உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆசிரியர்களுக்கு சம்பளம் தர பணமில்லை; டில்லியில் முதல்வர் ஸ்டாலின் திடுக்

ஆசிரியர்களுக்கு சம்பளம் தர பணமில்லை; டில்லியில் முதல்வர் ஸ்டாலின் திடுக்

புதுடில்லி: 'கல்விக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காததால், ஆசிரியர்களுக்கு சம்பளம் தர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது' என்று, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.டில்லியில் 45 நிமிடங்களாக பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பின், தமிழ்நாடு இல்லத்தில் நிருபர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: இனிய சந்திப்பை மகிழ்ச்சியான சந்திப்பாக மாற்றுவது பிரதமர் மோடியின் கையில் தான் உள்ளது. 3 முக்கிய கோரிக்கைகளை பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தி உள்ளேன். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கும் படி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தேன். மத்திய அரசு நிதி தராததால் மெட்ரோ பயணிகள் தொய்வு ஏற்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும் .

மும்மொழி கொள்கை

தேசிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்கவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இடப்படாததை காரணம் காட்டி மத்திய அரசு நிதியை விடுவிக்கவில்லை. இதனால் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் மாணவர்களுக்கு கல்வி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளோம். உடனடியாக நிதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி உள்ளேன். மீனவர் விவகாரத்தை இலங்கையின் புதிய அதிபரிடம் தெரிவிக்க பிரதமரிடம் கோரியுள்ளேன்.

கச்சத்தீவு

இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்கள், 191 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன். வழக்கமாக 15 நிமிடங்கள் தான் நேரம் அளிக்கப்படும். இந்த முறை 45 நிமிடங்கள் பிரதமரிடம் பேசினேன். நான் ஒரு முதல்வராக சந்தித்தேன், அவர் ஒரு பிரதமராக கோரிக்கைகளை கேட்டுக் கொண்டார். துணிச்சலுடன் போராடி இருக்கிறார் செந்தில் பாலாஜி. விரைவில் நிரபராதி என நிரூபிப்பார். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 125 )

Venkateswaran Rajaram
அக் 27, 2024 17:57

மக்கள் வரிப்பணத்தை வச்சி உன் அப்பனுக்கு சமாதி கட்டு ,புதுமை பெண் ,மகளிர் ஓசி பஸ் சொல்லி ஓட்டுக்கு மறைமுகமா மாதம் மாதம் 1000 லஞ்சம் கொடுத்து அடிமைப்பெண் ஆக்கிட்டே ..டாஸ்மாக் கொள்ளை அடிக்கிறத வீட்டுக்கு கொண்டுபோயிர்றே அப்புறம் சம்பளம் கொடுக்க பணம் இல்லேன்னு பரிசுத்தமான பிரதமர்ட போய் அப்புராணி மாதிரி கேளு


M Ramachandran
அக் 24, 2024 20:49

கொள்ளை அடித்து ரெயிடில் சிக்கு கிறார்களெ அவர்கள் அவர்களிடம் வசூலை செய்வது தானே. வீணா பழி போடுவானேன்.


Priyan Vadanad
அக் 22, 2024 01:13

ஆசிரியர் பணியிடங்களுக்கு வெறும் 12000 சம்பளத்தில் ஆசிரியர்களை போட்டுவிட்டு/போட்ட மாதிரி காட்டிவிட்டு எல்லா பணியிடங்களையும் நிரப்பிவிட்டோம் என்று மார்தட்டி கொள்ளும் இந்த அரசு நீநீநீடூழி வாவாவாழ்க.


Srinivasan Krishnamoorthi
அக் 18, 2024 18:06

கலைஞர் டிவி சொத்துக்களை நாட்டுடைமை ஆக்கினாலே போதுமே கடந்த ஆண்டுகள் கடன் அடையும் அடுத்த மூன்றாண்டுகள் வரிச்சுமை இல்லாமலே அரசு இயங்கும்.


Mahalingam Laxman
அக் 17, 2024 12:26

1.This is provoking teaching community and public against Central Government 2. When they have funds to pay ministers and MLAs why not, who claims they are for people, do not receive salary and ask them to pay to teachers. 3. When they pay for all free bites why not for teachers. 4. When they spent huge amount on car one race and other activities why not pay salary to teachers. 5.When other states accepted the govt conditions why not TN accept and receive funds. 6. The funds not released by Central is not meant for paying salary to teachers. 7. it is clear TN putting up drama to defame central government.


Thanjavur K. Mani
அக் 10, 2024 08:34

இத்தனை மாதங்களாக சம்பளம் கொடுத்த அரசு, இப்பொழுது திடீரென்று ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என்று சொல்லுவதின் நோக்கம் ஒன்றும் புரியவில்லை. விவரம் கொடுத்தால் நன்றாக இருக்கும் .


Kavan Hospital
அக் 07, 2024 18:45

எல்லாம் பிரீ எப்படி காசு கொடுப்ப டீச்சருக்கு, எவெரிதீங்க WASTE சிஎப் மினிஸ்டர் அண்ட் எக்ஸ்ட்ரா மினிஸ்டர்ஸ் வாஸ்டெர் அண்ட் சோ WASTE


karthik
அக் 04, 2024 08:58

ஓட்டுக்காக ஓசி மாதம் மாதம் ஓசி குடுக்கும் காசு 12 ஆயிரம் கோடி ருபாய்.. அதை ஆசிரியர் சம்பளம் குடுங்க


Suppan
அக் 03, 2024 15:41

பி எம் ஸ்ரீ பள்ளிகள் புதிய கல்வித்திட்டத்தை பின்பற்றவேண்டும். அதற்குத் தேவையான கட்டுமானங்கள், கல்விக்குத் தேவையான உபகரணங்கள் போன்றவைகளுக்காக மத்திய அரசு பணம் கொடுக்கும். நாடு முழுவதும் 14500 மாதிரிப்பள்ளிகளை அமைக்கத்திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு எவ்வளவு? தமிழகத்தில் சுமார் 37000 அரசுப்பள்ளிகளும் 8500 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. ஆசிரியர்களின் சம்பளம் மாநில அரசின் பொறுப்பு. புதிய கல்வித்திட்டத்தை ஏற்க மாட்டோம் ஆனால் எங்களுக்குப்பணம் வேண்டும் என்றால் யாரய்யா ஒப்புக்கொள்வார்கள்? ஊரை ஏமாற்றுகிறர் விடியல்.


M Ramachandran
அக் 03, 2024 10:35

கருணாநிதி வசனம் எழுதி அவரை முன்னிறுத்திய பராசக்தி திரை பட பாடல் CS. ஜெயராமன் அவர்கள் பாட்டியா கொள்ளையாடித்து பணத்தை குவிக்கிறவனை பார்த்து மக்கள் வள்ளல் என்றே கூறுவார்கள்