உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்தது 

கர்நாடகாவில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்தது 

பெங்களூரு : கர்நாடகாவில் டீசல் விலை நேற்று லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது.கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அடுத்த மாதத்துடன் இவர்கள் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆக போகிறது. இந்த இரண்டு ஆண்டுகளில், வளர்ச்சி பணிகள் செய்து எந்த சாதனையும் படைக்கவில்லை. அத்தியாவசிய பொருட்கள் மீதான விலையை உயர்த்தியதே இவர்களின் சாதனையாக உள்ளது.பால், பஸ், மெட்ரோ ரயில் உள்ளிட்டவைகளின் விலை மற்றும் கட்டணத்தை உயர்த்தினர். சொத்து வரியுடன் சேர்த்து குப்பைகளுக்கு வரி வசூலிப்பது; குடியிருப்பு பகுதிகளில் உள்ள பார்க்கிங்கில் வாகனத்தை நிறுத்த கட்டணம் என்று, ஒரே நாளில் நேற்று மக்கள் தலையில் இடிகளை இறக்கினர்.இந்நிலையில் நேற்று இரவு மக்களுக்கு, மீண்டும் ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை அரசு அளித்துள்ளது. கர்நாடகாவில் டீசல் மீதான விற்பனை வரியை 18.44 சதவீதத்தில் இருந்து 21.17 சதவீதமாக உயர்த்தி மாநில அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவு வெளியான சிறிது நேரத்தில், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்ந்தது. இதன் மூலம் லிட்டருக்கு 89.02 ரூபாயாக இருந்த டீசல் 91.02 ரூபாயாக உயர்ந்து உள்ளது. இந்த விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ஆரூர் ரங்
ஏப் 02, 2025 10:49

இந்த விலையுயர்விலிருந்தும் அந்த 4 பர்சென்ட் ஆட்களுக்கு விலக்கு உண்டா?


வாய்மையே வெல்லும்
ஏப் 02, 2025 07:50

இங்குட்டு வரி ஏற்றி மக்களிடம் வாங்கிட்டு வெட்கமே இல்லாம நம்ம பணத்துல நோம்பு கஞ்சி குடிச்சிட்டு அவங்க முன்னாடி நல்ல பெயர் எடுப்பது தான் ஜெகஜால கில்லாடி தனம் கலந்த அக்மார்க் மொள்ளமாரி வேலை. இவங்களுக்கு வோட்டு போட்ட ஹிந்துக்களை சொல்லணும்


Rajan A
ஏப் 02, 2025 06:42

மக்களின் கஷ்டம் பற்றி கவலையில்லை, நாற்காலி பற்றி தான் கவலை. கான் கட்சிக்கு வோட்டு போட்டு தன் தலையில் வேட்டு வைத்து கொண்டார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை