உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேலை பளு காரணமாக கேரள பெண் உயிரிழப்பா? விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

வேலை பளு காரணமாக கேரள பெண் உயிரிழப்பா? விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தனியார் கணக்கு தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றிய 26 வயது கேரள பெண், வேலைப்பளு காரணமாக மன அழுத்தத்தில் உயிரிழந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக, மத்திய தொழிலாளர் துறை இணையமைச்சர் ஷோபா கரண்ட் லாஜே தெரிவித்துள்ளார்.கேரளாவைச் சேர்ந்தவர் அன்னா செபாஸ்டியன் பேரயில், 26; சி.ஏ., படித்து முடித்துள்ளார். பின், 'எர்னஸ்ட் அண்டு யங்' என்ற கணக்கு தணிக்கை நிறுவனத்தின் துணை நிறுவனமான, 'எஸ்.ஆர்., பாட்லிபாய்' என்ற நிறுவனத்தின், மஹாராஷ்டிரா மாநிலம் புனே கிளையில் கடந்த மார்ச் மாதம் பணியில் சேர்ந்தார்.நான்கு மாதங்கள் பணி செய்த நிலையில், கடுமையான உடல் சோர்வு மற்றும் உடல்நலக் கோளாறுகள் காரணமாக, புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு, சிகிச்சை பலனின்றி ஜூலை 20ல் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து அவரது தாய், 'எர்னஸ்ட் அண்டு யங்' நிறுவனத்துக்கு நேற்று முன்தினம் கடிதம் ஒன்றை எழுதினார். அது, சமூக வலைதளங்களில் பரவியது.அதில், தன் மகள் அன்னா செபாஸ்டியன் கடுமையான வேலைப்பளு காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே துாக்கமின்மையால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு இளம் வயதில் மரணம் அடைந்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார்.இதை, 'எர்னஸ்ட் அண்டு யங்' நிறுவனத்தின் தலைவர் ராஜிவ் மேமானி திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், “அன்னா செபாஸ்டியனின் திடீர் மரணம் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.“அவர் சிறிது காலம் தான் இங்கு பணியாற்றினார். இது போன்ற துயரமான நேரத்தில் நாங்கள் செய்ய வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்துள்ளோம்,” என தெரிவித்தார்.இந்த விவகாரம் குறித்து மத்திய தொழிலாளர் துறை விசாரணை நடத்த வேண்டும் என, பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர், கோரிக்கை விடுத்தார்.இதையடுத்து, “அன்னா செபாஸ்டியனின் மரணத்தில் அவரது தாயார் தெரிவித்துள்ள புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்,” என மத்திய தொழிலாளர் துறை இணையமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே நேற்று உறுதி அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Lion Drsekar
செப் 20, 2024 11:46

வேலைத்தன்மை ஒருபுறம் இருந்தாலும் ஒரு சில மனிதர்கள் நாம் இங்கு செய்தித்தாள்களில் இந்திய வம்சாவளி என்றெல்லாம் கூறிக்க்கொண்டு அறிகிறோம், அப்படிப்பட்டவர்கள் அதுவும், அதே கூலிவேலைக்கு வெளிநாட்டுக்குச் சென்று பிழைப்பு நடத்திவரும் நம்மவர்கள் இங்குள்ள நன்றாக படித்த தகுதியுடையு இந்தியாவில் பணியாற்றும் ஊழியர்களை மிக மிக கேவலமாக நடத்தி, வேண்டும் என்றே கேள்விகளை மேல் கேள்விகள் கேட்டு இரவெல்லாம் அந்த நேரம் அவர்களுக்கு பகல் எரம் ஆகவே குடைந்து எடுக்கிறார்கள், , பாதிக்கப்பட்டவர்கள் ஜோஸ்யரைகளை நாடுகிறார்கள், அவர்கள் நேரம் சரியில்லை பரிகாரம் என்று இவர்களது பணத்தை சூறையாடுகிறார்கள் , சிலர் மாந்திரீகத்துக்குச் சென்று பணத்தை இழக்கிறார்கள், என்னிடம் பலர் தினம் தினம் நேரிலும் கைபேசியில் அழுது புலம்பி வருகிறார்கள், ஆண்டுதோறும் அப்ரைசல் என்று ஒன்று இருக்கிறது அதில் அங்குள்ள தீயசக்திகள் தங்களுக்கு சாதகமான உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் எந்த ரூ வேலையும் தெரியாதவர்களுக்கு சம்பளத்தை உயர்திக் கொடுத்தால், வெளிநாட்டு வாய்ப்புக்கு ழைத்துச் என்று அவர்களை கொண்டாடுதல் மிக அதிகமாக இருக்கிறது, ஒருவர் ஒரு வேலையை திறம்பட செய்தால் எப்படி செய்தீர்கள் ந்ருகேள்வி கேட்க்கிறார்கள், அப்படியே பதில் சொன்னாலும் இந்த முடிவுக்கு ப்படி வந்தீர்கள் தாங்களே முடிவெடுத்தீர்களா, உடன் பணியாற்றுபவர்களிடம் ஆலோசனை கேட்டு அந்த அணியை செய்தீர்களா , கூகிளில் பார்த்து முடிவு எடுத்தீர்களா என்று கேட்க்கிறார்கள் இவர்கள் தாங்கள் சரியாக செய்த பணிக்கு விளக்ககம் அழைத்தவுடன் மீண்டும் அப்படி என்றால் உங்களுக்கு முழுமையாக இந்த துறையில் போதிய அனுபவம் இல்லை என்று கூறி, எல்லோரும் கலந்து உரையாடும் நேரத்தில் பலர் முன்னிலையில் அவமானப்படுத்துவது , ஒரு வேலை செய்துகொண்டு இருக்கும்போது வேறு ஒரு வேலையைக் கொடுத்து செய்யச்சொல்வது, இப்படியே ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பணியாகக் கொடுத்து மற்றவர்கள் செய்யவேண்டிய வேலையை இவர்களை வைத்து செய்யச் செய்வது, வார முடிவில் அல்லது மாத முடிவில் உங்களுக்கென்று ஓதப்பட்ட வேலையை நீங்கள் ஒழுங்காக செய்யவே இல்லை என்று கூறி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது என்று ஒவ்வொரு நாளும் மிக மிக கொடூரமாக நடந்து கொள்பவர்கள் வெளிநாட்டினர் இல்லை இங்கிருந்து சென்ற நம்மபவர்கள்தான் . உழைப்பவர்கள் உழைத்துக் கொண்டே இருக்கவேண்டும், ஏமாற்றுபவர்கள் மிக அதிக அளவில் இருக்கிறார்கள் அவர்களை சுட்டிக்காட்டுபவர்களுக்கு இருப்பது அவமானம், வேலை பறிப்பு இல்லை என்றால் இப்படி மிக அதிகநேரம் உலைக்கவைத்து சாகடிப்பது இதுதான் இன்றைய நடைமுறை, இது ஏதோ கீழ் இலையில் பணிபுரியும் ஊழியருக்கு மட்டும் இல்லை மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கும், இதே நிலைதான் , யாருக்கு எந்த நேரத்தில் எது நடக்கும் என்பதே தெரியாது, பல துன்பங்கள் எல்லா அலுவலகங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது, சிறப்புகளும் நடந்துகொண்டுதான் இருக்கிறது, வெளி உலகிற்கு கொண்டுவராத பெற்றோர்கள் , சென்னையில் வசிக்கும் 80- வயது பெரியவர் மனைவி ஒரே மகன் , பெயர் திரு பாலாஜி, மிகப்பெரிய பங்க்கில் சீனியர் துணைத்தலைவர் , மிக உயரமானவர், நீச்சல், உடற்பயிற்சி என்று அவரைபபர்த்தாலே ஒலிம்பிக் பந்தயத்தில் பங்குபெறுபவர்போல் இருப்பார், அவருடைய எல்லா விபரங்களையும் நான் இங்கு கொடுக்க தயாராக இருக்கிறேன், அவர் மனைவி இரண்டு மகன்கள் மும்பையில் இருந்தார்கள் , இரவு படுத்தவர் காலை எழுந்திருக்கவில்லை, வேலைப்பளு, மன அழுத்தம், இப்பவும் பெற்றோர்களுடன் தினம் பேசி மன ஆறுதல் கூறிவருகிறேன் இப்படி வீட்டுக்கு ஒரு மனரீதியான உளைச்சல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன , இந்த இயல்பாடுகளில் தற்போது மிக மிக ஆபத்தான நிகழ்வும் நடந்து கொண்டு வருகிறது, அதாவது ஒரு மாநிலத்தில் இருந்து பணியில் சேர்ந்தவர்கள் அவர்கள் மாநிலத்தில் இருக்கும் அந்த மொழி பேசுபவர்களை மிக அதிக அளவில் பணியில் அமர்த்தி வருகிறார்கள், தகுதியும் திறமையும் இருந்தாலும் மேல் இடத்தில பணியாற்றும் உயர் அதிகாரிகள் பணியில் அமர்த்தினாலும் , தங்கள் மாநிலத்தவர்கள் ள்ள என்பதற்காக எந்த ஒரு காரணமும் இல்லாமல் அவர்களுக்கு வேலைக்கான பணி ஆர்டர் வழங்குவதில்லை,l எந்த அரசு எந்த உத்தராவது பிறப்பித்தாலும் இவர்களாக திருந்தினால் மட்டுமே ஊழியர்கள் நிம்மதியாக இருப்பார்கள், மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் இன்றைய போட்டியுலகில் தாங்கள் பணியாற்றும் கம்பெனிகளுக்கு பர்தார் கொண்டுவந்து , ஊழியர்களின் பிரித்துக்கொடுத்து பணியில் அமர்த்தினால், பணியாளர்கள் இப்படி ஒரு கொடூர இயல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது . வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் தங்கள் மொழி மற்றும் இனத்துக்குக்காக ஒற்றுமையாக இருந்து மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறார்கள் ஆனால் நம்மவர்கள் நமக்கு எந்த விதத்திலும் ஒருவருக்கொருவர் உதவுவதே கிடையாது . எனது உறவினர் மிகப்பெரிய கம்பெனியில் மிக உயர்ந்த பதவியில் வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்துவருகிறார் , உறவினர்தானே என்ற உரிமையில் நேரில் சந்திக்கும் காலத்தில் இங்குள்ள ஏழை எளியவர்களுக்கு வெளிநாட்டில் ஏதாவது அல்லது உங்கள் கம்பெனியிலேயே இங்கே ஏதாவது ஒரு நல்ல வேலைவாய்ப்பைக் கொடுக்கலாமே என்று கேட்டதற்கு , நீங்கள் வேற , நாங்களே அங்கு வரவேற்பு அதாவரது ரெஸிபிஷன் வேலைதான் செய்துகொண்டு இருக்கிறோம் , இங்கேதான் வேலைவாய்ப்பு அதிகம், சம்பளமும் அதிகம் என்று மழுப்பினார் , தொண்டு செய்வதே எனது நோக்கமாகும் ஆகவே அதைக்கேட்ட என் மனம் மிகவும் புண்பட்டுவிட்டது, இங்குள்ள அரசியல் மற்றும் நடவடிக்கை எடுக்கவேண்டிய துறைகளில் புகார் செய்யலாம் என்றால் , அண்ணனாக இருந்தாலும் தம்பியாக இருந்தாலும் கப்பம் காட்டினால்தான் அதுவும் நிச்சயம் இல்லை, செந்தில் பாலாஜி நினைவுக்கு வருகிறது மன்னிக்கவும், சாட்சி காரன் காலில் வீழ்வதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்ற நிலைக்கு இன்று தனியார் குறை மட்டும் இல்லை அரசு துறைகளிலும் இதே பாதிப்பு இருக்கிறது , அதையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும், நம் நாட்டில் மிக மிக உயர்ந்த பதவி, வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அலுவலகத்துக்கு பல மணி நேரம் தாமதமாக பணிக்கு வந்து, தனி கார் , தனி அறை வசதிகளுடன் பல லட்சம் அம்பலம் இருப்பவர் , என் மீது நடவடிக்கை எடுத்தால் நான் அந்த நபர் யார் என்று கூறவும் தயாராக இருக்கிறேன் , உலகுக்கே தெரியும் அவர் யார் என்று , அந்த அரசு அலுவலகம் மட்டும் அல்ல எல்லோருக்குமே தெரியும் , அவரது பணி என்னவென்றால், கண்ணாடிவழியாக பார்த்து தனக்கு கீழே பணியாற்றும் ஊழியர்களை அறைக்குள் அழைத்து இவருக்கு யாரெல்லாம் பிடிக்காதோ அவர்களை எல்லாம் சுட்டிக்காட்டி எந்த ஒரு பணியும் செய்யாமல் இருக்கிறீர்கள் நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று தினம் இனம் தொட்டுவிட்டு , எல்லோரும் வீட்டுக்கு செல்வதற்கு முன்பாக இவர் அரசு காரில் வீட்டுக்குச் என்று வீட்டு வேலை செய்ய கிளம்பிவிடுவார். இறந்த பிறகு நடவடிக்கை விசாரணை எடுப்பதற்கு பதிலாக பணியில் இருக்கும்போதே ஒரு புகார் துறை ஏற்படுத்தி துறை ரீதியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வேலைக்கு செல்பவர்கள் நிம்மதியாக வாழ்வார்கள், வந்தே மாதரம்


