உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காசோலை மோசடி வழக்கு இயக்குனருக்கு 3 மாதம் சிறை

காசோலை மோசடி வழக்கு இயக்குனருக்கு 3 மாதம் சிறை

மும்பை, பணமின்றி காசோலை திரும்பிய வழக்கில், பிரபல சினிமா இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு மூன்று மாத சிறை தண்டனை விதித்து மும்பை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.பிரபல ஹிந்தி, தெலுங்கு சினிமா இயக்குனர் ராம்கோபால் வர்மா. சத்யா, சர்கார், கம்பெனி உள்ளிட்ட படங்கள் வாயிலாக பிரபலமானவர். தமிழில், திருடா திருடா என்ற படத்துக்கு கதை எழுதிஉள்ளார். இவர், மகேஷ் சந்திர மிஸ்ரா என்பவருக்கு, 2018ல் வழங்கிய காசோலை போதுமான பணமின்றி திரும்பியது. இதை தொடர்ந்து, ராம்கோபால் வர்மா மீது மும்பை அந்தேரி கோர்ட்டில் காசோலை மோசடி வழக்கை மிஸ்ரா தொடர்ந்தார்.இந்த வழக்கில் ராம்கோபால் வர்மா குற்றவாளி என, 2022 ஜூனில் கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அவர் ஜாமினில் வெளிவந்தார். இந்நிலையில், கடந்த 21ல் இந்த வழக்கில் தீர்ப்பளிக்க கோர்ட் முடிவு செய்தது. அப்போது, ராம்கோபால் வர்மா ஆஜராகவில்லை. இதைஅடுத்து, கோர்ட் அவருக்கு ஜாமினில் வெளிவரமுடியாத வாரன்ட் பிறப்பித்தது.நீதிபதி நேற்று அளித்த தீர்ப்பில், ராம்கோபால் வர்மாவுக்கு மூன்று மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், வழக்கு தொடர்ந்த மிஸ்ராவுக்கு 3.75 லட்சம் ரூபாயை நிவாரணமாக வழங்கவும் உத்தரவிட்டார். அபராதம் செலுத்த தவறினால், வர்மா மேலும் மூன்று மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை