வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சென்னை புறக்கணிக்க படுகிறது...
மொதல்ல தமிழ் திராவிடம் என மிரட்டி சர்வதேச வியாபாரத்தையும் விமான நிறுவனங்களையும் கவர முடியாது. சென்னையின் குறைபாடுகளை களைய தொளபதி என்ன செய்தார்? அவரது தொழில்துறை மந்திரி என்ன செய்கிறார்?
ஹைதராபாத்: தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில் இருந்து கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபபாவிற்கு நேரடி விமான சேவை நேற்று துவக்கப்பட்டது.இதையொட்டி ஹைதராபாத் ராஜிவ் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கியால் எனப்படும் ஜி.எம்.ஆர்., ஹைதராபாத் சர்வதேச விமான நிலைய நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது ஹைதராபாதில் இருந்து எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் விமானம் அடிஸ் அபபாவிற்கு புறப்பட்டுச் சென்றது. இங்கிருந்து செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் அடிஸ் அபபாவிற்கு விமானம் இயக்கப்படும். அதேபோல் அடிஸ் அபபாவில் இருந்து ஹைதராபாதுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் விமானம் இயக்கப்படும். பயண நேரம் 6 மணி 25 நிமிடங்கள். இதன் வாயிலாக ஆப்பிரிக்காவுக்கு தென்னிந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை கிடைக்கிறது என கியால் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப் பணிக்கர் தெரிவித்தார்.
சென்னை புறக்கணிக்க படுகிறது...
மொதல்ல தமிழ் திராவிடம் என மிரட்டி சர்வதேச வியாபாரத்தையும் விமான நிறுவனங்களையும் கவர முடியாது. சென்னையின் குறைபாடுகளை களைய தொளபதி என்ன செய்தார்? அவரது தொழில்துறை மந்திரி என்ன செய்கிறார்?