உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வேறு வேறு தண்டனை; காதலனை விஷம் வைத்து கொன்ற பெண்ணுக்கு துாக்கு ; மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு ஆயுள்

வேறு வேறு தண்டனை; காதலனை விஷம் வைத்து கொன்ற பெண்ணுக்கு துாக்கு ; மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவனுக்கு ஆயுள்

திருவனந்தபுரம்/ கோல்கட்டா: கேரளாவில், கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலன் கொலை செய்யப்பட்ட வழக்கில், காதலி கிரீஷ்மாவுக்கு அந்த மாநில நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்துள்ளது. மேற்கு வங்கத்தில், ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையின் ஜூனியர் டாக்டர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பாறசாலை மூறியன்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஷாரோன் ராஜ், 23. இவர், தமிழக - கேரள எல்லையில் உள்ள தனியார் கல்லுாரியில், ரேடியாலஜி படிப்பு படித்து வந்தார்.

வேறு நபருடன்

கல்லுாரிக்கு பஸ்சில் சென்று வந்த நிலையில், தினமும் உடன் பயணித்த தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா, 22, என்பவரை, ஷாரோன் ராஜ் காதலித்தார்.ஒரு ஆண்டுக்கு மேலாக ஒன்றாக பழகிய நிலையில், தனக்கு வேறொரு நபருடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், தன்னுடன் பழகுவதை நிறுத்தும்படி ஷாரோன்ராஜிடம், கிரீஷ்மா கூறியிருந்தார்.ஆனால், அதை அவர் கேட்காமல் தொடர்ந்து காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஷாரோனுடனான உறவை கிரீஷ்மா துண்டிக்க விரும்பினார்.கிரீஷ்மாவை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு, 2022, அக்., 14ல் ஷாரோன் ராஜ் சென்ற போது, அவருக்கு ஆயுர்வேத கஷாயம் எனக் கூறி, பூச்சிக்கொல்லி மருந்து கலந்த கஷாயத்தை கிரீஷ்மா கொடுத்தார். இதை குடித்த ஷாரோன் ராஜ், அன்றைய தினமே நோய்வாய்ப்பட்டார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் உடலுறுப்புகள் செயலிழந்ததை அடுத்து, அக்., 25ல் அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், ஆசிட் போன்ற திரவத்தை குடித்ததால், ஷாரோன் ராஜின் உடலுறுப்புகள் செயலிழந்தது தெரியவந்தது.முன்னதாக, கிரீஷ்மா தந்த கஷாயத்தாலேயே தன் உடல் பாதிக்கப்பட்டதாக நண்பர் ஒருவரிடம் கூறியிருந்த ஷாரோன்ராஜ், இது குறித்து யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்றும் சொல்லிஇருந்தார்.அவர் மரணமடைந்ததை அடுத்து, ஷாரோன்ராஜ் குடும்பத்தினருக்கு இந்த விஷயம் தெரிய வரவே, அவர்கள் கிரீஷ்மா மீது போலீசில் புகார் அளித்தனர்.

கிடுக்கிப்பிடி

அதனடிப்படையில், பாறசாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். பின்பு இந்த வழக்கு, கேரளாவின் திருவனந்தபுரம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. கிரீஷ்மாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், காதலன் ஷாரோனுக்கு கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொன்றதை, அவர் ஒப்புக்கொண்டார்.காதலித்த போது நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, வருங்கால கணவரிடம் காண்பித்து விடுவார் என்ற பயத்தில் ஷாரோனை கொன்றதாக, கிரீஷ்மா வாக்குமூலம் அளித்தார்.அவரை ஐந்து முறை கொல்ல முயன்றதும், இதற்கு தன் தாய் சிந்து, மாமா நிர்மல குமாரன் நாயர் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.இதையடுத்து, கிரீஷ்மா, சிந்து, நிர்மல குமாரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, திருவனந்தபுரத்தில் நெய்யாட்டிங்கரா கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த 17ம் தேதி கிரீஷ்மா மற்றும் நிர்மல குமாரன் ஆகியோர் குற்றவாளிகள் என, தீர்ப்பளிக்கப்பட்டது.போதிய ஆதாரங்கள் இல்லாததால், சிந்து, வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். கடந்த 18ல் நீதிமன்றத்தில் ஆஜரான கிரீஷ்மா, 'தாய் - தந்தையருக்கு ஒரே மகள் என்பதால், வயதை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

நம்ப வைத்து ஏமாற்றி

அப்போது அரசு வழக்கறிஞர், 'குற்றவாளி கிரீஷ்மா, மனித குணத்தை மீறி அரக்க குணத்துடன் செயல்பட்டு, காதல் என்ற பெயரில் நம்ப வைத்து ஏமாற்றி, இந்த கொலையை செய்துள்ளார்.'இதனால், ஒரு இளம் வாலிபனின் உயிர் துன்பப்பட்டு பிரிந்துள்ளது. எனவே, அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:

இந்த வழக்கை மேற்கு வங்க போலீசார் தான் முதலில் விசாரித்தனர். ஆனால், மேற்கு வங்க போலீசாரிடமிருந்து இந்த வழக்கு பறிக்கப்பட்டு, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் சரியாக விசாரித்திருந்தால் குற்றவாளிக்கு துாக்கு தண்டனை கிடைத்திருக்கும்.சி.பி.ஐ., முறையாக விசாரிக்க தவறி விட்டது. குற்றவாளிக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை எனக்கு திருப்தி அளிக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.

'தண்டனை திருப்தி இல்லை'

இங்கு கோல்கட்டாவில், ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு, ஜூனியர் டாக்டராக பணியாற்றி வந்த 31 வயது பெண், கடந்தாண்டு ஆக., 9ல் மருத்துவமனையின் கருத்தரங்க அரங்கில் பிணமாக கிடந்தார்.

போராட்டம்

பிரேத பரிசோதனையில் அந்த பெண், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது, நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பணியிடத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு இல்லாததை கண்டித்து, நாடு முழுதும் உள்ள டாக்டர்கள், போராட்டத்தில் குதித்தனர். முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.கொலை நடந்த மறுதினம், சஞ்சய் ராய் என்ற இளைஞரை, போலீசார் கைது செய்தனர். அவர், போலீசாருக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் தன்னார்வல அமைப்பில், உறுப்பினர் என்பது தெரியவந்தது. கோல்கட்டா உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கு, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது.

2 பேருக்கு ஜாமின்

விசாரணைக்கு பின், குற்றவாளி சஞ்சய் ராய் மீது, பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மருத்துவக் கல்லுாரியின் முதல்வர் சந்தீப் கோஷ், போலீஸ் அதிகாரி அபிஜித் மோண்டல் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் இருவர் மீதும், 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், இருவருக்கும் ஜாமின் கிடைத்தது. கல்லுாரி முதல்வர் சந்தீப் கோஷ் மீது பல்வேறு ஊழல் புகார் இருப்பதால், அவர் இன்னும் சிறையில் உள்ளார்.சஞ்சய் ராய் மீதான பாலியல் பலாத்கார வழக்கு விசாரணை, கோல்கட்டா மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில், கடந்தாண்டு நவ., 12ல் துவங்கியது. குற்றவாளி சஞ்சய் ராய்க்கு துாக்கு தண்டனை விதிக்கும்படி, சி.பி.ஐ., தரப்பில் கோரப்பட்டது.

ராய் மறுப்பு

தன் மீதான வழக்கை ஏற்க மறுத்த சஞ்சய் ராய், 'என் மீது திட்டமிட்டு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் குற்றவாளி அல்ல' என, தெரிவித்தார்.கடந்த 9ம் தேதி விசாரணை முடிவடைந்தது. இந்த வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என, நீதிபதி அனிர்பன் தாஸ் கடந்த 18ல் அறிவித்தார். அவருக்கான தண்டனை

'

'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Barakat Ali
ஜன 21, 2025 11:12

இரண்டு வழக்குகளையும் ஒப்பிடுவது சட்டத்தின் பார்வையில் வேடிக்கை ......குற்றம் நிகழ்ந்த சந்தர்ப்பம், குற்றவாளியின் மனநலன், குற்றத்தின் பின்னணி போன்ற அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொண்டு வழங்கப்படுவதுதான் தண்டனை ....


Kanns
ஜன 21, 2025 09:30

Both Cases are Different. Overwhelming Against Criminal Wife for Poisoning Husband. In KolkataDr Rape& Murder Case, Main/Real Accused Escaped BUT Others Implicated as Main Accused. Trial by Incompetent Judges Must have Found Truths for Punishing Main Accused& Kolkata Police for Destroying Evidences several DNAs found Foresically. SHAMEFUL JUSTICE


Rajesh
ஜன 21, 2025 08:43

God have good judgement to all peoples. There is no judges, police, lawyers and partiality. Everyone will get good results for what we did. Wait for the long journey


Rajesh
ஜன 21, 2025 08:28

Kerla boy, Tamil nadu girl, good reason for giving speed judgement from Kerla If the girl is kerla then no one knows this issue.


Priyan Vadanad
ஜன 21, 2025 08:24

செய்தியை கோர்வையாக வெளியிடலாம்.


நிக்கோல்தாம்சன்
ஜன 21, 2025 06:38

இந்திய நீதிமன்றம் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்துகொள்ள ஜனாதிபதி அறிவுரை கூறுவாரா , இல்லை மக்கள் தங்கள் கையில் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தவேண்டுமா


Mani . V
ஜன 21, 2025 05:43

ரெண்டு பேரும் வேறு வேறு செலபஸில் படித்து இருப்பார்கள். அதனாலதான் வேறு வேறு விடை. ஒருவருக்கு 2X2=4, இன்னொருவருக்கு 2X2=7. That’s all.


MUTHU
ஜன 21, 2025 09:35

பொய் சாட்சியாய் இருந்தாலும் கூட முக்கியசாட்சியின் நம்பகத் தன்மையே வழக்கின் தீர்ப்பிற்கு ஆதாரமாய் இருக்கும். மேற்கு வங்க மாணவி வழக்கு அதனாலேயே தூக்கிற்கு பதில் ஆயுள் தண்டனைக்கு இட்டுச்சென்றிருக்கலாம். அவர் சில ஆண்டுகளில் விடுதலையாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.


ram
ஜன 21, 2025 04:58

தமிழ் நாடு அரசு அந்த லட்சனத்துலே இருக்கு.


Priyan Vadanad
ஜன 21, 2025 08:25

அட ராமா இந்த அளவுக்கா செய்தியின் புரிதல் இல்லாமல் முத்தி போய்விட்டது?


சமீபத்திய செய்தி