veeramani
செப் 20, 2024 09:15

ஒரே ஓ ரூ கேள்வி .. வேலைத்தன்மைகள் , வேலைச்சுமைகள் தெரிந்துதான் இவர் வேளையில் சேர்ந்து இருப்பார்.சம்பளம் அதிகம் வேண்டும்.. அனால் வேலை இருக்கக்கூடாது . இதுதான் மலையாளிகளின் கொள்கை. இதனால்தான் கேரளா தொழில்வளம் இல்லாத மாநிலம் ஆனது


N.Purushothaman
செப் 20, 2024 08:55

இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்லவனிடம் பிரார்த்தனைகள் ..அதே சமயம் தணிக்கை துறையில் வேலை கடினமாக இருக்கும் ..ஆனால் வேலைப்பளு என்பது குறைவாக தான் இருக்கும் ....ஒரே நேரத்தில் பல தணிக்கைகளை ஒரு சேர பார்க்க மாட்டார்கள் ..விசாரணை நடத்தி உண்மை வெளி கொண்டு வர வேண்டும் ...


rama adhavan
செப் 20, 2024 04:17

வேலை பளு சாத்தியம் இல்லை. பளு என்றால் ராஜிணாமா செய்துவிட்டு ஆடிட்டர் ஆக ப்ராசிட்டிஸ் செய்யலாமே? ஆடிட்டர் ஆஃபீசில் பங்குதாரராக சேர்ந்து சுய தொழில் செய்யலாம். நல்ல சம்பளம். எனவே போய் இருக்கிறார். ஐ டி நிறுவனங்களில் மென் பொருள் பொறியாளர்கள் படும் வேதனையை விடவா? பிரிச்சனைக்கு குறித்த நேரத்தில் கோடிங் செய்து விடை வரவில்லை எனில் சீட்டை கிழித்து விடுவார்கள். அடுத்த வேலையும் கெடைக்காது. பட்டய தணிக்கையில் அப்படி ஒன்றும் பிரச்சனை இல்லை.


sekar
செப் 20, 2024 08:52

பட்டய தணிக்கை வாவ் , ராஜினாமா தமிழ் illaiye????


புதிய வீடியோ