உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மீண்டும் நேரடி விமான சேவை: இந்தியாவிடம் சீனா வலியுறுத்தல்

மீண்டும் நேரடி விமான சேவை: இந்தியாவிடம் சீனா வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா, சீனா இடையே, நேரடி விமான சேவையை மீண்டும் துவங்குமாறு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ வலியுறுத்தியுள்ளார்.ரியோ டி ஜெனிரோவில் ஜி - 20 உச்சி மாநாட்டுக்கு இடையே இருவரும் சந்தித்ததாக, சீன வெளியுறவுத் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திப்பின்போது, கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நிறுத்தப்பட்டுள்ள நேரடி விமான சேவையை துவங்குமாறு, அவர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இரு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர் பரிமாற்றங்களுக்கான ஒத்துழைப்பை மேம்படுத்தவும்; விசா நடைமுறைகளை எளிதாக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கொரோனா தொற்று மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு மோதல் காரணமாக, கடந்த 2020ம் ஆண்டு, இரு நாடுகளுக்கு இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது.எல்லை பிரச்னையால், இரு தரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ராணுவ படை விலக்கல் நடவடிக்கைகள் காரணமாக, உறவில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.

நேரமும், செலவும் குறையும்

நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், இரு நாடுகளுக்கு இடையேயான பயண நேரமும், பயண செலவும் பெருமளவு அதிகரித்துள்ளது. உதாரணமாக, நேரடி சேவை நிறுத்தப்படுவதற்கு முன், கடந்த 2019ல் டில்லியிலிருந்து, பெய்ஜிங்கிற்கு செல்ல 42,000 ரூபாய் ஆகும். 6 மணி நேரத்துக்குள் சென்று விட முடியும். ஆனால் தற்போது, இதற்கான செலவு ஒரு லட்சம் ரூபாய்க்கும் கூடுதலாகிறது. பயண நேரம் 10.30 மணி நேரத்துக்கும் மேலாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kamaraj
நவ 26, 2024 16:18

???


KavikumarRam
நவ 20, 2024 11:13

இவன் என்ன நம்மள வலியுறுத்துறது??? அவன் தலை மேலயே நச்ச்சுன்னு ஆரம்பத்துலயே மிதிச்சு விட்டிரனும். சைனாக்காரன் பொருளாதாரம் அதலபாதாளத்துல போய்க்கிட்டு இருக்கு. பிறநாடுகளுக்கு கடன் குடுத்து அபகரிக்க பாத்தானுங்க. அது இப்போ அவனுங்களுக்கே ஆப்பு விழுந்துக்கிட்டு இருக்கு. சர்வாதிகார ஆட்சிங்கிறதால ஒட்டு போட்டு மூடி மறைச்சிக்கிட்டு இருக்கானுங்க. ஒன்றிரண்டு வருடங்களில் சைனா வெடிக்கப் போகுது. அதனால தான் நம்மகிட்ட வியாபாரம், கல்வான்ல இருந்து பின்வாங்குறதுன்னு நடிச்சிக்கிட்டு இருக்கானுங்க. எல்லாம் இந்திய சந்தையை பிடிக்கத்தான். நம் அதிர்ஷ்டம் மோடி மற்றும் ஜெயசங்கர் கொரோனா காலத்தில் நம் தேசத்தை ஆண்டது. இல்லேன்னா இந்த சைனா, அமேரிக்கா ரெண்டு கயவாளிகளும் மற்றும் நம் உள்நாட்டு தேசவிரோத அரசியல் சக்திகளும் சேர்ந்து நம் தேசத்தை நாசமாக்கியிருப்பார்கள்.


KavikumarRam
நவ 20, 2024 11:02

இந்த சைனாகாரனை என்னிக்குமே நம்பக்கூடாது. இவனுகளோட சகவாசத்தை எப்பவுமே ஒரு பத்து கிலோமீட்டர் தள்ளியே வைக்கணும்.


veeramani
நவ 20, 2024 09:15

ஒரு முத்த இந்தியக் குடிமகனின் வேண்டுகோள்.. 1964களில் இந்தியாவை நம்ப வைத்து கழுத்தை அறுத்தது. அதில் நமக்கு தோல்விதான். பின்னர் இந்திய ஜென்ம எதிரி பாகிஸ்தானுடன் அருமையான உறவு வைத்து பணஉதவிசெய்து எல்லைதாண்டிய தீவிரவாதத்தை தூண்டுகிறது. மேலும் இன்றைய ஐ டி சகாப்தத்தில் பல மோசன்களை செய்துள்ளது. இந்திய மின்சார பவர் கிரிட் ஹாக் செய்தது கள்வன் பள்ளத்தாக்கில் இந்திய சகோதர்கள் ஜவான்களிடம் சண்டையிட்டது . மேலும் தற்போது இந்திய பெரும் கடலை ஆட்சி செய்யும் எண்ணத்தில் உள்ளது. சீனா என்றைக்கும் நம்பிக்கை வைக்க முடியாத நாட்டினர். என்று வேண்டுமானாலும் முதுகில் குத்தும். இவர்களது நட்பே வேண்டாம் . நேரடி விமான தொடர்பினால் பல மோசமான விளைவுகள் வரலாம்


புதிய வீடியோ