உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யாருடன் விருந்து சாப்பிட பிடிக்கும்: ஜெய்சங்கர் அளித்த நச் பதில்

யாருடன் விருந்து சாப்பிட பிடிக்கும்: ஜெய்சங்கர் அளித்த நச் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அல்லது அமெரிக்க முதலீட்டாளர் ஜார்ஜ் சோரோஸ் ஆகியோரில் யார் ஒருவருடன் விருந்து சாப்பிட விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அளித்த பதில் வைரலாகி உள்ளது.முன்னாள் வெளியுறவு செயலாளரான ஜெய்சங்கர், தற்போது வெளியுறவு அமைச்சராக உள்ளார். உலக அரங்கில் கடினமாக கேட்கப்படும் எந்த கேள்விக்கும் அவர் உடனடியாக பதிலளித்து, கேட்டவர்களையே திகைப்பில் ஆழ்த்துவார். உள் அர்த்தத்துடன் கேட்கப்படும் கேள்விகளை புரிந்து கொண்டு, அதற்கு சளைக்காமல் ஜெய்சங்கர் பதிலளிக்கும் நிகழ்வு பல முறை நடந்துள்ளது.அந்த வகையில், டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜெய்சங்கரிடம், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அல்லது அமெரிக்க முதலீட்டாளர் ஜார்ஜ் சோரோஸ் ஆகியோரில் ஒருவருடன் விருந்து சாப்பிடுவீர்கள் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள் என தொகுப்பாளர் கேள்வி கேட்டார்.அதற்கு ஜெய்சங்கர் சிறிதும் யோசிக்காமல் உடனடியாக, ''இது நவராத்திரி காலம். நான் விரதம் இருக்கிறேன்''. என பதிலளித்தார். இதற்கு கேள்வி கேட்டவர் மட்டுமல்லாமல், இந்த நிகழச்சியில் பங்கேற்றவர்கள் அனைவரும் பலத்த கைதட்டி சிரித்தனர்.வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் அவ்வப்போது ஏவுகணைகளை பரிசோதனை செய்து அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டி வருகிறார். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் ஜார்ஜ் சோரோஸ், இந்தியாவிற்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கருத்துகளை கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் ஆவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Rajpal
அக் 07, 2024 10:57

டைனிங் டேபிளில் என்பது பலருக்கும் பரஸ்பரம் மனம் விட்டு பேசிக்கொள்ளும் ஒரு இடம். ஆகவே சாப்பிட்டுக் கொண்டே நாட்டு நடப்புகளைப் பற்றிப் பேசி இவர்களை நல்வழிப்படுத்தலாம் என்று கூட யோசித்துப்பார்.


Ramesh Sargam
அக் 06, 2024 22:15

யார் கிட்ட...


Sivagiri
அக் 06, 2024 22:04

அப்போ ,நவகாளியா மாறுவாரோ ,


Sundar R
அக் 06, 2024 19:51

JaishankarJi is a world renowned professional. We should be proud of him.


Kalyanaraman
அக் 06, 2024 18:38

நினைச்சு பார்க்க முடியாத மிகவும் புத்திசாலித்தனமான பதில்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
அக் 06, 2024 18:21

Spontaneous, நகைச்சுவை, இராஜதந்திரம் மற்றும் சாதுர்யம் கலந்து பதில் சொல்வதில் சோ அவர்கள் சிறந்தவர். தற்போது அவரின் வழியில் நம் அமைச்சர் ஜெய்சங்கர்.


Ramesh Trichy
அக் 06, 2024 17:42

Perfect reply... Jaishankar is the great..


விரதராஜன்
அக் 06, 2024 17:30

இன்னும் நாலு நாள் கழிச்சு நவராத்திரி முடிஞ்சதும் கேளுங்க. இதெல்லாம் ஒரு கேள்வி. அதுக்கு நச்சுனு பதில் வேறயாம். ஜீ யாரோட சாப்புட சொல்றாரோ அவரோடதான் விருந்து.


சாண்டில்யன்
அக் 06, 2024 19:19

விரதம் இருப்பதால் நான்வெஜ் கிடையாது என்று வருந்துவது போல சொல்லிட்டாரே


Krishnaveni Jeyaraman
அக் 07, 2024 12:36

எங்கள் பாரதி ரௌத்திரம் பழகவும் கற்றுக் கொடுத்துள்ளார் நண்பரே.


Krishnaveni Jeyaraman
அக் 07, 2024 12:38

எங்கள் பாரதி ரௌத்ரம் பழகவும் கற்றுக்கொடுத்துள்ளார் நண்பரே..


Lion Drsekar
அக் 06, 2024 17:12

மக்களுக்காக சேவை செய்பவர்கள் மக்களுடன் சாப்பிட்டால் மக்களின் குறைகளை அறிந்து அவர்கள் வாழ்க்கைக்கு வழி வகுக்கலாம் , வந்தே மாதரம்


கல்யாணராமன்
அக் 06, 2024 16:40

ஜெய்சங்கரின் பதில் இது நவராத்திரி காலம் என்று நினைக்கிறேன், நான் விரதம் இருக்கிறேன் என்று சொல்லியுள்ளார். நினைக்கிறேன் என்ற வார்த்தையை சொல்லியிருக்க கூடாது.


V Venkatachalam
அக் 06, 2024 20:11

கல்யாணராமன், பாவம்,கலியானராமன் ஆகிவிட்டார்.. ஜெய்சங்கர் " நினைக்கிறேன்" என்று சொல்லவே இல்லையே.. உ.பி. க்களின் சகவாசம் அதிகமாகி விட்டது போலும்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை