உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஜனநாயகத்துக்கு எதிரானது: சுப்ரீம் கோர்ட்டில் திமுக மனு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஜனநாயகத்துக்கு எதிரானது: சுப்ரீம் கோர்ட்டில் திமுக மனு

புதுடில்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. இந்தப் பணி ஜனநாயகத்துக்கு எதிரானது என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, நாளை முதல் ஒரு மாதம் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qemd9nwc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு, தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட தே.ஜ., கூட்டணி கட்சிகள் வரவேற்றுள்ளன. இச்சூழலில், சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வது என தீர்மானனம் நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில் திமுக அமைப்புச்செயலாளர் ஆர்எஸ் பாரதி சார்பில் என்.ஆர்.இளங்கோ சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கொண்டு வருவது வாக்காளர்களை நீக்கும் தந்திரம். பீஹாரில் நடந்த இப்பணிக்கு எதிரான வழக்கில் இறுதி உத்தரவு இன்னும் பிறப்பிக்கவில்லை. இச்சூழலில் தமிழகத்தில் இதனை செய்வது ஜனநாயகத்துக்கு எதிரானது.தமிழகத்தில் தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையில் இப்பணியை ஏற்க முடியாது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் காலகட்டத்தில் பண்டிகைகள் வருவதால் வாக்காளர் பட்டியலில் சேர விரும்பும் வாக்காளர்களின் பெயர் விடுபட நேரிடும்.வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழக மக்களின் ஓட்டுரிமைக்கு எதிரான செயல். இதற்கு தடை அல்லது நடவடிக்கை கைவிட வேண்டும். இவ்வறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு வரும் 6 அல்லது 7ல் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக திமுக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

Krishna
நவ 04, 2025 07:57

All Citizen Services incl NonFreeby Ration Voting Health etc Must be Given Only to Genuine Citizens AS Determined by NRC. Remove All Citizen Services to Billions of ForeignInfiltrators Regularised With ModiMental Aadhar by TraitorParties& Officials


Delhi Balaraman
நவ 04, 2025 07:09

ஒன்றிய மைனாரிட்டி அரசு எதையும் சீர்தூக்கிப் பார்த்து மனித உரிமை மற்றும் நலன் பாதிப்படையாமல் செய்வதில்லை கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒரு சதம் கூட நிறைவேற்றாமல் மக்களின் வரிப் பணம்,பொது சொத்துக்கள் பொதுத்துறை நிறுவனங்கள் இவைகளை இரு தனி நபருக்கு தாரை வார்ப்பதில் முழுநேர ஊழியராக பணியாற்றுகிறது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அனைத்து வகையிலும் எதிர்க்கட்சிகளின் குரல்வளை நசுக்க படுகிறது


Thravisham
நவ 04, 2025 08:24

யோவ் ஒன்னோட நேத்து 200ரூவா வந்துச்சா?


c.mohanraj raj
நவ 04, 2025 08:45

ஐயாவிற்கு இங்கு தங்க பிடிக்கவில்லை என்றால் பாலாறு ஓடும் பாகிஸ்தானில் போய் தங்கிக் கொள்ளலாம்


vadivelu
நவ 04, 2025 09:13

240 எம் பி க்கள், கூட கூட்டணி கட்சிகளின் எம் பி க்கள் சேர்த்து 293 நபர்களை வைத்துள்ள ஆட்சி மைனாரிட்டி என்றால் 99 வைத்து மீதி நூறு கட்சஜிகளின் ஒவ்வொருவரையும் சேர்த்து ஆட்சி அமைத்தால் அதற்க்கு என்ன பெயர் மைனாரிட்டியின் மைனாரிட்டி என்றா.


Naga Subramanian
நவ 04, 2025 06:51

மத்திய அரசு நல்முயற்சியாக ஏதாவது நடவடிக்கை எடுக்க முற்படுவதும், அதைஎதிர்த்து திமுக வழக்கு போடுவதும், பிறகு சட்ட மன்றங்கள் பணத்திற்கு அடிமையாவதையும் பார்த்து பார்த்து சலித்து விட்டது.


Gajageswari
நவ 04, 2025 05:35

மத்திய அரசு எதை செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்ற நடைமுறை அரசியல்


Kasimani Baskaran
நவ 04, 2025 04:15

தேர்தலை மூன்று மாதம் தள்ளி வைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி தேர்தல் நடத்தலாம். தேர்தல் பணியில் முழுவதும் இராணுவத்தை பயன்படுத்தி மோசடி செய்யும் கட்சியினர்களை சுட்டுப்பிடிக்கலாம் அல்லது ஆறு மாதம் தமிழகம் பக்கம் வரவிடாமல் தடுக்கலாம்.


Ramesh Sargam
நவ 04, 2025 00:16

கருணாநிதி தமிழகத்தின் முதல்வராக இருந்தபோதே இந்த தீவிர திருத்தம் முறை மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ஒன்று. அன்று அவரே அதை எதிர்க்கவில்லை. இன்று என்னமோ அவர் மகன் ஸ்டாலின், ஏன் இந்த திருத்த முறையை தீவிரமாக எதிர்க்கிறார்? காரணம் தெரிந்தவர்கள் கூறுங்கள் ப்ளீஸ்.


sankar
நவ 03, 2025 23:28

நோ use


Kalyan Singapore
நவ 03, 2025 22:40

எனக்கு வந்தா ரத்தம் உனக்கு வந்தா தக்காளிச்சட்னி நான் ஜெயிச்சா தேர்தல் கமிஷன் மற்றும் EVM தங்கம். நீ ஜெயிச்சா அது ஜனநாயக விரோதி


Raja
நவ 03, 2025 22:20

திமுகவே ஜனநாயக விரோத கட்சி தான், தடை செய்யப்பட வேண்டும். மன்னராட்சி கோமாளித்தனத்தை செயல்படுத்தும் கட்சி


Mohanakrishnan
நவ 03, 2025 21:36

மூக்கும் முட்டிகளும் உடைவது நிச்சயம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை