்பு டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி வெங்கட்ராமன் என்பவரை தமிழக அரசு நியமித்தது. அதற்கான உரிய அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அவரும் பொறுப்பு டிஜிபியாக தமது பணிகளை துவங்கி உள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qmsqq8ik&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால் சீனியாரிட்டி என்ற அடிப்படையில் வெங்கட்ராமன் 9வது இடத்தில் தான் உள்ளார், அவருக்கு முன்னதாக 8 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளனர் என்று விமர்சனங்கள் எழுந்தன. அவரின் நியமனத்தை எதிர்த்து, சுப்ரீம்கோர்ட்டில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. அதில் புதிய டிஜிபி ஓய்வுபெறும் 3 மாதங்கள் முன்பாகவே தகுதியான புதிய டிஜிபி பெயர்களை யுபிஎஸ்சிக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும். ஆனால் அதுபோன்ற நடைமுறைகளை தமிழக அரசு பின்பற்ற வில்லை என்று குறிப்பிடப்பட்டது. தமிழக அரசின் இந்நடவடிக்கை 2015ம் ஆண்டு பிரகாஷ் சிங் வழக்கில், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.புதிய டிஜிபி பதவிக்கான நியமன செயல்முறை நடந்து கொண்டிருப்பதாக தமிழக அரசும் பதில் தெரிவித்து இருந்தது. இந் நிலையில் இந்த வழக்கு இன்று சுப்ரீம்கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இது தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு வருமாறு:டிஜிபி நியமன நடவடிக்கைகளை யுபிஎஸ்சி ஆணையம் விரைவாக பரிசீலிக்க வேண்டும். யுபிஎஸ்சி அளித்த பரிந்துரையின் பேரில், வழக்கமான முறையில் டிஜிபியை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Chandru
செப் 09, 2025 09:24

SC IS SHAMELESS COURT. IT IS UNDER THE CONTROL OF government OF TAMILNADU


sankaranarayanan
செப் 08, 2025 19:14

டிஜிபி நியமன நடவடிக்கைகளை யுபிஎஸ்சி ஆணையம் விரைவாக பரிசீலிக்க வேண்டும் எங்கே என்று கூறும் உச்ச நீதி மன்றம் , தவறு எங்கே நடந்துள்ளது யார் செய்தார்கள் என்று தெரிந்து அவர்களை தண்டிக்காமல் விட்டுவிட்டு தும்பை விட்டுவிட்டு சும்மா பெயருக்காக வாலை பிடிப்படித்து போலத்தான் உள்ளது, மூன்று மாதம் முன்பே மூன்று பெயர்களை அனுப்பாத திராவிட மாடல் அரசை ஏன் இன்னும் தண்டிக்காமல் விட்டு வைக்கவேண்டும் யாருடைய தயாவிற்காக குற்றம் புரிந்தவர்களை விட்டுவிட்டு அடுத்ர்த்தவர்களை தண்டிப்பது சரி அல்ல


D.Ambujavalli
செப் 08, 2025 18:45

நீதிபதி இடத்தில் தமிழக அரசே அமர்ந்துகொண்டு தீர்ப்பை எழுதியது போல இருக்கிறது


M S RAGHUNATHAN
செப் 08, 2025 18:39

My Lord, what is the definition for "quickly " process the DGP ion ? Why the SC has not fixed time limit to UPSC as it did to TN Governor and President. I think this judgement is pinching the SC now and has got itself in to a web and searching for a way to extricate itself from the mess d by itself.


Modisha
செப் 08, 2025 18:36

உச்ச நீதிமன்றம் திமுக அரசுக்கு எதிராக இதுவரை ஒரு தீர்ப்பும் தரவில்லை. அவ்வளவு நல்ல அரசு நடக்கிறது .தினமும் 10 கொலை , 20 கொள்ளை , 30 கற்பழிப்புக்கு மேல் நடக்கவிடாமல் அரசு கடும் நடவடிக்கை எடுக்கிறது .


Raja Ramesh D
செப் 08, 2025 17:42

தொடர்ச்சியாக ஐந்தாவது பொறுப்பு டிஜிபி: உத்தரபிரதேசத்தில் இன்னும் நிரந்தர காவல்துறைத் தலைவர் இல்லாதது ஏன்? மே 2022 முதல், மாநிலம் தொடர்ச்சியாகப் பொறுப்பு டிஜிபிக்களைக் கண்டுள்ளது, தேவேந்திர சிங் சவுகான் 11 மாதங்கள் இந்தப் பதவியை வகித்தார். அவருக்குப் பிறகு ஆர்.கே. விஸ்வகர்மா, விஜய் குமார் மற்றும் பிரசாந்த் குமார் ஆகியோர் பதவியேற்றனர், அனைவரும் அலுவலகப் பொறுப்பில் இருந்தனர்.


Rajan A
செப் 08, 2025 19:36

உடனே உபி, காபினு. இந்த குருட்டு 200 கும்பல் ஆரம்பித்து விடும்


vijay
செப் 08, 2025 17:35

சபாஷ் சரியான தீர்ப்பு


M S RAGHUNATHAN
செப் 08, 2025 17:22

ஆளுநருக்கு காலக்கெடு விதித்த உச்ச நீதிமன்றம் ஏன் UPSC க்கு காலக் கெடு விதிக்காமல் " As soon as " என்று சொல்லி இருக்கிறது ? மேலும் ஏன் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி டிஜிபி ஓய்வு பெறும் தேதிக்கு 3 மாதங்கள் முன்னரே அனுப்பவில்லை என்று கேள்வி எழுப்பவில்லை ? UPSC தாமதம் செய்தால் உச்ச நீதிமன்றம் என்ன செய்யமுடியும் ? ஒரு controversial தீர்ப்பினால் ஏற்பட்டு இருக்கும் விளைவுகள் விபரீதமாக இருக்கிறது.


Arul Narayanan
செப் 08, 2025 18:43

இப்போதும் கூட பெயர் பட்டியல் தமிழ்நாடு அரசால் கொடுக்கப்பட்டதாக செய்தி இல்லை.


SIVA
செப் 08, 2025 17:20

வாய்க்கு வந்தபடி கேள்வி கேட்க இந்த வழக்கில் கவர்னர் மற்றும் ஜனாதிபதி சம்பந்தப்படவில்லை ....


G Mahalingam
செப் 08, 2025 16:33

உச்ச நீதிமன்றம் ஒரு திமுக அரசுக்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.. விதி மீறல் நடந்து இருக்கு என்று தெரிந்தும் நீதிமன்றம் கண்டுக்கவில்லை


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 08, 2025 17:24

நீதிமன்றம் கழக அரசை கேள்வி கேட்க கழக சட்டத்துறை அனுமதிக்காது


Arul Narayanan
செப் 08, 2025 18:41

கண்டனம் தெரிவித்து விட்டு உபிக்களிடம் வாங்கி கட்டிக் கொள்ளும் தைரியம் இல்லை.


சமீபத்திய செய்தி