விலகி செல்லவில்லை!
கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களில் மத்திய அரசு த னது நிலுவைத் தொகையை நிறுத்தினாலும், மேற்கு வங்கம் வளர்ச்சிப் பாதையில் இருந்து விலகி செல்லவில்லை. சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், எங்களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை மத்தி ய அரசு எப்போது அளிக்கும்? மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்கிரஸ்நோபல் பரிசுக்கு தகுதி!
செய்யாத குற்றத்தை செய்ததாக குறிப்பிடும் அமலாக்கத்துறை மற்றும் பா.ஜ.,வுக்கு நோபல் பரிசு பெற தகுதி உள்ளது. பொருளாதார சரிவு, வேலைவாய்ப்பின்மை போன்ற முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை முற்றிலும் திசைத்திருப்பும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. அபிஷேக் சிங்வி செய்தித்தொடர்பாளர், காங்.,
வெளிநாட்டு கடன் ஏன்?
'மசாலா' பத்திரங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து கேரள அரசு கடன் பெற்றுள்ளது. இதற்காக, 9.5 சதவீதம் வட்டித்தொகையும் செலுத்த வேண்டும். நம் நாட்டு சந்தைகளில் இதுபோன்ற கடன்களுக்கு குறைந்த வட்டி கிடைக்கிறது. அவற்றை விடுத்து அதிக வட்டியுடன் கடன் பெற வேண்டிய அவசியம் என்ன? ராஜிவ் சந்திரசேகர் கேரள பா.ஜ., தலைவர்